பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு முடிதிருத்தும் அரசு ஊழியர்: மரித்துப்போகாத மனிதநேயம்

Added : செப் 10, 2014 | கருத்துகள் (9)
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் பறக்கும் வாகனங்களுக்கு மத்தியில், கேட்பாரற்று கிடந்த முதியவருக்கு, ஆதரவுக்கரம் நீட்டிய அரசு ஊழியரை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.அவிநாசி - மங்கலம் ரோடு வழியாக, ஆறு வழிச்சாலை (பைபாஸ் ரோடு) ஓரத்தில், முகத்தையும், கண்களையும் மறைத்த வண்ணம், முடியோடு ஒரு முதியவர், கடந்த சில நாட்களாக தஞ்சம் புகுந்துள்ளார். அவரை பார்த்தும்,
ஆதரவற்றோருக்கு முடிதிருத்தும் அரசு ஊழியர்: மரித்துப்போகாத மனிதநேயம்

அவிநாசி : அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் பறக்கும் வாகனங்களுக்கு மத்தியில், கேட்பாரற்று கிடந்த முதியவருக்கு, ஆதரவுக்கரம் நீட்டிய அரசு ஊழியரை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

அவிநாசி - மங்கலம் ரோடு வழியாக, ஆறு வழிச்சாலை (பைபாஸ் ரோடு) ஓரத்தில், முகத்தையும், கண்களையும் மறைத்த வண்ணம், முடியோடு ஒரு முதியவர், கடந்த சில நாட்களாக தஞ்சம் புகுந்துள்ளார். அவரை பார்த்தும், பார்க்காத மாதிரி பலரும் சென்று கொண்டிருந்தபோது, மனிதநேயமிக்க ஒருவர், பெரியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து, தலைமுடியை திருத்தம் செய்து, முகத்துக்கு ஷேவிங் செய்து, புத்துணர்ச்சி ஊட்டினார்.பெரியவருக்கு முடி திருத்தம் செய்த அவரது பெயர் ராமசாமி என்பதும், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இடைநிலை கட்டளைதாரராக பணியாற்றும் அரசு ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதையறிந்த பொதுமக்கள், ராமசாமியின் மனித நேயமிக்க சேவையை பாராட்டிச் சென்றனர்.

ராமசாமி கூறுகையில், ''திருப்பூருக்கு வேலைக்கு (கோர்ட்) செல்லும்போது, சாலை யின் இருபுறமும் உள்ள ஆதரவற்றோரை கவனிப்பேன். விடுமுறை நாட்களில், அந்நபர்களை தேடிப்பிடித்து, முடிதிருத்தம், முக சவரம் செய்து விடுவேன். தேவைக்கேற்ற உணவு வாங்கிக் கொடுப்பேன். ஏதோ, என்னால் முடிந்த உதவியை மனதார செய்து வருகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Singapore,சிங்கப்பூர்
12-நவ-201415:18:44 IST Report Abuse
Rajesh தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...இப்படி சில பேர்கள் செய்வதை படிக்கிறேன்.. வாழ்த்துகின்றேன்..என்னால் இதுபோல ஏன் செய்யமுடியவில்லை என்று யோசிக்கையில் நான் மனிதநேயம் இருப்பவன் போல நடிகின்றோனோ என்று தோன்றுகின்றது...
Rate this:
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-செப்-201410:49:08 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. மனிதம் இன்னமும் சாகவில்லை, இவர்களால் தான் வாழ்கிறது, திரு ராமசாமி அவர்களுக்கு நன்றிகள்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-செப்-201402:26:12 IST Report Abuse
தமிழ்வேல் நல் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X