ஓயாம நடக்குது உள்ளடி... ஓட்டு கிடைக்குமா உள்ளபடி?

Added : செப் 10, 2014
Advertisement
ஓயாம நடக்குது உள்ளடி... ஓட்டு கிடைக்குமா உள்ளபடி?

நவஇந்தியா சிக்னலில், பச்சை விளக்கு விழுந்ததும், வாகனங்கள் சீறிக்கொண்டு கிளம்ப, நிதானமாக தனது வண்டியை முறுக்கினாள் மித்ரா. கடப்பதற்குள், மற்றொரு பகுதியிலிருந்து சிக்னலை மதிக்காமல், வெளிநாட்டு வாகனம் புயல் வேகத்தில் 'ராங் ரூட்'டில் பறந்து வர, 'ஏய்! வண்டியை ஓரம் கட்டுடி' என்று பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா பதற, ஓரமாய் நிறுத்திய மித்ரா, 'அக்கா! வண்டியில போறது எந்த மினிஸ்டர்ன்னு தெரியுதா?' என்று கேட்டாள்.
''ஓ! நல்லாத் தெரியுதே. ஏன் ஒரு நிமிஷம் நின்னு போனா, இவுங்க கவுரவம் போயிருமா? இல்லேன்னா, ஒரு லட்சம் ஓட்டு போயிருமா?,'' என்று கொதித்தாள் சித்ரா.
''இவுங்க சிக்னலை மதிக்காம வர்றதோட நிக்காம, மினிஸ்டர் வண்டிக்கு வழி விடலைன்னு பின்னால வர்ற 'எஸ்கார்ட்' போலீஸ்காரங்க, மக்களை வேற திட்றாங்க. இதெல்லாம் நல்லதாத் தெரியலை,'' என்றாள் மித்ரா.
''சரி...! நீ வண்டியை விடு,'' என்று சித்ரா சொல்ல, 'சிக்னலை மட்டுமில்லை; யாரையுமே மதிக்காம இருந்த ஒருத்தரு, இப்போ எங்க இருக்கார்னே தெரியலையே!,' என்று பேசிக்கொண்டே வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.
''அவரு இருக்கிற இடம் தெரியாமப் போகலாம்; ஆனா, மேயர் எலக்ஷன்ல அவரு செய்யுற உள்ளடி வேலையெல்லாம் வெளிய தெரியாமப் போயிருமா?'' என்றாள் சித்ரா.
''அய்யய்யோ! அப்பிடி என்னக்கா பண்றாரு?,''
''தன்னோட ஆதரவு கவுன்சிலர்களையும், கட்சி நிர்வாகிகளையும் கூப்பிட்டு, 'நீங்க பிரசாரத்துக்குப் போங்க; பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க. ஆனா, ஜெயிக்க விட்றாதீங்க; அந்தாளு தோத்தாத்தான், இந்த ஏரியாவுல 'நமக்கு என்ன வெயிட் இருக்கு'ன்னு கட்சித் தலைமைக்குத் தெரியும்; அதுக்கும் மேல ஜெயிச்சாலும், கொஞ்ச ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கிற மாதிரிதான் இருக்கணும். அதுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க'ன்னு சொல்லிருக்காராம்,''
''எனக்கு ஒரு விஷயம் காதுல விழுந்துச்சு; தேர்தலுக்குப் பொறுப்பா வந்திருக்கிற 'சீனியர் மினிஸ்டர்' ஒருத்தரு, வடவள்ளியில ஒரு 'பிளாட்'ல தங்குறதா ஏற்பாடு ஆயிருந்துச்சாம்; அங்க போய், அவரைப் பார்க்க, 'பதவி பறி போனவரு' முயற்சி பண்ணிருக்காரு; அது தெரிஞ்சு, அந்த அமைச்சர் 'கும்பிடு' போட்டு வேற இடத்துக்குப் போயிட்டாராம்; அமைச்சர்கள் அவரைப் பார்க்கவே பயப்படுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''பி.ஜே.பி., மேட்டர் ஏதும் கேள்விப்பட்டியா?,'' என்றாள் சித்ரா.
''நம்ம சி.எம்.,பதினைஞ்சாம் தேதி வந்து போன மறுநாள், பிரைம் மினிஸ்டர் மோடி வர்றதா சொல்றாங்க; இந்த இடைத்தேர்தலுக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்கன்னு
ஏ.டி.எம்.கே., காரங்க கொஞ்சம் ஆடித்தான் போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''நான் கேட்டது அதில்லடி! சி.பி.ஆரை பிரசாரத்துக்குப் போய் கூப்பிட்டாங்களாம்; கவுண்டம்பாளையம் தொகுதியில, ஓட்டு குறைஞ்சு, நான் 42 ஆயிரம் ஓட்டுல தோத்ததுக்கே அந்தாளு பண்ணுன வேலைதான் காரணம்; அவருக்கு என்னைய பிரசாரம் பண்ணக் கூப்பிடுறீங்களே? என்ன நியாயம்னு கேட்டாராம்,''
''அவரோட வேதனை அவருக்கு; இந்நேரம் ஜெயிச்சிருந்தா, அவரும் ஒரு மினிஸ்டரா இருந்திருப்பாரு; கோயம்புத்தூருக்கும் ஏதாவது வேலை நடந்திருக்கும். இது அவரோட விதியில்லை; நம்ம ஊரோட சாபக்கேடு,''
''சரி! பிரதமர், சி.எம்., எல்லாரும் வர்றாங்க; அவுங்க கட்சி வேட்பாளர் ஜெயிச்ச பிறகு, ஏதாவது நம்ம ஊருக்கு நல்லது செய்வாங்களா?,'' என்றாள் சித்ரா.
''அதுதான் தெரியலை; 'சென்னைக்கு ரெண்டாவது மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தரணும்'னு வெங்கையா நாயுடுகிட்ட கேட்ருக்காங்க; ஆனா, போன பீரியட்லயே, சென்ட்ரல் கவர்மென்ட் தேர்ந்தெடுத்த கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 'ஊஞுச்ண்டிஞடிடூடிtதூ குtதஞீதூ' பண்றதுக்குக் கூட, நிதி கேக்கலையே. அப்படின்னா, இந்த 2,378 கோடி ரூபாய்க்கு திட்டம் அறிவிச்சதெல்லாம் சும்மாவா'ன்னு ம.தி.மு.க.,காரங்க கேட்ருக்காங்க?,'' என்றாள் மித்ரா.
''ரொம்பவே நியாயமான கேள்வி தான்; ஆனா, இந்த 2,378 கோடி ரூபா திட்டத்தை அறிவிச்சது, ஆளும்கட்சிக்கு கொஞ்சம் சாதகமாத்தான் தெரியுது,''
''அப்ப நிஜமாவே வேலை நடக்கும்னு நம்புறியா?,''
''நான் நம்புறதை விடு...இண்டஸ்ட்ரிகாரங்க நம்புறா மாதிரித்தான் தெரியுது; மதுரையில, முல்லைப் பெரியாறுக்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துனது மாதிரி, கோவைக்கு இவ்ளோ திட்டங்களை அறிவிச்சதுக்காக, ஒரு பாராட்டு விழாவை நடத்துறதுக்கு யோசனை பண்றாங்களாம்; அதுக்கான வேலைகள்ல இளம் தொழிலதிபர்கள் சில பேரு இறங்கிருக்காங்க என்றாள் சித்ரா.
''அப்படியாவது, முதல்வரைச் சந்திச்சு, அவுங்களோட கோரிக்கைகளைப் பேசிடலாம்னு நினைக்கிறாங்களோ? இந்த கவர்மென்ட்ல இப்பிடி செஞ்சாத்தான் வேலை ஆகும்னு முடிவு பண்ணிட்டாங்களோ?,'' என்றாள் மித்ரா.
''சி.பி.எம்., பிரசாரம், எடுத்த எடுப்புலயே படு சூடா இருக்காமே?,'' என்று கட்சி தாவினாள் சித்ரா.
''ஆமாக்கா! அவுங்க கேக்குற கேள்விக்கு, ஆளும்கட்சி பதில் சொல்றது கொஞ்சம் கஷ்டம் தான்; நம்ம கேக்க வேண்டியதை அவுங்க கேக்குறாங்களேன்னு, மக்கள் சந்தோஷப்படுறாங்க; ஆனா, ஓட்டுப் போடுவாங்களாங்கிறது சந்தேகம் தான்,''
''விழுகுற ஓட்டுதான் விழும்கிறது காம்ரேட்களுக்கும் தெரியும்; ஆனாலும், தைரியமா, எலக்ஷன்ல நின்னு, கேள்வி கேக்குறாங்களே; ஆனா, டி.எம்.கே., ஒதுங்குனது, அந்தக் கட்சி மேல மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் காலி பண்ணிருச்சே!,''
''அரசியலை விடுக்கா...போரடிக்குது! வேற எதாச்சும் மேட்டர் இல்லியா?,'' என்று அலுப்போடு கேட்டாள் மித்ரா.
''நம்ம ஊர்ல எதை எடுத்தாலும், அது அரசியல்லதான போய் முடியும்; நம்ம ஜி.எச்.,ல இப்போ மார்ச்சுவரி இருக்கிற இடத்துலயே, ரெண்டு மூணு மாடியா நல்லாவே புது மார்ச்சுவரி கட்டலாம்; எல்லாருக்கும் வந்து போறது, 'ஆணிஞீதூ' ய எடுத்துட்டுப் போறது ஈஸியா இருக்கும்; ஆனா, கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் மெயின் என்ட்ரன்ஸ்க்கு எதிர்ல வர்றது மாதிரி கட்டப்போறாங்களாம்,''
''அச்சச்சோ! அந்த பிரச்னை இன்னும்முடிஞ்சபாடில்லையா?,''
''எப்பிடி முடியும்? இப்ப இருக்கிற மார்ச்சுவரியை அங்க இருந்து எடுக்கணும்னு உத்தரவு போட்டதே, 'பதவி பறி போனவர்'தான்; அவருக்கு வேண்டப்பட்டவர் ஒருத்தரு, மார்ச்சுவரி பக்கத்தால இருக்கிற ஒரு ஓட்டலை எடுத்து நடத்துறாரு; இது இருந்தா அது ஓடாதுன்னு தான், 'பதவி பறி போனவர புடிச்சு, மார்ச்சுவரியை வேற இடத்துக்குக் கொண்டு போக வச்சிருக்காரு; முதல்ல அதுக்கு ஒத்துக்கலைன்னு தான், முந்துன 'டீன்' மேடத்தை தாறுமாறா கெட்ட வார்த்தையில நம்ம பழைய வி.ஐ.பி., திட்டி, அவுங்க அழுது...ஏகப்பட்ட சர்ச்சையாச்சே,'' என்றாள் சித்ரா.
''அவரோட பவரைத்தான் பிடுங்கிட்டாங்களே. அப்புறம் ஏன், அவர் சொன்ன இடத்துல அதைக் கட்டணும்; இப்போ அவுங்க கட்டுற இடத்துக்கு எதிர்ல கட்டுனா, காலேஜ் புள்ளைங்க மட்டுமில்லாம, எதிர்ல இருக்கிற 'கேர்ள்ஸ் ஸ்கூல்'கள்ல படிக்கிற அஞ்சாயிரம் பொண் குழந்தைங்களும் பாதிக்கப்படுமே; இங்கதான், இத்தனை மினிஸ்டர் இருக்காங்களே. இதை சி.எம்.ட்ட சொல்லி, இடத்தை மாத்த ஏற்பாடு பண்ண மாட்டாங்களா?,'' என்றாள் மித்ரா.
''நீ வேற! ஆளுக்கு ஆளு 6 வார்டுகளைப் பாக்கிறதுக்கே நேரம் பத்தலைன்னு சொல்றாங்களாம்; கடைசி நேரத்துல, ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபா வரைக்கும் பட்டுவாடா ஆகும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அக்கா! ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்; ஒரு எஸ்.எஸ்.ஐ.,யைப் பாத்து, காலேஜ் பசங்க பயந்து நடுங்குறாங்க...!,'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்குள், 'ஏன்டி! சேட்டை பண்றவுங்களை பின்னி எடுக்கிறாரா?,' என்றாள் சித்ரா.
''அப்பிடி செஞ்சாதான் சந்தோஷப்படலாமே. சின்னியம்பாளையம் ஏரியாவுல, ரோட்ல நின்னு, அந்த வழியா வர்ற காலேஜ் பசங்கள்ட்ட வசூலைப் போடுறாராம்; வண்டியில வர்ற பசங்களை நிறுத்தி, 'மொபைல்ல பேசிட்டே வண்டி ஓட்றியா'ன்னு மெரட்டி, அவுங்க போனைப் பிடுங்குவாராம்; கடைசியா பேசுன நம்பர்க்கு அவரே 'டயல்' பண்ணி, 'நீ பேசிட்டுதான் வந்திருக்க'ன்னு, 1,500 ரூபா 'ஃபைன்' போடுவாராம்; கடைசியில பேரம் பேசி, முன்னூறோ, ஐநூறோ பிடுங்கிட்டு அனுப்புறாராம்,'' என்று மித்ரா சொல்லும்போதே, சித்ராவுக்கு மொபைலில் அழைப்பு வர, 'ஜெயப்பிரகாஷ்! நான் வண்டில போயிட்டு இருக்கேன்; அப்புறமா கூப்பிடுறேன்' என்று 'கட்' செய்தாள்.
''அக்கா! நீ பேசிட்டு இரு. அஞ்சே நிமிஷத்துல, ஒரு கூரியர் அனுப்பிட்டு வந்துர்றேன்'' என்று வண்டியை விட்டு இறங்கி, ஓடினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X