தமிழ்நாடு

மின் அழுத்தத்தை கட்டுப்படுத்த 100 புதிய டிரான்ஸ்பார்மர்கள்

Added : செப் 15, 2014 | கருத்துகள் (1)
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், உயர் மின்அழுத்தத்தை கட்டுப்படுத்த, 100 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.தர்மபுரி நகரில், அடிக்கடி உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு வந்ததால், "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதானது. இரு வாரத்துக்கு முன், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆசிரியர் காலனியில் தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் சரக்கு வாகனம் உரசியதில், உயர் மின்அழுத்தம் ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர் பழுதானது. மேலும், அப்பகுதி வீடுகளில் இருந்த, நூற்றுக்கும் மேற்பட்ட "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்ததால், அவற்றை, சாலைகளில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி நகரில் உயர் மின் அழுத்தத்தை கட்டுப்படுத்த புதிதாக, 100 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக, 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 80 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, உயர் மின் அழுத்தம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும், என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponnuraj Gurusamy - Chennai,இந்தியா
15-செப்-201420:47:39 IST Report Abuse
Ponnuraj Gurusamy அவ்வளவு அதிகமாகவா கரண்ட் வருது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X