இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய நாணயங்கள் வழங்கல்| Dinamalar

தமிழ்நாடு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய நாணயங்கள் வழங்கல்

Added : செப் 15, 2014

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், புதிய சில்லரை நாணயம், 15 லட்ச ரூபாய்க்கும், கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி, புதிய ரூபாய் நோட்டுகளாக, ஆறு லட்சம் ரூபாயும், ஒரே நாளில் வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், வங்கி கிளை மற்றும் சென்னை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து, பொதுமக்களின் வசதிக்காக கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய நாணயம் வழங்கும் முகாமை நடத்தியது. இந்திய ரிசர்வ் வங்கி முதன்மை மேலாளர் கேசவன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அப்போது, கள்ள நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி முதன்மை மேலாளர் கேசவன் நேரடியான செயல்விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகளை, மாற்றி புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரூபாய் நோட்டுகளுக்கு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, நேற்று ஒரே நாளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளாக, ஆறு லட்ச ரூபாயும், 15 லட்ச ரூபாய்க்கு புதிய நாணயங்களும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேலம் மண்டல முதன்மை மேலாளர் சொர்க்கவாசன், கிருஷ்ணகிரி கிளை மேலாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X