தமிழ்நாடு

மாவட்டத்தில் 5 கோடி செங்கல் தேக்கம் : கட்டுமான பணிகள் பாதிப்பு எதிரொலி

Added : செப் 15, 2014
Advertisement

ராமநாதபுரம் : மணல், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் 5 கோடிக்கும் அதிகமான செங்கல்கள் விற்பனை இன்றி தேக்கமடைந்துள்ளன.

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர், காருகுடி, தேர்த்தாங்கல், மும்முடிச்சாத்தான், தியாகவன்சேரி, பாண்டியூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 40 க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல் உள்ளன. இதுதவிர, மஞ்சூர், பாண்டிக்கண்மாய், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சேம்பர்கள் உள்ளன. ஒவ்வொரு சேம்பரிலும் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் 1000 முதல் 3000 கல் வரை அறுக்கின்றனர். இதுகுறித்து, பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த இருளாண்டி கூறியதாவது:

ஆண்டுதோறும் தை மாதம் முதல் புரட்டாசி வரை செங்கல் உற்பத்தி சூடு பிடிக்கும். இந்த காலகட்டத்தில் வீடுகள் மற்றும் கட்டுமான பணிகள் துவங்குவதால் செங்கல் தேவை அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு சூளைகளிலும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் விற்பனையாகும். உற்பத்திக்கு ஏற்றவாறு விற்பனையும் நடப்பதால் தொழிலில் விறுவிறுப்பு காணப்படும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் செங்கல்கள் விற்பனை இன்றி தேக்கமடைந்துள்ளன. 70 க்கும் மேற்பட்ட சூளைகளில் இதே சூழ்நிலை காணப்படுவதால் 5 கோடிக்கும் அதிகமான செங்கல்கள் ஒட்டுமொத்தமாக தேக்கமடைந்துள்ளன. தண்ணீர், மணல் தட்டுப்பாடால் வீடு கட்டும் பணி மற்றும் கட்டுமான பணிகள் சில மாதங்களாக முடங்கியுள்ளன. இதனால், பெரும்பாலான சூளை உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்தும், பணத்தை திரும்ப எடுக்கமுடியாமல் விழிபிதுங்கி உள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X