பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கால்பந்து அணி பயிற்சி முகாம் : திண்டுக்கல் மாவட்ட மாணவி தேர்வு

Added : செப் 15, 2014
Share
Advertisement
திண்டுக்கல் : உலக அளவில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தகுதி சுற்று கால்பந்து போட்டி நவம்பர் மாதம் ஜோர்டான் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் பயிற்சி முகாம் செப்., 19 முதல் நவ., 2 வரை குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து இந்த முகாமில் கலந்துகொள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துசெல்வி, திருவள்ளூர்

திண்டுக்கல் : உலக அளவில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தகுதி சுற்று கால்பந்து போட்டி நவம்பர் மாதம் ஜோர்டான் நாட்டில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் பயிற்சி முகாம் செப்., 19 முதல் நவ., 2 வரை குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இருந்து இந்த முகாமில் கலந்துகொள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துசெல்வி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கீதாஞ்சலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவியான முத்துசெல்வி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி முடித்து, ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நத்தம் என். பி. ஆர்., கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நான்கு ஆண்டுகளாக தமிழக அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய மகளிர் அணி பயிற்சிக்காக செல்லும் இவரை மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன், செயலர் சண்முகம், மகளிர் கால்பந்து பிரிவு கன்வீனர் ஈசாக்கு மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X