பொது செய்தி

இந்தியா

வயதில் சிறுவன்; அறிவில் ஆசான்

Added : செப் 19, 2014 | கருத்துகள் (9)
Share
Advertisement
பாட்னா:பீகார் மாநிலத்தின், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த, 6 வயதுசிறுவன், பிளஸ் 2 விற்க்கான அனைத்து பாடங்களையும் படித்து முடித்து,மற்றவர்களுக்கு வகுப்பு நடத்தும் அளவுக்கு நிபுணனாகி விட்டான்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர், ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான பீகார் மாநிலத்தின், மோதிஹரி பகுதியில் பிரபல டாக்டர் அசோக் ஸ்ரீவத்சவ்வின் பேரன் அனக் அனன்யா;
 வயதில் சிறுவன்; அறிவில் ஆசான்

பாட்னா:பீகார் மாநிலத்தின், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த, 6 வயதுசிறுவன், பிளஸ் 2 விற்க்கான அனைத்து பாடங்களையும் படித்து முடித்து,மற்றவர்களுக்கு வகுப்பு நடத்தும் அளவுக்கு நிபுணனாகி விட்டான்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர், ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான பீகார் மாநிலத்தின், மோதிஹரி பகுதியில் பிரபல டாக்டர் அசோக் ஸ்ரீவத்சவ்வின் பேரன் அனக் அனன்யா; அப்பகுதி யில் உள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தந்தை, அதுல் பிரகாஷ், ஆசிரியராக பணிபுரிகிறார்.பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டான்.பல்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான, பல தகவல்களை, இவனிடமிருந்து அறிந்து கொள்கின்றனர்.
மகனின் அறிவாற்றல் குறித்து, அவனது தாய் பிரீதி ஸ்ரீவத்சவ் கூறியதாவது:இரண்டு வயது நிரம்பியவுடன்கணிதத்தையும், அறிவியலையும் படிக்கத் துவங்கிய அனக், நாளடைவில், அனைத்துபாடங்களையும் கற்கத் துவங்கினான்.மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குபதில் அளித்து, தன் திறமையை வெளிப்படுத்தினான். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட, பிளஸ் 2விற்க்குரிய அனைத்து பாடங்களிலும் தனித்திறமை பெற்றுள்ளான். சமஸ்கிருதபாடங்களை மனப்பாடம் செய்துள்ள அனக், தற்போது, பிரிட்டிஷ் உச்சரிப்பிலான ஆங்கிலத்தை கற்று வருகிறான். இவ்வாறு பிரீதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
19-செப்-201415:45:28 IST Report Abuse
N.Purushothaman வேதங்கள் உபநிஷத்துக்கள் வானசாஸ்திரம் போன்றவற்றை இப்போதே கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டால் மிக சிறந்த மகானாக இவர் உருவெடுப்பார்...
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
19-செப்-201411:16:04 IST Report Abuse
P. SIV GOWRI ஆச்சரியம். வாழ்த்துக்கள். உன்னால் பிற மாணவர்களும் பயன் பெறுகிறார்கள் என்பது இன்னும் சூப்பர்
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
19-செப்-201409:29:58 IST Report Abuse
Rajarajan அடேங்கப்பா வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X