பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் வாசிப்பது, உங்கள் பத்மினி...!

Updated : செப் 23, 2014 | Added : செப் 23, 2014 | கருத்துகள் (28)
Advertisement
செய்திகள் வாசிப்பது, உங்கள் பத்மினி...!

'அர்த்தனாரீஸ்வரரை பயபக்தியோடு வணங்குகிறீர்கள், எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?'என்று ஆரம்பத்திலேயே கேள்விக்கணைகளை வீசத் தொடங்கினார், திருநங்கை பத்மினி. 'எங்களுக்கு தர வேண்டிய அத்தனை மரியாதைகளையம் புறக்கணித்து விட்டு, சிறகுகளை உடைத்து விட்டு, 'எண்' கொண்டு அழைப்பதும், 'அதோ போகுது பாரு' என்று, வார்த்தை ஈட்டிகளில் எங்களை சாய்ப்பதுமாய் இருக்கும் இந்த சமூகத்துக்கு, அப்படி என்ன ஒரு குஷியோ...' என்று ஆதங்கத்துடன், தன் வருத்தத்தை பதிவு செய்தார் பத்மினி.

கோவை மாவட்டத்தில் பிறந்த பத்மினிக்கு, 13 வயது முதல் எந்த ஒரு மாற்றமும் உடலில் தெரியவில்லை. அதன்பிறகு தான், தன்னுள் பெண் தன்மை இருப்பதை உணர்ந்து கொண்டார். வீட்டில் தெரிந்தவுடனே, துவங்கிவிட்டது புறக்கணிப்பு. சமூகத்தின் கேலிப் பார்வை ஏற்படுத்திய பாதிப்பு, 'எப்படியாவது சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற வெறியை, அவருக்குள் ஆலமர விதையாக பதித்து விட்டது.தனித்து விடப்பட்ட சமயத்தில், அவருக்கு உதவும் கரமாக இருந்து வழிகாட்டியவர், சிறு வயது நண்பர் பிரகாஷ். அவரது துணையுடன், தொலைதூரக் கல்வியில், பட்டப்படிப்பில் சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால், இவரால் படிப்பை தொடர முடியவில்லை. இருந்தும், புத்தக வாசிப்பின் மூலம் திறமையை வளர்த்துக் கொண்டார். பரதநாட்டியத்தில் பாதங்களை ஆட விட்டு, வீணையில் விரல்களை பதித்து, திறமைகளை விசாலாமாக்கினார்.இதற்கிடையே, 'உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று பிரகாஷ் தெரிவிக்க, 'எனக்காக வாழ ஒரு உள்ளம் இருக்கிறதே...' என்று எண்ணி, மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.சமூகம், இவர்களை உதாசீனப்படுத்தினாலும், லட்சிய எண்ணத்தை, முயற்சி உரம் கொண்டு வளர்த்த அவர், தற்போது கோவையில் இருந்து செயல்படும், 'லோட்டஸ்' தொலைக்காட்சியில், நட்சத்திர செய்தி வாசிப்பாளர் ஆகியுள்ளார். 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' இப்படியொரு அதிசயம், கோவையில் நிகழ்ந்திருக்கிறது.

தன் அனுபவங்கள் குறித்து, திருநங்கை பத்மினி கூறியதாவது:இதுவரை, 'அரவாணி' என்று அழைத்து வந்த எங்களை, இப்போது தான், 'திருநங்கை' என்று அடையாளப்படுத்தி இருக்கிறது அரசு. ஆணையும், பெண்ணையும் விட, எங்களுக்கு திறமை அதிகம் என்று உறுதியாய் சொல்வேன்.கடந்த 2007ல் விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், 'மிஸ் தமிழ்நாடு' மற்றும், 2009ம் ஆண்டு சென்னையில் நடந்த அழகிப் போட்டியில், 'மிஸ் இந்தியா' பட்டமும் வென்றேன். தனியார் தொலைக்காட்சியில், நடிகை குஷ்பூ நடத்திய நிகழ்ச்சியில், அறிமுக நடனம் என்னுடையது தான்.என் செயல்பாடுகள் அவருக்கு பிடித்திருந்ததால், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான தொடரில் நடிக்க முடிந்தது. பட்டிமன்றம், இலக்கியம், கருத்தரங்களில் பேசியிருக்கிறேன்.பாலியல் சார்ந்து, எங்கள் சமூகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரின் கனிவான அனுசரிப்பு, நடத்தும் விதம் என்னை, மென்மேலும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு, இவர் மாதிரியான ஆட்கள் துணையிருந்தால், நாங்களும், வாழப் பிறந்திருக்கிறோம் என்று, இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லுவோம். ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருப்பது பரம திருப்தி.இவ்வாறு, பத்மினி கூறினார்.

'லோட்டஸ்' தொலைக்காட்சியின் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ''செய்தி வாசிப்பில் இருக்கும் வழக்கமான நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தோன்றியதன் விளைவு, இந்த முயற்சி. துவக்கத்தில் இரண்டு, மூன்று முறை செய்தி வாசிக்க தடுமாறிய இவர், தற்போது மற்றவர்களுக்கு நிகராக வாசித்து வருகிறார். திருநங்கைகளுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது தான், நாங்கள் விடுக்கும் செய்தி,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
24-செப்-201415:43:03 IST Report Abuse
LAX இவரைப் போன்றே மற்ற திருநங்கைகளும் ஏதாவதொரு துறையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறவேண்டும்.. சிலர் தங்களைத் துன்புறுத்துவதாலோ, ஏளனமாகப் பார்ப்பதாலோ, அதையே சாதகமாக்கிக்கொண்டு, பிறரை மிரளவைத்து பிழைப்பை ஓட்டக் கூடாது..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
24-செப்-201415:40:43 IST Report Abuse
LAX சுய திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முத்திரை பதிக்கும் பத்மினிக்கு வாழ்த்துக்கள்.. பத்மினிக்கு ஊக்கமளித்ததோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத்துணையாக்கிக்கொண்ட பிரகாஷ் மற்றும் வாய்ப்பு கொடுத்த நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்../பாராட்டுக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Pamaran A - chennai,இந்தியா
24-செப்-201412:03:22 IST Report Abuse
Pamaran A ரயிலில் மிரட்டி பிச்சை எடுப்பதாலேயே, திருநங்கைகள் மீது வெறுப்பு உண்டாகிறது.ஆனால் உழைப்பால் உயரும் பத்மினி போன்றோரிடம் மதிப்பே உண்டாகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X