பாத்திரக்கடை ஊழியர் சாவில் மர்மம்: உறவினர்கள் புகார்

Added : செப் 23, 2014
Advertisement
கோவை : கோவையில் உயிரிழந்த பாத்திரக்கடை ஊழியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்ததால், பரபரப்பு நிலவியது. கோவை, சிவானந்தாகாலனி, வள்ளூவர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ், ௫௫. இவருக்கு காந்திபுரம், கிராஸ்கட் ரோடு மற்றும் நுாறடி ரோட்டில் பாத்திரக்கடைகள் உள்ளன. கடந்த ௧௮ம் தேதி இரவு, ௫.௯௧ லட்சம் ரூபாயை நுாறடி ரோட்டிலுள்ள கடையில் வைத்துவிட்டு, வியாபார

கோவை : கோவையில் உயிரிழந்த பாத்திரக்கடை ஊழியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்ததால், பரபரப்பு நிலவியது.

கோவை, சிவானந்தாகாலனி, வள்ளூவர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ், ௫௫. இவருக்கு காந்திபுரம், கிராஸ்கட் ரோடு மற்றும் நுாறடி ரோட்டில் பாத்திரக்கடைகள் உள்ளன. கடந்த ௧௮ம் தேதி இரவு, ௫.௯௧ லட்சம் ரூபாயை நுாறடி ரோட்டிலுள்ள கடையில் வைத்துவிட்டு, வியாபார விஷயமாக பெங்களூரு சென்றார். மறுநாள், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் திருடுபோயிருந்தது. ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கடையில் பணியாற்றிய துாத்துக்குடி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வக்குமார், ௩௮, நேற்று முன்தினம், குடோன் கழிவறையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை வந்தபோது, செல்வக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அ

திர்ச்சியடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை வாங்க மறுத்து, நேற்று போராட்டம் நடத்தினர். போலீசாரின் சமாதான பேச்சுக்குப்பின், சடலத்தை பெற்றுச் சென்றனர்.பலியான ஊழியரின் தந்தை கனகராஜ் கூறுகையில், ''எனது மகன் சாவில் மர்மம் உள்ளது. பணம் திருட்டு தொடர்பாக, தன்னை அடித்து துன்புறுத்துவதாக போனில் தெரிவித்தான். நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என்றார். கோவை மாநகர போலீஸ் சட்டம் - ஒழுங்கு துணைக் கமிஷனர் பிரவேஷ்குமார் கூறுகையில், ''சாவில் சந்தேகமிருப்பதாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் முழு விவரமும் தெரியவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X