வருஷநாடு : கடமலை-மயிலை
ஒன்றிய தி.மு.க.,சார்பில் கண்டமனூர், எட்டப்பராஜபுரம், பாலூத்து,
ஆத்தாங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், கடமலைக்குண்டு, மந்திச்சுனை-மூலக்கடை,
முத்தலாம்பாறை,
தங்கம்மாள்புரம், நரியூத்து ஆகிய ஊராட்சிகளுக்கு 23ம் தேதியிலும்,
வருஷநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், முருக்கோடை, மேகமலை, குமணந்தொழு
ஊராட்சிகளுக்கு 24ம் தேதியும், தி.மு.க., ஊராட்சி கழக செயலாளர்களுக்கான உட்
கட்சி தேர்தல் வீரபாண்டியில் நடைபெறுவதாக கட்சியின் மாவட்ட நிர்வாகம்
அறிவித்தது.
இதனை தொடர்ந்து கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் இளம்வழுதிப் பாண்டியன் தலைமையில் கட்சிக் கூட்டம் கடமலைக்குண்டில் நடந்தது. கட்சி
தேர்தல் அந்தந்த கடமலை மயிலை ஒன்றியத்தில் நடத்த வேண்டும். மாவட்ட
செயலாளர் மூக்கையா தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்தும் தீர்மானம்
நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE