பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வு : சென்னையில் புதிய வீடு கட்டும் பணி ஸ்தம்பிப்பு

Added : அக் 17, 2010 | கருத்துகள் (40)
Share
Advertisement
கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால், சென்னையில் கட்டுமானப் பணிகள் ஒரு வாரமாக ஸ்தம்பித்துள்ளது. புதிய வீடுகள், கட்டடங்கள் கட்டிவந்த பொதுமக்கள், கூடுதல் தொகை செலவு செய்து கட்டுமானப் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டினால், ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்படும் உப்பு மணல் (சிலிகான் மணல்)விற்பனையால் பொதுமக்கள் ஏமாறும்
கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வு : சென்னையில் புதிய வீடு கட்டும் பணி ஸ்தம்பிப்பு

கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால், சென்னையில் கட்டுமானப் பணிகள் ஒரு வாரமாக ஸ்தம்பித்துள்ளது. புதிய வீடுகள், கட்டடங்கள் கட்டிவந்த பொதுமக்கள், கூடுதல் தொகை செலவு செய்து கட்டுமானப் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டினால், ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்படும் உப்பு மணல் (சிலிகான் மணல்)விற்பனையால் பொதுமக்கள் ஏமாறும் நிலையும் உள்ளது.


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகளவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு பிரச்னைகளால், சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சிமென்ட், செங்கல், கம்பி, ஜல்லி மற்றும் மணல் விலை அதிரடியாக உயர்ந்துவிட்டது. சென்னைக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதிகளில் பாலாற்று மணல் குவாரிகளிலிருந்து மணல் கொண்டு வரப்படுகிறது. அரசு மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பிலும் தனித் தனியாக அரசிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. "அரசு மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் (2 யூனிட்) வாங்குவதற்கு 626 ரூபாய்க்கு "டிடி' கொடுக்க வேண்டும். ஆனால் "டிடி' எடுத்துக் கொடுத்தால், ஆற்றில் மணல் ஏற்றிவிடும் கான்ட்ராக்டர் அனுமதிப்பதில்லை. அதிகாரிகளும் வருவதில்லை. 900 ரூபாயிலிருந்து 1,100 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு மணல் வழங்கப்படுகிறது. மேலும், கான்ட்ராக்டர்கள் மூலம் முறைகேடாக மணல் கடத்தப்படுவதாகவும், சென்னையில் பல இடங்களில் மணல் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும்' புகார் தெரிவிக்கப்பட்டது.


இப்பிரச்னை குறித்து, உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, கடந்த 1ம் தேதியிலிருந்து பாலாறு மணல் குவாரிகளில் இயந்திரம் மூலம் மணல் எடுப்பதற்கு தடை விதித்தார். இந்நிலையால், குவாரிகளில் ஆட்கள் வைத்து மணல் எடுக்க கூடுதலாக 800 ரூபாய் வரை செலவாகும் என்பதால், மணல் லாரி உரிமையாளர்கள் மணல் வாங்கத் தயங்கினர். ஆட்கள் மூலம் மணல் ஏற்றப்படும் நிலையால், ஒரு லோடு மணலுக்கு லாரிகள் இரண்டரை நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது, டிரைவர் செலவு மற்றும் வாடகை இரு மடங்காவதாலும்,சென்னை நகரில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை பயன்படுத்தி, சென்னை நகரின் முக்கிய இடங்களில் மணல் யார்டுகளில கான்ட்ராக்டர்கள் மூலம் இரண்டாவது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான யூனிட் மணல், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


இந்த யார்டுகளில் பத்து தினங்களுக்கு முன், ஒரு லோடு மணல் லாரி உரிமையாளர்களுக்கு 1,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை, தற்போது 2,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை நகரில் முன்பு மக்களுக்கு 4,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு மணல், தற்போது 6,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணல் விலை உயர்வால், ஆந்திராவிலிருந்து திருட்டுத்தனமாக கொண்டு வரப்படும் சிலிக்கான் மணல் (கண்ணாடி உப்பு உள்ள மணல்) விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த லாரிகளை அரசு தனிப்படை அமைத்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தட்டுப்பாட்டால் மணல் விலை உயர்ந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்படாத நிலையில், கம்பி, சிமென்ட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் 10 மற்றும் 12 எம்.எம்., கம்பிகள், 15 தினங்களுக்கு முன்பு ஒரு டன் விலை 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது 35 ஆயிரத்து 500 ரூபாய் வரை இடத்திற்கு தகுந்தபடி விலை உயர்த்தி விற்கப்படுகிறது.


மூலப்பொருட்கள் விலை உயர்த்தப்படாத நிலையில் சிமென்ட் விலை, 145 ரூபாயிலிருந்து 280 ரூபாய் வரை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன், ஒரு லோடு செங்கல் (3,000 செங்கல்)14 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது 17ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிது. மனையின் கீழ் தளத்தில் நிரப்பும் மண் (தவிட்டு மணல்-3 யூனிட்) பத்து நாட்களுக்கு முன் 3,000 ரூபாய்கு விற்கப்பட்டது. தற்போது 4,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு (2 யூனிட் ) ஜல்லி, தற்போது 5,800 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய் வரை பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்படி கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வினால் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. திட்டமிட்ட செலவை விட, பொருட்கள் விலை உயர்வினால், தற்போது கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்களும் தவியாய் தவித்து வருகின்றன.


                                                                                                                             - நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈஸ்வர் - madurai,இந்தியா
20-அக்-201016:07:06 IST Report Abuse
ஈஸ்வர் இலவசம் இலவசம் ...ஒட்டு போட்டா வீடு இலவசம் ..
Rate this:
Cancel
jalal - chennai,இந்தியா
18-அக்-201015:33:10 IST Report Abuse
jalal கூட்டு கொள்ளை அடிக்கும் தந்திரம் இது தான். இந்திய அரசியல் இது தான், election செலவுக்கு பணம் உடனே கிடைக்கும் இடம். சிமெண்ட் மற்றும் அது சம்பந்தமான உற்பத்தியாளர்கள் மட்டுமே அரசியல் வாதிகளிடம் பஹைத்துகொள்ள முடியாது இந்திய ஜனங்களே .
Rate this:
Cancel
iqbal - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-அக்-201023:36:20 IST Report Abuse
iqbal எல்லாவற்றிகும் தகுதி, படிப்பறிவு எதிர்பார்க்கும் நாம், ஏன் அரசியலுக்கு மட்டும் தகுதி, படிப்பறிவு கேட்பதில்லை. நம்மால் முடியாதது எதுவும் இல்லை. ஒன்று பட்டால் வாழ்வு உயர்வு. ஒரு சிறிய நிறுவனத்திற்கு MBA படிப்பறிவு தகுதி தேவை. ஒரு நாட்டிற்கு ????.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X