தாமரைக்குக் கிடைச்ச டெபாஸிட்டு; பல தலைகளுக்கு கிழியப்போகுது சீட்டு!| Dinamalar

தாமரைக்குக் கிடைச்ச டெபாஸிட்டு; பல தலைகளுக்கு கிழியப்போகுது சீட்டு!

Added : செப் 25, 2014
Share
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்...அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்...! 'மக்கள் ஆட்டோ'வில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்திலிருந்து அலறிய பாடலைக் கேட்டு, சித்ராவும், மித்ராவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். ''என்னம்மா பாட்டைக் கேட்டு, ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க?,' என்றார் ஆட்டோ
தாமரைக்குக் கிடைச்ச டெபாஸிட்டு; பல தலைகளுக்கு கிழியப்போகுது சீட்டு!

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்...அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்...!

'மக்கள் ஆட்டோ'வில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்திலிருந்து அலறிய பாடலைக் கேட்டு, சித்ராவும், மித்ராவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

''என்னம்மா பாட்டைக் கேட்டு, ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க?,' என்றார் ஆட்டோ டிரைவர்.

''ஒண்ணுமில்லீங்கண்ணா...நாங்க சும்மா சிரிச்சோம்!,'' என்று மீண்டும் புன்னகைத்தாள் மித்ரா.


''பரவாயில்லை! தைரியமா சொல்லு...எதுக்கு சிரிச்சோம்னு....!'' என்றாள் சித்ரா.


''இந்தப் பாட்டு...யாரைப் பாத்து, யாரு பாடுறாங்கன்னு யோசிச்சோம்; சிரிச்சோம்!'' என்றாள் மித்ரா.


''இதென்னம்மா கேள்வி, யாரை நினைச்சுப் போடுறாங்கன்னு ஒங்களுக்குத் தெரியாதா?,'' என்றார் ஆட்டோ டிரைவர்.


''அப்படின்னா, யாரு நின்னாலும், அவுங்களுக்காக மட்டும் தான் ஓட்டு விழுது. அதான நீங்க சொல்றதுக்கு அர்த்தம்?,'' என்று கேட்டாள் சித்ரா.


''இதுல என்னம்மா சந்தேகம்?,'' என்று கேட்டார் ஆட்டோ டிரைவர்.


''அப்புறம் எதுக்கு 20 மினிஸ்டர்ஸ், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், முனிசிபாலிட்டி சேர்மன்கள்ன்னு இத்தனை பேரு இங்க வந்து வேலை பார்க்கணும். இத்தனை பேரும் வந்து, 50 பர்சன்டேஜ் கூட, ஓட்டு பதிவாகலையே. நாலு லட்சத்து 20 ஆயிரத்து 104 ஓட்டு வாங்குனாலும், மீதி எட்டே முக்கால் லட்சம் மக்களோட ஓட்டு, இவுங்களுக்கு எட்டாக்கனின்னு தானே அர்த்தமாகுது?,'' என்றாள் சித்ரா.


''மேடம்...நீங்க பேசுற அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாதுங்க; இந்த ஆட்டத்துக்கு நான் வரல. நீங்க 'பாலிடிக்ஸ்' பேசுங்க; நான் ஆட்டோ ஓட்டுறேன்,'' என்று ஆட்டோ டிரைவர் 'மெர்சல்' ஆனார்.


''அக்கா! வார்டுவைஸ்சா, வேலை பாத்தும், ஏன் ஓட்டு குறைஞ்சிருக்குன்னு பார்த்தா, பெரும்பாலான வார்டுகள்ல கவுன்சிலர்கள் மேல, மக்கள் கடுமையா அதிருப்தியா இருக்கிறதுதான் காரணம்னு மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட் போடப்போறாங்களாம்,'' என்றாள் மித்ரா.


''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன்; ஒரு சில ஏரியாக்கள்ல, கவுன்சிலர் குடியிருக்கிற ஏரியாவுல தான், கணிடூடூடிணஞ் ரொம்பவே குறைஞ்சிருக்காம். அதே மாதிரி, படிச்சவுங்க, வி.ஐ.பி.,ங்க இருக்கிற ஏரியாவுலயும் மக்கள் ஓட்டுப்போடவே வரலை. ரேஸ்கோர்ஸ் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல தான், சிட்டியிலயே 'கம்மி'யா 19 பர்சண்டேஜ் மட்டும் தான் ஓட்டுப்பதிவாயிருக்கு!,'' என்றாள் சித்ரா.


''ஒரு சில ஏரியாவுல, ஆளும்கட்சியைச் சேர்ந்த வெளியூர்க்காரங்க பேசுன பேச்சு, நடந்துக்கிட்ட விதத்தைப் பார்த்தே, ஓட்டுப்போடணும்னு நினைச்சவங்களும் போடாமலே, வீட்ல இருந்துட்டாங்க,''


''உண்மைதான்டி! ராமலிங்கம் காலனியில, ஒரு ரிட்டயர்டு ஆபீசர் வீட்ல, வெளியூர்க்காரங்க போயி, பணம் கொடுத்திருக்காங்க. அந்த பெரியவரு 'நாங்க வாங்க மாட்டோம்'னு சொன்னதுக்கு, 'அப்ப ஐயாயிரம் ரூபா கொடுத்தா வாங்குவீங்களா'ன்னு கிண்டலடிச்சிருக்காங்க. அவுங்க வீட்டுல நாலு ஓட்டும், ரெட்டை இலைக்குப் போடணும்னு இருந்த ஓட்டாம். ஆனா, ஒருத்தர் கூட, ஓட்டுப்போடப் போகலை''


''இருக்கிறதுலயே, மேற்கு மண்டலத்துல தான், ஓட்டுப்பதிவு மோசமா இருந்திருக்கு. கிழக்கும், வடக்கும் பரவாயில்லையாம்; தெற்குலயும், மத்தியிலயும் நல்லாவே ஓட்டுப்பதிவு நடந்திருக்கு. அதுலயும் தெற்கு தான், நம்பர் ஒன்னாம்! அங்க தான், மெஷின் 'சீல்' உடைச்சதா நேத்து பிரச்னையாயிருக்கு. என்ன பண்ணுனாங்களோ, அவங்களுக்கே வெளிச்சம்!,'' என்றாள் மித்ரா.


''ஆனா, லோக்சபாவுல 100 வார்டுல அ.தி.மு.க.,வை விட அதிகமா ஓட்டு வாங்குன பி.ஜே.பி.,க்கு ஏன் இவ்ளோ சறுக்கலாயிருக்கு?,'' என்றாள் சித்ரா.


''எப்பிடியோ ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 700 ஓட்டு வாங்கி, டெபாஸிட் வாங்கிட்டாங்கள்ல. அதுக்கே ஆளும்கட்சியில, எத்தனை தலை உருளப்போகுதுன்னு தெரியலை; ஆளும்கட்சி பலம், காசு, சி.எம்.,


அறிவிச்ச திட்டங்கள்ன்னு பல விஷயங்களைத் தாண்டி, சில இடங்கள்ல பிஜேபிகாரங்க இலைக்காரங்ககிட்ட விலை போனதால தான், தாமரைக்கு எதிர்பார்த்த ஓட்டு விழலைன்னு சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.

''நீ சொல்றது கரெக்ட் மித்து! அந்தக் கட்சியில பொறுப்புல இருக்கிற சில பேரு, வார்டுக்கு 10 ஆயிரம் ரூபான்னு பேசி, காசு வாங்கிட்டதாச் சொல்றாங்க. அது மட்டுமில்லாம, பிஜேபி வேட்பாளருக்கு சப்போர்ட்டா கூட்டணிக் கட்சித் தலைவருங்க யாருமே பிரசாரம் பண்ண வராததால, அவுங்க கட்சிக்காரங்களும் நைசா ஒதுங்கிட்டாங்க!,''


''அது சரி! புது மேயரு என்ன பண்ணப்போறாராம்?,''


''என்ன பண்ணுவாரு? அடுத்து 'அம்மா'வைப் பாத்து ஆசி வாங்கப்போவாரு; இங்க வந்த பிறகு, எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போறார்ன்னு தெரியலை; ஆனா, இப்பவே ரெண்டு, மூணு கவுன்சிலருங்க, 'மேயரே எங்காளு தான்; நாங்க சொல்றது தான் இனிமே நடக்கும்'னு கொக்கரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இவுங்களைத் தட்டி வைக்கலைன்னா, அப்புறமா சிக்கல் தான்,'' என்றாள் சித்ரா.


''அவருக்கு இங்க இருக்கிற ஆபீசர்ஸ் ஒத்துப்போவாங்களா?,'' என்று கேட்டாள் மித்ரா.

''ஒத்துப்போகாம என்ன பண்ணுவாங்க. அது தான், எலக்ஷன்ல அவுங்களோட அற்புதமான ஒத்துழைப்பு தெரிஞ்சுதே. ஆனா, எலக்ஷன் நடந்த அன்னிக்கு, ஆபீசர்ங்களை ராஜ்குமார், நல்லா வாரிருந்தாரே கவனிச்சியா?,''


''ஆமாமா...கவனிச்சேன். பூத் ஸ்லிப் கொடுக்கிறதுல சொதப்புனதால தான், கணிடூடூடிணஞ் குறைஞ்சிடுச்சுன்னு தைரியமா சொல்லிருந்தாரே. அது என்னவோ, உண்மை தான். புதுசா வந்திருக்கிற கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு....கீழ இருக்கிறவுங்க கிட்ட வேலை வாங்கத் தெரியலையா, அல்லது வேலையே தெரியலையான்னு தெரியலை. மத்த வேலைய எப்படிப் பார்ப்பாங்கன்னு இனிமேத்தான் பார்க்கணும்!,''


''மித்து! டி.எம்.கே.,காரங்க கொஞ்சம் உற்சாகமா இருக்காங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


''ஏன்க்கா...தேர்தலை அவுங்க புறக்கணிச்சதால தான், 7 லட்சம் பேரும் ஓட்டுப் போட வரலைன்னு சொல்றாங்களா?'' என்றாள் மித்ரா.


''அதில்லடி! மாநகரத்துக்கும், மாவட்டத்துக்கும் புதுசா ஆளைப்போடுங்கன்னு, பொங்கலூர்க்காரரே ஒதுங்கிட்டாராம். அதனால, சீக்கிரமே சின்ன வயசுக்காரங்க யாருக்காவது வாய்ப்பு கிடைக்கும்னு நம்பிக்கையோட இருக்காங்க,''


''யாரு வந்து என்ன பண்ணுறது? மக்களுக்கு ஆதரவா ஏதாவது பேசணும், செய்யணும், போராடணும். எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டே இருந்தா, கட்சியைக் காப்பாத்துறது கஷ்டம் தான்,''


''வேடிக்கை பார்க்கிறதுன்னு நீ சொல்லவும் தான் ஞாபகத்துக்கு வருது; எலக்ஷனுக்கு முத நாளு, பிஜேபி வேட்பாளரை ஏடிஎம்கே காரங்க அடிச்சப்போ நடந்த கூத்துல, போலீஸ்காரங்க பகிரங்கமா ஆளும்கட்சிக் காரங்களை 'சப்போர்ட்' பண்ணுனதைப் பார்த்து, ஏரியா மக்களே கடுப்பாயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.


''அதுதான் ஆளும்கட்சி எம்.எல்.ஏ., மேலயே கேசு போட்ருக்காங்களே?,'' என்றாள் மித்ரா.


''அந்த கதை தெரியாதா உனக்கு?


எம்.எல்.ஏ., மேல கேசு போட்டதுக்காக, அந்த லேடி எஸ்.ஐ.,யை கன்ட்ரோல் ரூம்க்கு மாத்துனாங்களே. உண்மையிலயே, மேலதிகாரிங்க சொல்லித்தான் அவுங்க கேஸ் போட்ருக்காங்க. ஆனா, பிரச்னையானதும் அந்தம்மாவை மாட்டி விட்டுட்டாங்களாம்,''


''நான் இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்; ஆளும்கட்சிக்காரங்க முதல்ல கொடுத்த 'கம்பிளைன்ட்' மேல எப்.ஐ.ஆர்., போடாம, ரெண்டாவதா பிஜேபிக்காரங்க கொடுத்த 'கம்பிளைன்ட்' மேல எப்.ஐ.ஆர்., போட்ட அந்த எஸ்.ஐ., அந்த காபியையும் பிஜேபிக்காரங்ககிட்ட கொடுத்திருக்காங்க. அவுங்க அதை, அப்பவே 'பேஸ்புக்'ல போட்டு விட்டாங்க. அது தான் பிரச்னையாயிருக்கு,''


''ரிசல்ட் வந்திருச்சே; ரெண்டு தரப்புலயும் யாரையாவது அரெஸ்ட் பண்ணுவாங்களா?,'' என்று கேட்டாள் சித்ரா.


''தெரியலையே...ஆனா, எலக்ஷன் ரிசல்ட்டுக்காகவே காத்திருந்தது மாதிரி, எல்.பி.ஏ.,காரங்க சீக்கிரமே சில பில்டிங்குகளை 'சீல்' வைக்கப்போறாங்களாமே!''

''ஆமா மித்து! வயலேஷன் இருக்கிற பில்டிங்குகளுக்கு 'சீல்' வைக்கிறாங்க. பர்மிஷனே வாங்காதவனை, அப்பிடியே விட்டுர்றாங்க. இது என்ன நியாயம்னு கேக்குறாங்க,''


''நியாயமான கேள்வி தான். அக்கா...! ஒரு மேட்டர், க்ளூ மட்டும் சொல்லுவேன். ஆன்சரை நீயே கண்டு பிடிச்சிக்கணும். போன பதவி, பெருமையை எல்லாம் மீட்குறதுக்காக, ஒருத்தர் 50 கோடி ரூபா நிதியோட தயாராயிருக்காராம். எப்படியும் 'காணிக்கை'யை கொடுத்து, மறுபடியும் வரம் வாங்கிருவேன்னு தெம்பா திரியுறாராம்,'' என்றாள் மித்ரா.


''மேடம்! நீங்க சொன்ன அட்ரஸ் இது தான்; நீங்க மேட்டரை 'கட்' பண்ணுங்க; நான் மீட்டரைக் 'கட்' பண்றேன்,'' என்றார். சிரித்தபடியே இறங்கினார்கள் சித்ராவும், மித்ராவும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X