சிறிய ஜாதிகளை புறக்கணிக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

Added : செப் 28, 2014 | கருத்துகள் (18) | |
Advertisement
தேர்தல்களில் போட்டியிட, வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக எந்த ஜாதியினர் இருக்கிறார்களோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களையே, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர்.பெரும்பான்மை ஜாதியினரை நிறுத்தினால் தான், தங்களின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற எண்ணம், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உள்ளது. ஆனால், அந்த
சிறிய ஜாதிகளை புறக்கணிக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

தேர்தல்களில் போட்டியிட, வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக எந்த ஜாதியினர் இருக்கிறார்களோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களையே, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர்.

பெரும்பான்மை ஜாதியினரை நிறுத்தினால் தான், தங்களின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற எண்ணம், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உள்ளது. ஆனால், அந்த தொகுதியில், அந்த பெரும்பான்மை ஜாதியினர் மட்டும் வசிப்பதில்லை; பல ஜாதியினரும் வசிக்கின்றனர்; அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது.அந்த பெரும்பான்மை ஜாதியினர் மட்டும் ஓட்டளித்தால் போதும் என்றோ, அவர்களின் ஓட்டு மட்டுமே போதும் என்றோ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நினைப்பதில்லை. அனைத்து ஜாதியினரும், தங்கள் வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும் என விரும்புகின்றனர். எனினும், பெரும்பான்மை ஜாதியினரையே தொடர்ந்து தேர்தலில் நிறுத்துகின்றனர்.அந்த தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும், இது போன்றே, அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியை சேர்ந்தவர்களையே, வேட்பாளராக நிறுத்துகின்றனர்.சமத்துவ சமுதாயம், ஏழைகள் முன்னேற்றம், அனைவருக்கும் சம உரிமை என, வாய் கிழிய பேசும் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், வேட்பாளர் தேர்வில், பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவர்களையே தொடர்ந்து நிறுத்தி, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களையே வளம் கொழிக்க வைக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதால், ஒரு காலகட்டத்தில், சில குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களே அனைத்து கட்சியிலும், பெரிய பதவியிலும், அதிகாரத்திலும் அமர்ந்து, பிற சிறிய ஜாதியினரை அவர்கள் மதிக்காத, சில சமயங்களில் துன்புறுத்தும் நிலையும் ஏற்படுகிறது.சமத்துவ சமுதாயத்தைப் படைக்க விரும்புவதாக கூறும் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், சிறிய ஜாதிகளை சேர்ந்தவர்களை முன்னேற்ற வேண்டுமென்றால், அவர்களுக்குத் தானே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர் பதவியில் அமர்ந்தால் தானே, ஒட்டுமொத்த சமுதாயம் சமத்துவம் அடையும்.தொடர்ந்து பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆட்சி, அதிகாரம், பதவிகளில் அமர்வதால், சிறுபான்மை சமுதாயத்தினர் எப்போது முன்னேற்றம் அடைவது?தமிழகத்தை பொறுத்த வரை, தலித், நாடார், தேவர், வன்னியர் போன்ற, பத்துக்கும் குறைவான ஜாதிகள் தான், பெரும்பான்மை ஜாதிகள். அந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனினும், 2,000த்திற்கும் மேற்பட்டசிறிய ஜாதிகளும் உள்ளனவே. அந்த ஜாதிகள் அனைத்தின் ஓட்டையும் கணக்கிட்டால், பெரும்பான்மை ஜாதிகளிடம் உள்ள ஓட்டுகளை விட, நான்கைந்து மடங்கு அதிகமாகத் தான் இருக்கும்.

அந்த, 2,000த்திற்கும் மேற்பட்ட சிறிய ஜாதிகள் சேர்ந்து ஓட்டளித்து தான், பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவரை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்றனர்; இத்தனை ஆண்டுகளும் இப்படித் தான் நடந்துள்ளது.சிறுபான்மை ஜாதியினர் செய்த இத்தகைய தியாகங்களால் தான், பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர்கள், அதிகாரத்திலும், பதவியிலும் இருந்து உள்ளனர்; இருக்கின்றனர்.அங்கொன்றும், இங்கொன்றுமாக, சிறிய ஜாதியைச் சேர்ந்த சிலருக்கு, அரசியல் கட்சிகள் போட்டியிட வாய்ப்பு கொடுத்து, அவர்களும் சில நேரங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். அது எப்போதாவது, வேறு வழியே இல்லாமல், பெரும்பான்மை ஜாதியினர் மீது பிற ஜாதியினருக்கு இருக்கும் அதிருப்தியால் தான் இருந்திருக்குமே ஒழிய, சிறிய ஜாதியினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற, கட்சிகளின் எண்ணமாக கட்டாயம் இருக்காது.சிறுபான்மை ஜாதியினரை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவருக்குக் கூட இது வரை இருந்த தில்லை. இதில், முக்கிய அம்சம் என்ன வென்றால், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில், பெரும்பான்மையான கட்சித் தலைவர்கள், சிறிய ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் தான்.

இருந்த போதிலும், இந்தத் தலைவர்கள், தங்கள் ஜாதியையோ அல்லது தங்கள் ஜாதியைப் போன்ற, 2,000த்திற்கும் மேற்பட்ட, குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஜாதியினரையோ மேம்படுத்த, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததில்லை; கொடுப்பதில்லை.இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு கிடைக்கும் சலுகைகளையும், இந்த பெரும்பான்மை ஜாதியினர் தான் பெற்றுக் கொள்கின்றனர்.வறுமையால் பாதிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக கடினமாக உழைத்தும் முன்னேறாத, ஏராளமான ஜாதிகள் நம் மாநிலத்தில் உள்ளன. அந்த ஜாதியினருக்கு, ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியைக் கூட நம் கட்சித் தலைவர்கள் வழங்கியது கிடையாது; ஆனால், அத்தகையவர்களின் ஓட்டுகளைப் பெற்று, தாங்களும் செழித்து, செழிப்பான ஜாதியினரை மேலும் செழிக்கச் செய்துள்ளனர்.இப்படி இருந்தால், சமுதாயத்தில் சமத்துவம் எவ்வாறு நிகழும்?ஒரு சில குறிப்பிட்ட ஜாதியினர் உயர்ந்து கொண்டே போவதும், அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம், பதவி, செல்வாக்கு, பணபலம், ஆள்பலம் போன்றவை வளர்வதும், பிற சிறிய ஜாதிகள், இருக்கும் இடமே தெரியாமல் உருக்குலைந்து வருவதும் தமிழகத்தில் கண்கூடாக தெரிகிறது. அத்தகைய சிறிய ஜாதியினரும் ஒரு காலகட்டத்தில், தங்களின் சொந்த ஜாதியை வெளியே சொல்ல தயங்கி, சொன்னால் பிறருக்கு தெரியாது அல்லது ஏளனமாக பார்ப்பார்கள் என்பதற்காக, தங்கள் ஜாதியை ஒட்டியுள்ள பெரிய ஜாதியின் பெயரை, தங்கள் ஜாதியின் பெயராகக் கூறி வருகின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றால், அவரின் வெற்றியை, அந்த வேட்பாளரின் ஜாதியினர் தான் பெற்றுத் தந்தனர் என, நம் கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.'என் தனிப்பட்ட செல்வாக்கு, என்னிடம் உள்ள ஈர்ப்பு, கவர்ச்சி, பதவியில் இருந்த போது கொண்டு வந்த திட்டங்களால் தான், நான் நிறுத்திய அந்த வேட்பாளர் வெற்றி பெற்றார்; அவருக்கு என சுயமான மக்கள் ஆதரவோ அல்லது சமுதாய ஆதரவோ கிடையாது' என்று தான் கூறுவர்.பிறகு ஏன், குறிப்பிட்ட தொகுதி யின், குறிப்பிட்ட பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர்களை, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தலின் போதும் நிறுத்துகின்றனர் என்பதும் தெரியவில்லை.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, கட்சித் தலைவர்கள் நிறுத்தும் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், பல காரணங்களால் வெற்றி பெற்று விட, தொடர்ந்து இதே, 'பார்முலா' வை கட்சிகள் பின்பற்றுகின்றன.தங்களின் தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் பலம், ஆளும் திறமை போன்றவற்றின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்கள், சிறிய ஜாதியைச் சேர்ந்தவர்களை இனிமேலாவது கைதுாக்கி விட வேண்டும்; அவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். செய்வார்களா?
a_meenakshisundaram@yahoo.com

- ஏ.மீனாட்சிசுந்தரம்
- சமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (18)

Rajarajan - Thanjavur,இந்தியா
03-நவ-201409:25:17 IST Report Abuse
Rajarajan இதில் மிக கொடுமையான விஷயம் என்னவெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், முன்னேறிய பிரிவினராகதான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிட்டுள்ளனரே தவிர, அவர்களை உயர்ந்த ஜாதியினர் என்று எங்குமே குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள்தான், தாங்கள் வோட்டுவேட்டையாட, இவர்களை உயர்ந்த ஜாதி என்றும் இவர்கள் அல்லாத மற்ற ஜாதியினரை பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்ந்த ஜாதி என்று கூறி கூறியே, இவர்கள் மனதில் ஒரு துவேஷத்தை தொடர்ந்து தக்கவைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்ந்த ஜாதியாக குறிப்பிடப்படும் ஜாதியினர் (வருத்ததுடன் குறிப்பிடுகிறேன்) கல்வி, பதவி, திறமை மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும், இவர்களின் துவேஷத்தை தொடர்ந்து தூண்டிவிட்டுகொண்டே உள்ளனர். இவர்களை முன்னேறிய பிரிவினராக அறிவிக்கவிடாமல், தொடர்ந்து கேவலப்படுத்தியே வருகின்றனர். பொருளாதாரத்தில் முன்னேற இடவொதுக்கீடு மற்ற சலுகைகள் மூலம், 2-3 தலைமுறைகள் முன்னேறிய பின்னரும், தங்களை தாழ்ந்தவன் / பிற்படுதபட்டவன் என்று அழைப்பதை இவர்கள் எவ்வாறு விரும்புகின்றனர் ??? முன்னேறிய பிரிவில் வந்தால், எங்கே இடவொதுக்கீடு மற்றும் சலுகைகள் பறிபோய்விடுமோ என்று, தாழ்ந்தவன் / பிற்படுதபட்டவன் என்ற இந்த இழிசொல்லை தொடர்ந்து தாங்கிகொள்கின்றனர். இவர்களே இதை விரும்பும்போது, பின்னர் எவ்வாறு ஜாதிகள் அழியும் ?? பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாது. ஆனால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று, தொடர்ந்து முன்னேறிய பிரிவினரை திட்டிக்கொண்டே இருந்து ஆறுதல் அடையவேண்டியது தான். தன்னைத்தானே அதுவும் தெரிந்தே ஒருவன் ஏமாற்றிகொள்ளும்போது, அடுத்தவனை சொல்லி குற்றமில்லை.
Rate this:
Cancel
rambo - chennai,இந்தியா
31-அக்-201417:26:41 IST Report Abuse
rambo சிறிய ஜாதிகள் மட்டும் புறகணிக்க படவில்லை..பெரிய ஜாதிகளிலும் ஒரு சில ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகளிலும் அரசாங்கத்திலும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தமிழ்நாடில் இட ஒதுக்கீட்டை பார்த்தீர்கள் என்றாலே புரியும்.தாங்கள்தான் தமிழ்நாடில் உயர்ந்த ஜாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் தங்கள் ஜாதியினருக்கு உள்ள அரசாங்க செல்வாக்கினால் இட ஒதுகேட்டில் மிகவும் பிற்படுத்த பட்டோர் பட்டியலில் தங்கள் ஜாதியை சேர்த்து விட்டார்கள்..இவர்களை விட தாழ்ந்தவர்கள் என்று இவர்கள் சொல்பவர்கள் வெறும் பிற்படுத்த பட்டோர் பட்டியலிலே உள்ளார்கள்..இப்படி இட ஒத்துகீடையே தமிழ்நாடில் கேலி கூத்தாக்கி விட்டார்கள்.இப்படி பல பெரிய ஜாதிய்னரே புரகனிகப்ப்படும்போது சிறிய ஜாதிகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பார்கள்..
Rate this:
Cancel
mailvakanam - srivilliputtur,இந்தியா
24-அக்-201419:25:07 IST Report Abuse
mailvakanam பள்ளியில் பெயர் சேர்க்கும் போது சாதி இல்லாமல் பெயர் சேர்த்தாலே ஒரு தலைமுறைக்கு பிறகு சாதி மறைந்து/ குறைந்துவிடும்.
Rate this:
thangam - tirunelveli,இந்தியா
28-அக்-201410:37:54 IST Report Abuse
thangam இது எல்லோர்க்கும் தெரிந்த விசயம் தான் அதனால தான் அத செய்றது இல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X