சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : செப் 28, 2014
Advertisement
 சொல்கிறார்கள்

நிலத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடுங்கள்!
குறைவான தண்ணீ ரில், அதிக விளைச்சலை அள்ளும் நெல் சாகுபடி முறைகள் குறித்து கூறும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைவர், முனைவர் வெ.ரவி: திருந்திய நெல் சாகுபடி முறை மூலமாக, குறைந்த அளவு நீர் மற்றும் குறைந்த அளவு நாற்றுகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான மகசூல் பெறலாம்.இந்த முறையில் ஒவ்வொரு நாற்றுக் கும், 25க்கு 25 செ.மீ., இடைவெளி இருக்கு மாறு, 15 நாட்கள் வளர்ச்சி அடைந்த நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். மேலும், அதிக அளவு நாற்றுகளைப் பயன்படுத்தாமல், ஒற்றை நாற்றை நடவு செய்தால் போதுமானது.இதற்கு, நிலம் சமமானதாக இருக்க வேண்டும். இதனால், களை அதிகம் மண்டாது. இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை போதுமானது. அதேபோல், நாற்றங்கால் பரப்பும் குறைவு என்பதால், விதைச் செலவு, நாற்று பறிக்கும் செலவு குறையும். மேலும், நடவில் நாற்றுகளுக்கிடையே அதிக இடைவெளி இருப்பதால் அதிக துார்கள் வெடித்து, அதிக மகசூல் கிடைக்கிறது. நீர் அதிகம் கிடைக்காத கடைமடைப் பகுதிகளுக்கு ஏற்றது, புழுதி மண்ணில் நேரடி நெல் விதைப்பு முறை; நன்கு புழுதியடையும்படி நிலத்தை உழவு செய்து, பின் விதைப்பானைக் கொண்டு நெல்லை விதைக்க வேண்டும். இவ்வாறு விதைப்பதற்கு, ஏக்கருக்கு, 10 முதல் 15 கிலோ விதை நெல் போதும்.தண்ணீர் விடும்போது, நெல்லுடன் களைச் செடிகளும் அதிக அளவில் முளைக்கும் வாய்ப்புள்ளதால், சரியான முறையில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும். இந்த முறையில் விதைக்கும் போது, விதைச் செலவு, நாற்றங்கால் செலவு, நடவுச் செலவு, தண்ணீர் செலவு அனைத்தும் குறைகிறது; நடவுக்கு இணையாக மகசூலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சேற்றில் நேரடி நெல் விதைப்பு மூலம், ஓரளவு தண்ணீர் வசதியுள்ளவர்கள், நாற்றங்கால் பதத்திற்கு வயலை உழுது, விதைப்பான் மூலம் நேரடியாக விதைத்து விடலாம். இந்த முறையிலும், களைச்செடிகள் அதிகம் உண்டு. மற்ற நடவு முறைகளுக்கு இணையாக, மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.வேளாண் பொறியியல் துறை மூலம், குறைந்த வாடகைக்கு, புழுதி மண்ணில் விதைக்கும் இயந்திரம், சேற்றில் விதைக்கும் விதைப் பான், லேசர் நிலம் சமன்படுத்தும் இயந்திரங்கள் கிடைக்கின்றன.கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கான, சொட்டு நீர் பாசன முறையிலான நெல் சாகுபடி முறை ஆய்வு நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X