சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடிக்கணினிகள் திருடிய இரண்டு பேர் கைது

Added : செப் 29, 2014
Advertisement

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில், 22 மடிக்கணினிகள் திருடிய இரண்டு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி பகுதியில், தனியார் பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள், இங்கு, தனியாக வீடு எடுத்து, தங்கிப் படித்து வருகின்றனர்.அவர்கள், கல்லுாரிக்கு செல்லும்போது, வீட்டை பூட்டிவிட்டு செல்கின்றனர். அந்த சமயத்தில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, மடிக்கணினிகளை திருடிச்சென்றனர். இதுகுறித்து, மாணவர்கள், கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிறுத்தாமல் சென்றனர்.அவர்களை, போலீசார் விரட்டிச் சென்று, கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி, விசாரணை செய்தபோது, முன்னுக்குபின் பதில் அளித்தனர். அவர்களை, காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்ததில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முக்கேஷ், 23; நீலகிரி மாவட்டம் கூடலுாரைச் சேர்ந்த பிரதீப்சன்னி, 24 ஆகியோர் என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், மடிக்கணினிகளை திருடிச்சென்று, கேரள மாநிலத்தல், 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்து, உல்லாசமாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர்.அவர்களிடமிருந்து, 22 மடிக்கணினிகள் மற்றும் ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், முக்கேஷ், பிரதீப் சன்னி ஆகிய இருவரையும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X