பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 6 அமைச்சர்கள் நேற்று மாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், விஜயபாஸ்கர், வீரமணி மற்றும் ரமணா ஆகியோர் நேற்று மாலை 6:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர். ஜெ.வைச் சந்தித்து ஆசி வாங்க உள்ளனர்.
வரவேற்க ஆளில்லை!
முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பதவியேற்றவுடன் நேற்று மாலை தலைமைச் செயலகத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை வரவேற்க கட்சியினர் யாரும் இல்லை; தலைமைச் செயலக ஊழியர்களும் வரவில்லை.அதனால் முதல்வரும் அமைச்சர்களும் யாருடனும் பேசாமல் முகத்தை தொங்கவிட்டபடி சோகமாக தங்கள் அறைக்கு சென்றனர்.வழக்கமாக புதிய அமைச்சரவை பதவி யேற்பு என்றால் தலைமைச் செயலகம் களை கட்டும். கட்சியினர் நிரம்பி வழிவர்; அதிகாரிகள் வாழ்த்து கூறுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE