அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறைவாசலில் அ.தி.மு.க.,வினர் தவம்

Added : செப் 30, 2014
Advertisement
 சிறைவாசலில் அ.தி.மு.க.,வினர் தவம்

*பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட பின், அப்பகுதியில் இரவு நேரத்திலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
*அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நவநீத கிருஷ்ணன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கர்நாடக ம.ஜ.த., -எம்.எல்.ஏ., குபேந்திர ரெட்டி ஆகியோர் ஜெயலலிதாவை பார்க்க, காலையிலேயே வந்தனர். ஆனால், அவர்கள், ஜெயலலிதாவை பார்க்கவில்லை.
*பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில், தடுப்புகள் போடப்பட்டிருந்த இடத்தில், தன்னை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு, போலீஸ் அதிகாரியிடம், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
*ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவின் காரை, சிறை வளாகத்திற்கு போலீசார் அனுப்ப மறுத்ததால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

*நேற்று காலை, 11:30 மணியளவில் சிறை வளாகத்துக்குள் நம்பர் பிளேட் இல்லாத, 'டிராக்ஸ் கார்' ஒன்று வேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து கொண்டிருந்தபோது, அக்கார், மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.
*நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார், ஜெயலலிதாவை பார்க்க சென்று, பார்க்க முடியாமல் திரும்பியதாக, அவரே கூறினார்.
*சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை பார்க்க செல்பவர்களின், உடைமைகளை கடுமையான பரிசோதனை செய்து, போலீசார் அனுப்பினர்.
*சசிகலாவை பார்க்க, அவரது உறவினர்கள் சிலர், சோகமான முகத்துடன் வந்திருந்தனர்.
*ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காததால், அவரது ஆதரவாளர் ஒருவர், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
*ஜெயலலிதாவை பார்க்க அவரது சகோதரி என்று கூறிக் கொள்ளும் ஷைலஜா, அவரது மகள் அமிர்கா ஆகியோர் வந்தபோது, அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி, உள்ளே செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
*பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்த எந்த செய்தியும் ஊடகங்களுக்கு வராமல் இருக்க, சிறை அதிகாரிகள், மொபைல் போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
*ஜெயலலிதாவின் 'இசட்' பிரிவு பாதுகாப்பு தற்போது அவருக்கு இல்லை. சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
*நாள் முழுவதும் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அளிக்க, சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் ஆண்களாக இருந்ததை ஜெயலலிதா விரும்பாததால், மைசூரு மத்திய சிறையிலிருந்து பெண் அதிாரி ஒருவர் வரவழைக்கப்பட்டு உள்ளார்.
*ஜெயலலிதாவிற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் இருப்பதால், டாக்டர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். ஜெயலலிதா, கர்நாடகாவில் பிறந்தவர் என்பதால், டாக்டர்களிடம், சரளமாக கன்னடத்தில் பேசுகிறார்.
*நேற்று முன்தினம் இரவு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வசதிகள் இல்லை என்று ஜெயலலிதா கூறியதால், அவருக்கு வேறு அறை ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X