'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம்

Updated : அக் 01, 2014 | Added : செப் 30, 2014 | கருத்துகள் (101)
Share
Advertisement
பெங்களூரு: 'ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் மதிப்புக்கு, அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கை, அவர்களால் காட்ட முடியவில்லை' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.எங்கிருந்து வந்தது?ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு
'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம்

பெங்களூரு: 'ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் மதிப்புக்கு, அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கை, அவர்களால் காட்ட முடியவில்லை' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


எங்கிருந்து வந்தது?

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை, வருமான வரித்துறைக்கு, அவர்களால் சரியாக காட்ட முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், அவரின் வருமானம், 9.91 கோடி ரூபாய். அதில், அவரின் செலவு, 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும், தங்கள் பெயரிலும், சில நிறுவனங்கள் பெயரிலும், 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான, திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு, அதற்கான பணத்தை பெற, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை, அரசு தரப்பு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 - பி, 109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13 -1இ மற்றும் 13 -2ன் கீழ், தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்துஉள்ளனர். அதனால் அவர்கள் குற்றவாளிகளே.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவிக்க, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர் என்பதையும், அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை அவர் கட்டத் தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்த, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறையில் இருக்க நேரிடும். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் நிரந்தர வைப்பு நிதிகள், அபராதத் திற்கு ஈடாக எடுத்துக் கொள்ளப்படும். இதுதொடர்பாக, தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். வங்கிக் கணக்கில் உள்ள பணமானது, அபராதத் தொகைக்கு ஈடாகவில்லை எனில், நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் தங்க, வைர நகைகள் விற்கப்பட்டு, மீதமுள்ள அபராத தொகைக்கு வரவு வைக்கப்படும்.அந்த நகைகளை, ரிசர்வ் வங்கிக்கோ அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவே விற்கலாம். விற்றது போக, மீதமுள்ள நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்படும். ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மற்றும் சில கம்பெனிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை எல்லாம், மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் அபராதத் தொகையில், 5 கோடி ரூபாயை வழக்குச் செலவுகளுக்காக, கர்நாடக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி குன்கா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


குறைவான தண்டனை வழங்குங்க...:

தீர்ப்பு வழக்குவதற்கு முன், ஜெயலலிதா கூறியதாவது:அரசியல் பழிவாங்கும் நோக்கத் துடன் தொடரப்பட்ட வழக்கு இது. இந்த வழக்கு தொடரப்பட்ட போது, எனக்கு வயது, 48. தற்போது எனக்கு வயது, 66. கடந்த, 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கால், நான் சொல்ல முடியாத மனவேதனைக்கும், துயரத்திற்கும் ஆளானேன்.மேலும், எனக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய் உபாதைகள் இருப்பதால், அதை கணக்கில் கொண்டு, குறைவான தண்டனை வழங்கும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - Coimbatore,இந்தியா
04-அக்-201420:50:00 IST Report Abuse
Mani தீர்ப்பு பற்றி பல சந்தேகம் வருதே 1.”வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு, அதற்கான பணத்தை பெற, அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்” வருமானத்திற்கு அதிகமா சொத்து இருக்குனு தான புகார் பதிஞ்சிங்க,, கிரிமனல் சதிச்செயல ஈடுபட்டிருக்காங்கனு எங்கயுமே புகார் பதியபடாத நிலையில நீங்க இப்படி ஒரு வார்தைய எப்படி தீர்ப்பு ல சேர்த்தீனீங்கனு குழப்பமா இருக்கு.. 2.சொத்து வாங்கியதுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு குற்றம் சாட்டப்பட்டவர்கள்ல ஒருத்தரான சசிகலா மேடம் சொன்ன வாக்குமூலத்தை ஏன் நீதிபதி அவர்கள் ஏத்துக்க மறுத்துட்டாரு.. தீர்ப்புல உள்நோக்கம் இருகுனு இதுவும் எடுத்துகாட்டுதே.. அப்பறம் எப்படி அவர முதல் குற்றவாளினு அறிவிச்சீங்க? 3.”கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 4 நான்கு பேர்களும் சேர்ந்து 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர்"னு சொல்றீங்க.. ஆக நாலு பேரும் சேர்ந்துதான் சொத்து சேர்த்துருக்காங்கனு சொல்ல வறீங்க.. 54 கோடி ரூபாய்னே வச்சிக்குவோம்.. 54 கோடி ரூபாய நாலு பங்கா பிரிச்சா கூட ஒருத்தருக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாய் தான ஆகுது.. இதெல்லாம் வச்சி பார்க்கும்போது நீங்க சொல்லியிருக்க முதல் நபருக்கு மட்டுமே 54 கோடிக்கு சொத்து இல்லைனு தெரிஞ்சிக்க முடியுது.. 4.நான்கு பேரோட வருமானத்தை கணக்கிடாமல் ஒருவரோட வருமானத்தை மட்டும் வைத்தே சொத்து சேர்த்தாங்கனு எப்படி சொல்றீங்க.... நீங்க சொல்லியிருக்கறத வைச்சி பார்க்கும்போதே தவறு ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லைனு எங்களுக்கே தோணுதே.. 5.இதற்கு முன் வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் தாமாக முன்வந்து ” எனக்கு அவ பெயர் ஏற்படுத்தும் முயறசி நடக்கிறது அதனால் என்னால் இவ்வழக்கை விசாரிக்க இயலாதுனு” சொல்லியிருந்தாரே அப்பொழுதே அரசியல் தலையீடு உள் வந்திடுச்சோனு எங்களுக்கு ஒரு டவுட் வருது.. 6.தீர்ப்பு வருவதற்கு முன்பே ”கர்நாடக்த்தில் தவறுகள் நடக்காத வண்ணம் இங்கு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்”னு பேட்டி வருதே எப்படி? 7.ஜெ அவர்கள் தமிழக முதல்வராக தமிழக நலனுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுகி பல தீர்ப்புகளை பெற்று தந்துள்ளாரே தவிர.. தன் சொந்த நலனுக்காக அல்ல.. அவர் மீது மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் வஞ்சக, சர்வாதிகார போக்கை கையாளுவது ஜனநாயகத்துக்கு உகந்ததாக தெரியவில்லை என்றே தோன்றுகிறது. இவ்வாறான போக்கை கடைபிடிப்பதினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் என்ற எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்பு நடக்காது என்றே தோன்றுகிறது. அரசியல் தலையீட்டை உடைத்து நல்ல தீர்ப்பு வரும் என்று சாமானிய மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..
Rate this:
Cancel
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
01-அக்-201409:54:18 IST Report Abuse
Venki Raja கூடா நட்பு கேட போய்விட்டது. இனியாவது திருந்துவார இந்த அம்மா
Rate this:
Cancel
Mugavai Anandan - Port Blair,இந்தியா
01-அக்-201409:54:06 IST Report Abuse
Mugavai Anandan தவறான முன்னுதாரணம் ஊழல்வாதிகளுக்கு கொடி பிடிப்பதும்,கோசம் போடுவதும் ,கோர்ட் தீர்ப்பை விவாதிப்பது கூட சட்டப்படி குற்றமாகும்.பிரபல வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி,கபில் சிபில்,என்னமோ பூசன் இவர்களுக்கு இதே வேலைதான். குற்ற பின்னணியுள்ள பெரிய முதலைகளை பெயிலில் எடுத்து பல கோடிகளை பெறுவதற்காகவே நாக்கை தொங்க போட்டுகொண்டு அவர்களுக்கு அதரவாக பேசுவதுபோல் பேசிவருவார்கள்.இவர்கள் ஒன்றுமில்லாத குற்றவாளிகள் என்றால் கண்களை மூடிகொள்வார்கள்.எனக்கு என்ன வருத்தம்னா இவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல,.....கருணாநிதி,கனிமொழி,ராஜா,நிதின் கத்காரி,லாலு ,மாயாவதி, சோனியா,.... மருமகன் வதோதரா, இவர்களுக்கெல்லாம் இந்தளவுக்கு தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகமே . கட்சி பாகுபாடு இல்லாம தண்டனை தண்டனை கிடைக்க வேண்டும் ,அதுவே எமது விருப்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X