தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., க்கள் மனு விசாரணை ஒத்திவைப்பு

Updated : அக் 18, 2010 | Added : அக் 17, 2010 | கருத்துகள் (11)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது என்றும், அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹார் சிங் தீர்ப்பளித்தார். அதேநேரத்தில், மற்றொரு நீதிபதியான குமார், மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். நீதிபதிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவியதால், இந்த வழக்கை 20ம் தேதி

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது என்றும், அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹார் சிங் தீர்ப்பளித்தார். அதேநேரத்தில், மற்றொரு நீதிபதியான குமார், மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். நீதிபதிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவியதால், இந்த வழக்கை 20ம் தேதி மற்றொரு நீதிபதி தலைமையில் நடத்துவதாக, டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்தது.


கர்நாடகா சட்டசபையில் அக்டோபர் 11ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே, பா.ஜ.,வை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், ஐந்து சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தில் கீழ், தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கு, விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் மனுவில் குளறுபடி இருந்ததால், மீண்டும் மனுதாக்கல் செய்ய கோரி, வழக்கு 18ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.கர்நாடகா உயர் நீதிமன்றத்தில்  மதியம் 11 எம்.எல்.ஏ.,க்கள் மனு மீதான தீர்ப்பு அளிக்கப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹார் சிங், நீதிபதி குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.


இந்த தீர்ப்பில், டிவிஷன் பெஞ்ச், மாறுபட்ட கருத்துகளை கூறியது. 11 எம்.எல்.ஏ.,க்களை டிஸ்மிஸ் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதி கேஹார் சிங் கூறினார். ஆனால், இந்த கருத்துக்கு நீதிபதி குமார் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை மற்றொரு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்துவதாக கூறி, வரும் 20ம் தேதி வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.


விதிமுறைகள் மீறல், இயற்கை நீதிக்கு முரணான செயல்பாடுகள், தவறான நோக்கம் ஆகிய கருத்துகளில் இரு நீதிபதிகளும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். ஆனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் 10வது பிரிவில் மட்டுமே இருவரும் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தனர்.இதற்கிடையில், ஐந்து சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுவில் சில தவறுகள் இருந்ததால், மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டது. எனவே, இந்த வழக்கு நவம்பர் 2ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது, என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201022:47:02 IST Report Abuse
தோப்புத்துறை யதார்த்தன் அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்ப்பதற்காக அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.அதிலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் வேறு கூடுதல் பலம்.
Rate this:
Cancel
வின் india - Chennai,இந்தியா
18-அக்-201022:07:18 IST Report Abuse
வின் india Every body knew that dismissing independant MLA is a foolish act. How cleverfully Yediur ppa showed his party majority. I really surprised how court could not give justice to independent MLAs.
Rate this:
Cancel
இளவரசு முருகன் - காரைக்குடி,இந்தியா
18-அக்-201021:09:31 IST Report Abuse
இளவரசு முருகன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய எதிர் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் .மற்றும் எதிர் கட்சிகள் மக்கள் பலம் இருந்தால் அடுத்த தேர்தலில் நிருபித்து கொள்ளவும் அதை விடுத்தது தங்கள் பண பலத்தை யார் இங்கே நிருபிக்க சொனது எப்படி இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்று விட்டனர் மறு படியும் நிருபிக்க கவர்னர் நிருபிக்க சொனது மிக பெரிய ஜனநாயக படுகொலை ஆகும் . ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கமும் மிக பெரிய ஜனநாயக படுகொலை ஆகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X