பொது செய்தி

இந்தியா

இந்திய விமான படை தளபதி அரூப் ராகா கவலை: நவீனமயமாக்கும் பணிகள் தாமதமாவதாக புகார்

Updated : அக் 06, 2014 | Added : அக் 05, 2014 | கருத்துகள் (26)
Advertisement
 இந்திய விமான படை தளபதி அரூப் ராகா கவலை: நவீனமயமாக்கும் பணிகள் தாமதமாவதாக புகார்

புதுடில்லி: ''இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் திட்டங்கள் மிகவும் தாமதமாக நடக்கின்றன. விமானப் படைக்கு என்ன தேவையோ, அதை குறிப்பிட்ட காலத்திற்குள் தர வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இந்திய விமானப் படை, அரசுக்கு சொந்தமானது; எனக்கு சொந்தமானதல்ல,'' என, விமானப் படை தளபதி அரூப் ராகா, கவலை தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின், 82வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த விழாவில், விமானப் படை தளபதி அரூப் ராகா பேசியதாவது: உலக நாடுகள், தங்களின் ராணுவத்தை போட்டி போட்டு பலப்படுத்துகின்றன. அதற்கு ஏற்ப, நாமும் தயாராக வேண்டும். இந்திய விமானப் படையை நவீனமயமாக்கும் திட்டப் பணிகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால், நம் திறமையை வளர்ப்பதில் கால தாமதமாகிறது. முக்கிய தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இருந்து, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது வரை, விமானப் படையில் அனைத்து பணிகளுமே, மிக மெதுவாகத் தான் நடக்கின்றன. திட்டமிட்ட காலத்தை விட, மிகவும் தாமதமாகவே இந்த பணிகள் நடக்கின்றன. விமானப் படையில் உள்ள சில விமானங்களை, அதற்கான ஆயுட்காலம் முடிந்து விட்டதால் கைவிட்டு விட்டோம். அதற்கு பதிலாக, குறித்த காலத்திற்குள் புதிய விமானங்கள் வாங்கப்பட வேண்டும். நவீனப்படுத்துவது, திட்டங்களை முடிப்பது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்கு காலக்கெடு மிகவும் முக்கியம். இதில் காலதாமதம் ஏற்படுவது கவலை அளிக்கிறது.

இந்திய விமானப் படை, மத்திய அரசுக்கு சொந்தமானது; எனக்கு சொந்தமானதல்ல. ராணுவத்துக்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேநேரத்தில், மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு, அனைத்து திட்டங்களையும் மறு ஆய்வு செய்கிறது. இது, வரவேற்கத்தக்க விஷயம். ராணுவ திட்டங்களை செயல்படுத்தும் விஷயத்திலும், அரசு மறு ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவருக்கும், பொறுப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். மிகவும் அவசரமாக இந்த பணியை செய்ய வேண்டும். ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றை சேர்ந்த மூன்று தளபதிகளும், மாதத்திற்கு ஒரு முறையாவது பிரதமர் மோடியை சந்தித்து, ராணுவத்தில் உள்ள முக்கியமான பிரச்னை குறித்து, அவரிடம் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தேவையான விமானங்கள் எவ்வளவு?
* அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விமானப் படைகளுக்கு அடுத்தபடியாக, உலகின் நான்காவது பெரிய விமானப் படை என்ற பெருமை, இந்திய விமானப் படைக்கு உண்டு.
* இந்திய விமானப் படைக்கு, தற்போதைய நிலவரப்படி, 42 'ஸ்குவாட்ரன்' (பிரிவு) விமானங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 34 பிரிவுகள் தான் கைவசம் உள்ளன.
* கடந்த, 2012ல், பாதுகாப்பு துறைக்கான, பார்லி., நிலைக்குழுவே, தன் அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.
* கைவசம் உள்ள போர் விமானங்களில் சில விமானங்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. மேலும் சில விமானங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, பழுதாகி விட்டன.
* போர் விமானங்கள் மட்டுமல்லாமல், அவற்றை இயக்கும் பைலட்டுகளின் எண்ணிக்கையும், தேவையை விட குறைவாக உள்ளது.
* 'இந்தியா, தன் வடக்கு எல்லை பகுதியில், மரபு சார்ந்த ஒரு போரை விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும். அதை எதிர்கொள்வதற்கு இந்திய விமானப் படை தயாராக வேண்டும்' என, அமெரிக்காவைச் சேர்ந்த, 'கார்னிகே பவுண்டேஷன்' என்ற அமைப்பு, சமீபத்தில் தெரிவித்துள்ளது.
*ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கும் திட்டப் பணிகள், மிகவும் தாமதமாக நடக்கின்றன.
*அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால், இந்திய விமானப் படையில் உள்ள ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
*குறிப்பிட்ட காலத்திற்குள் விமானங்களை வாங்க முடியாததால், கைவசம் உள்ள விமானங்களே, நவீனப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
*இதுபோன்ற பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்பதே, ராணுவ தளபதி அரூப் ராகாவின் கோரிக்கை.


அச்சுறுத்தலை முறியடிக்க தயார்:

இந்திய விமானப்படை தளபதி அரூப் ராகா பேசுகையில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், அந்தந்த நாட்டு ராணுவத்தினரின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு, இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது: லடாக் பகுதியில், நவீன விமானப்படை தளம் அமைக்கப்படுகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்த தளம் செயல்பாட்டிற்கு வரும். கார்கில் பகுதியிலும், விமானப்படை தளம் அமைக்கப்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களில், ஆறு விமானப்படை தளங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மூன்று திட்டங்களும் அமலுக்கு வந்தால் சீனா, பாக்., ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலை, நாம் முறியடிக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai Subbu - Coimbatore,இந்தியா
05-அக்-201411:22:18 IST Report Abuse
Kovai Subbu செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் விட்ட நமது விஞ்ஞானிகளுக்கு, நமது நாட்டின் தேவைக்கு வேண்டிய விமானங்களை தயாரிக்க முடியாமல் போனது மிகவும் துரதிஷ்டமே. அதுதான் முடியவில்லை, பிற நாடுகளிடம் இருந்து காசு கொடுத்து வாங்க கூட நமது அரசியல்வாதிகள் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டால், நமது பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் தன் உயிரை பணயம் வைத்து எல்லையில் போராடும் நமது படைகளின் நிலையை கண்டு வருந்துவதை தவிர ஒட்டு போட்ட மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
05-அக்-201410:57:44 IST Report Abuse
Balagiri இதுவெல்லாம் வெளியில் பேச வேண்டிய விஷயமா? இந்த மாதிரி பேசிய வி.கே சிங் ஐ அன்றே கண்டித்து பதவி நீக்கம் செய்து உள்ளே தள்ளியிருந்தால் இவருக்கு இப்படி பேச துணிவு வந்திருக்காது. படை வீரர்களின் தைரியத்தை குலைக்கும் வகையில் ஆண்டு விழா கூட்டத்தில் பேசியுள்ளார். இதன் மூலம் யாருக்கு தகவல் அனுப்புகிறார்? சைனாவிற்கா அல்லது பாகிஸ்தானிற்கா அல்லது ஆயுத வியாபாரிகளுக்கா? இது தான் ஜனநாயகமா? கணவன் மனைவி உறவை போல அறைக்குள் நடப்பது அறைக்குள் தான் நடக்க வேண்டும், பொது இடத்தில மேடை போட்டு அல்ல, இவர் வி கே சிங் போல அரசியல் ஆதாயம் தேடுகிறார், மோடி மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
murugan - Chennai ,இந்தியா
05-அக்-201410:01:55 IST Report Abuse
murugan அதுவும் சரி தான் ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் விமானப்படை தளபதி இது போல வெளிப்படையா பேசுவது துரதிஷ்ட்ட வசமானது எப்படி 3 முக்கிய தளபதிகளும் ஒண்ணா சேர்ந்து பேசக்கூடாதோ அது போலத்தான் இதுவும் பிரதமரிடம் தனிமையில் சந்தித்து கேட்க வேண்டிய கோரிக்கைகள். அப்படி அவர் நேரம் ஒதுக்கித்தர வில்லையெனில் ஒங்க ராணுவ அமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X