சட்டைக்கு முன்னூறு... மொட்டைக்கு மூவாயிரம்!| Dinamalar

சட்டைக்கு முன்னூறு... மொட்டைக்கு மூவாயிரம்!

Added : அக் 08, 2014
Share
அக்கா! எனக்கு...'ஸ்ட்ராங்கா' ஒரு டீ...உனக்கு என்ன வேணும்?,'' அவிநாசி ரோட்டில், 'சாய்' ரெஸ்டாரன்ட்டில், 'ஹாயாக' உட்கார்ந்தபடி, சித்ராவைக் கேட்டாள் மித்ரா. ''டீக்கடை வச்சவுங்க, டீ மாஸ்டர் எல்லாம், அரசியல்ல பெரிய பெரிய பொறுப்புக்கு வர்றாங்க. நீயும், நானும் டீ குடிச்சிட்டு, அரசியல் பேசுறதைத் தவிர, வேற எதுவும் பண்ணப்போறதில்லை. எனக்கும் 'டீ'யே சொல்லு...!'' என்றாள்
சட்டைக்கு முன்னூறு... மொட்டைக்கு மூவாயிரம்!
அக்கா! எனக்கு...'ஸ்ட்ராங்கா' ஒரு டீ...உனக்கு என்ன வேணும்?,''


அவிநாசி ரோட்டில், 'சாய்' ரெஸ்டாரன்ட்டில், 'ஹாயாக' உட்கார்ந்தபடி, சித்ராவைக் கேட்டாள் மித்ரா.


''டீக்கடை வச்சவுங்க, டீ மாஸ்டர் எல்லாம், அரசியல்ல பெரிய பெரிய பொறுப்புக்கு வர்றாங்க. நீயும், நானும் டீ குடிச்சிட்டு, அரசியல் பேசுறதைத் தவிர, வேற எதுவும் பண்ணப்போறதில்லை. எனக்கும் 'டீ'யே சொல்லு...!'' என்றாள் சித்ரா.


''ஏன்க்கா! அரசியல்னா அவ்ளோ போரடிக்குதா?'' என்றாள் மித்ரா.


''ஆணிணூஞுன்னு சொல்ல முடியாது; வெறுப் புன்னு வச்சுக்கோயேன்!'' என்றாள் சித்ரா.


''உன்னோட வெறுப்போட அர்த்தம் புரியுது. நம்ம என்ன செய்ய முடியும்?,'' என்றாள் மித்ரா.


''ஒண்ணும் செய்ய முடியாது தான்... ஆனா, இதையெல்லாம் வேடிக்கை பார்க்க கஷ்டமா இருக்கு. கோயம்புத்தூர்ல தினம் ஒரு கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துறாங்க; அதுக்கு, உண்மையா வர்றது கொஞ்சப்பேர் தான். கூட்டம் குறைஞ்சா, நம்ம பதவிக்கு ஆபத்தாயிருமோன்னு, பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேக்கிறது மாதிரி, பல வழியில ஆளைக் கூட்டுறாங்க. இப்பிடி கூட்டம் காமிச்சு, இவுங்க யாரை ஏமாத்துறாங்க?,'' என்றாள் சித்ரா.


''ஆமாக்கா! ஒவ்வொரு சங்கத்துக்காரங்களையும் கூப்பிட்டு, 'நீங்க என்னிக்கு கடை அடைக்கிறீங்க? நீங்க என்னிக்கு உண்ணாவிரதம் இருக்கப்போறீங்க?'ன்னு 'பவர்'ல இருக்கிறவுங்க கேட்டா, மத்தவுங்க என்ன பண்ணுவாங்க? கான்ட்ராக்டர்களுக்கெல்லாம், 'எஸ்.எம்.எஸ்.'சே வந்திருச்சாம்; உண்ணாவிரதத்துக்கு வரலேன்னா, ஒரு வேலையும் கிடைக்காது'ன்னு மிரட்டிருக்காங்க,''


''ஒரு 'ஸ்லம் ஏரியா'வுல இருந்து, சில ஆளுங்களை தினமும் ஒரு இடத்துக்குக் கூப்பிட்டுப் போய், கருப்புச் சட்டை போட்டு, உண்ணாவிரதத்துல கலந்துக்க வச்சிருக்காங்க; ராத்திரியாச்சுன்னா, கையில 300 ரூபா, ஒரு குவாட்டர், பிரியாணி கொடுத்திருவாங்களாம். மொட்டை போட்டவுங்களுக்கு, மூவாயிரமெல்லாம் கிடைச்சிருக்கு,''


''இது பரவாயில்லையே! வெளியாளுங்க...அவுங்களோட, ஒரு நாள் சம்பளத்துக்கு கிடைச்ச இழப்பீடுன்னு வச்சுக்கலாம். கவருமென்ட் பஸ்சு யூனியன் காரங்க, உண்ணாவிரதம் இருந்தாங்களே; அவுங்களுக்கு அன்னிக்கு வேலைக்குப் போகாமலே, சம்பளம் கொடுத்திருக்காங்க!,'' என்றாள் மித்ரா.


''ஆளுக்கு ஆளு அவுங்க விசுவாசத்தைக் காமிக்கிறாங்க. ஒரு சில பெரிய ஆபீசருங்க, தனக்குக் கீழ இருங்கிற ஆபீசர்ஸ், ஸ்டாஃப்களைக் கூப்பிட்டு, எல்லாரும் கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க'ன்னு சொல்லிருக்காங்க,'' என்றாள் சித்ரா.


''அக்கா! மேயர் எலக்ஷனுக்கு சீனியர் மினிஸ்டர்ஸ் எல்லாம் வந்தப்ப நடந்த ஒரு விஷயம், இப்போ வெளிய வந்து, பரபரப்பா ஓடுது தெரியுமா?,'' என்றாள் மித்ரா.


''ச்சும்மா 'டீஸர்' ஓட்டாம, மேட்டரைச் சொல்லுடி!'' என்று அவசரப்பட்டாள் சித்ரா.


''எலக்ஷன் டைம்ல ஆதரவு கேட்டு, பாஸ்டர் ஒருத்தரை, சீனியர் மினிஸ்டர் போய்ப் பார்த்தப்ப, 'அடுத்த சி.எம்.,நீங்கதான்'னு சொல்லி, கையக் குலுக்கிருக்காரு. உடனே, கைய வேகமா எடுத்துக்கிட்ட அந்த சீனியர், அங்கயிருந்து உடனே நகர்ந்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.


''அவரு சொன்னது நடந்துச்சா? நடக்கலியா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.


''அது அவரோட இருந்தவுங்களுக்குத் தெரியும். ஆனா, அந்த சீனியர், இப்ப அதெல்லாம் நினைச்சுப் பார்ப்பாரா என்னன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.


''சரி...அதை விடு! மேயரு, சேர்மன், கவுன்சிலருக எல்லாம் கூண்டோட ராஜிநாமா செய்யப் போறாங்கன்னு ஒரு தகவல் பரவுச்சே...அது யாரு கிளப்பி விட்டதாம்?,'' என்றாள் சித்ரா.


''அது என்னவோ, சென்னையில இருந்து கிளப்புனதுங்கிறாங்க; அப்பிடியே மத்த ஊருல பண்ணுனாலும், இங்க இருக்கிறவுங்களைப் பண்ண விடுவாங்களா? ஏன்னா, எலக்ஷன் முடிஞ்சே ஒரு மாசம் கூட முடியலியே!,'' என்றாள் மித்ரா.


''மேடத்துக்காக தீக்குளிப்பேன்; உசுரைக் கொடுப்பேன்னு சொல்ற யாராவது ஒரு கவுன்சிலராவது, 'எல்லாருக்கும் முன் மாதிரியா, நான் என் பதவியை ராஜிநாமா பண்றேன்'னு சொல்லுவாங்களான்னு நானும் பாக்குறேன். ஒருத்தரும் அசையுறது மாதிரி தெரியலையே!,'' என்று சிரித்தாள் சித்ரா.


''கேட்டா....'கட்சித்தலைமை சொன்னா, நாங்க செய்வோம்'னு சொல்றாங்க. எவ்ளோ விவரமான பதில்னு பார்த்தியா?,'' என்றாள் மித்ரா.


''கருணாநிதியோட 'லேட்' ரியாக்ஷனுக்கு, கோயம்புத்தூர்ல அவுங்க கட்சிக்காரங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டியா?,'' என்றாள் சித்ரா.


''அவுங்க...'இது என்ன அறிக்கை, ஒரே வழவழா கொழகொழாவா இருக்கே'ன்னு கொந்தளிக்கிறாங்க. ஏற்கனவே, கோயம்புத்தூரை நாலு மாவட்டமாப் பிரிச்சு விட்டதோட சரி; எப்போ எலக்ஷன் நடத்தப்போறாங்க?ன்னு ஒரு தகவலும் இல்லை. அதனால, 'எலக்ஷனுக்குள்ள கட்சி எந்திரிக்கிற மாதிரி தெரியலையே'ன்னு புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.


''மறந்தே போயிட்டேன்...நம்ம ஊருக்கு எலக்ஷன் வேலைக்கு வந்த ஒரு வி.ஐ.பி., ஏதோ 400 யூனிட்ல, ஒரு யூனிட்டுக்கு, ரெண்டு லட்ச ரூபா கொடுங்கன்னு, சொல்லிட்டுப் போனதா சொன்னியே. யாருடி அது...என்னால கண்டு பிடிக்க முடியலை,'' என்றாள் சித்ரா.


''தோல்விய ஒத்துக்கிட்டியா? நானே சொல்றேன்...ஒரு யூனிட்டுக்கு 2 லட்ச ரூபா கொடுத்தா தான் 'பொல்யூஷன்' டிபார்ட்மென்ட்ல 'ரினிவல்' தருவோம்னு, பவுண்டரிகாரங்ககிட்ட தான் சொன்னதா தகவல். சொன்னவரு....!''


''அதை யாரு சொல்லிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். தனி மரம் 'தோப்பு' ஆகாதும்பாங்க. இவுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து போராடுனா, அந்த தோப்புக்கே ஆப்பு வைக்கலாம். ஆனா, நம்ம ஊரு இண்டஸ்ட்ரிகாரங்க தான் தொடை நடுங்கிகளாச்சே. இப்பிடியே பயந்து பயந்தே தான், இந்த ஊரை இப்பிடி ஆக்கி வச்சிருக்காங்க. ஊருக்குள்ள சந்துக்கு ஒரு சங்கம் வச்சிருக்காங்க. ஆனா, பவர்கட், பணம் பிடுங்குற விஷயம் இதையெல்லாம் எதிர்த்து, ஒண்ணா நின்னு போராடுறதுல ஒத்துமை இல்லையே!,''


''இருக்கப்பட்டவுங்க கொடுக்க வேண்டியது தான். ஆனா, பவுண்டரி காரங்க ரொம்பப் பாவம் தான். இந்த வசூல்ல தப்பிச்சிட்டாங்கன்னா, நம்ம புலியகுளம் புள்ளையாருக்கு 108 தேங்கா உடைக்கச் சொல்ல வேண்டியது தான்!,'' என்றாள் மித்ரா.


''நீ 108 ன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருதுடி மித்து! ஏழை, பாழைங்களுக்கு இலவசமா உதவுறதுக்காக துவங்குன 108 ஆம்புலன்ஸ்சை வச்சு, நம்ம ஊருல பல பிரைவேட் ஆஸ்பிடல்காரங்க வலுவா சம்பாதிக்கிறாங்கன்னு பேசுனோமே...ஞாபகமிருக்கா? அதுல நடந்த 'என்கொய்ரி'ல பல பேரு மாட்டிருக்காங்க!,''


''இதுல எப்பிடிக்கா...பிரைவேட் ஆஸ்பிடல்காரங்க மாட்டுவாங்க?''


''முழுசாக் கேளுடி! 108க்கு எந்த தேதியில, எங்கெங்க இருந்து 'கால்ஸ்' வந்துச்சு, யாரை எங்க 'அட்மிட்' பண்ணாங்கன்னு விசாரிச்சதுல ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கு. 108க்கு போன் பண்ணுன இடங்களுக்கு, பிரைவேட் ஆஸ்பிடல் ஆம்புலன்ஸ் போய், 'நாங்களும் ஊணூஞுஞு யாதான் கூப்பிட்டுப்போறோம்'னு சொல்லி, பிரைவேட் ஆஸ்பிடலுக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க!,'' என்றாள் சித்ரா.


''அடடா...சூப்பர் ஏஜென்ட் வேலையால்ல இருக்கு. ஆஸ்பிடலைப் பத்தி பேசவும் தான், ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. நம்ம ஆவின் வி.ஐ.பி., 'அம்மா'வுக்கு முடியலைன்னதும் 'பல்ஸ்' இறங்கிப்போய், ஆஸ்பிடல்ல 'அட்மிட்' ஆயிட்டாராம் தெரியுமா?,'' என்றாள் மித்ரா.


''நிஜமாவே, அதனால தான் 'பல்ஸ்' இறங்குச்சா? இல்லேன்னா, மெட்ராஸ்ல 'ஆவின்' மேட்டர் விசாரணை தீவிரமானதுல, இறங்கிருச்சா?'' என்றாள் சித்ரா.


''அக்கா...! அந்த லேடி போலீஸ் ஆபீசர் யார்ன்னு நீ சொல்லவே இல்லையே!,'' என்று திடீரென நினைவுக்கு வந்தவளாய் கேட்டாள் மித்ரா.


''இன்னொரு நாளைக்கு 'ஃப்ரியா' இருக்கிறப்ப, அதைப்பத்தி விரிவாச் சொல்றேன்!'' என்ற சித்ரா, 'பூனை வெளிய வந்துருச்சு பார்த்தியா?' என்று ரகசியமாகக் கேட்டாள்.


''ஆளும்கட்சியில புகையுற கோஷ்டிப் பூசல் மேட்டரைச் சொல்றியா? அதுதான், ஊரறிஞ்ச ரகசியமாயிருச்சே. ஒரே பப்ளிசிட்டி பனிப்போரால்ல இருக்கு!,'' என்றாள் மித்ரா.


''சிட்டிக்குள்ள சிக்னலாப் பாத்து, பேனர் வச்சிருக்காரே. அவரைச் சொல்றியா? இதைத்தான் 'உள்ளே வெளியே'ன்னு சொல்லுவாங்களோ?,'' என்று சிரித்த சித்ரா, 'சரி! டீ ஆறப்போகுது...குடி...கிளம்பலாம்!'' என்றாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X