""நம்மூர்ல, தெனமும் ஒரு போராட்டம் நடத்துறதுனால, கடை இருக்குமா? இருக்காதான்னு ஜனங்க குழப்பத்துல இருக்காங்க. கடை வீதிக்கு போறதுக்கே தயங்குறாங்க,'' என, வீட்டுக்குள் நுழைந்ததும், விவாதத்தை துவக்கினாள் சித்ரா.
சூடா இஞ்சி டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ""ஏன்... அறவழி போராட்டம் தானே நடத்துறாங்க. பிரச்னை ஏதுமில்லையே,'' என்றாள்.
""பிரச்னை ஏதுமில்லை. போக்குவரத்து போலீஸ்காரங்கதான் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. ஊர்க்காவல் படையில் இருக்கற பலரும் விலகல் கடிதம் கொடுத்துட்டிருக்காங்க. அதில் இருக்கற பலரும் ஒழுங்கா பணிக்கு வர்றதில்லை,'' என்றாள் சித்ரா.
"ஏன்... அவங்களுக்கு என்ன பிரச்னை,'' என, கேள்வி
எழுப்பினாள் மித்ரா.
""ஊர்க்காவல் படைக்கு புதுசா
ஏரியா கமாண்டர் நியமிச்சிருக்காங்க. அரசியல் பின்னணி இருக்கிறவங்க யாரும், இந்த பதவிக்கு வரக்கூடாது. ஆனா, ஆளும்கட்சிக்கு ஆதரவா இயங்கும் ஒரு அமைப்பை சேர்ந்த
வரோட மகனை நியமிச்சிருக்காங்க. இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாதுன்னு "மெயின்டெய்ன்' பண்றாங்க,'' என்றாள் சித்ரா.
""அது சரி... அதுக்கும்,
டூட்டி பார்க்கறவங்களுக்கும்
என்ன பிரச்னை,'' என துருவிக்கேட்டாள் மித்ரா.
""சஸ்பெண்ட் செய்யப்பட்ட,
தனக்கு வேண்டப்பட்டவங்களை
எந்த விளக்கமும் கேட்காமல், மறுபடியும் டூட்டிக்கு சேர்த்திருக்கார். சஸ்பெண்ட் செய்ய காரணமானவங்க சிலர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செஞ்சிருக்கார். இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, 15 பேர் ராஜினாமா கொடுத்திருக்காங்க. போலீஸ் வட்டாரத்தில் இந்த பிரச்னைதான் ஓடிக்கிட்டிருக்கு,'' என்று கூறி விட்டு, கோப்பையிலிருந்த டீயை உறிஞ்சியவாறு, ""தனியார் பள்ளிகளுக்கு இன்னைக்கு விடுமுறைன்னு சொன்னாங்க; அப்புறம் வாபஸ் வாங்கிட்டாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஆமாக்கா... ஒவ்வொரு அமைப்பை சேர்ந்தவங்களும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி, தங்களது ஆதரவை பதிவு செய்றாங்க. பள்ளிக்கூடம்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. புதுசா வந்திருக்கிற கல்வி அதிகாரி, மாவட்டம் முழுவதும் ஒரு ரவுண்ட் அடிச்சிருக்கார். சில பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்திருக்கார். சில டீச்சர்ஸ், பத்தாம் வகுப்புக்கு டியூசன் நடத்துறதுல ஆர்வமா இருக்கறது தெரியவந்துருக்கு; டென்ஷனான அந்த அதிகாரி, அங்கேயே, "செம டோஸ்' விட்டாராம். சில நாள் கழிச்சு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆசிரியர் சங்க குரூப், கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு, பிரச்னை செய்ய திட்டம் போட்டிருக்கு. அப்படி செஞ்சா, பிரச்னை இன்னும் பெருசாயிடும்ன்னு சீனியர் ஆசிரியர்கள் சொல்லி அந்த குரூப்பை தடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""கரெக்டா இருக்கற ஆபீசரை, யாருக்குதான் பிடிக்குது,'' என்றபடி, ""கலெக்டர் ஆபீசுல ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்குது,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
உடனே குறுக்கிட்ட மித்ரா, ""அதென்ன... புதுசா... காலம் காலமா நடந்துக்கிட்டிருக்கிற நிகழ்வுதானே... அதுல என்ன இருக்கு,'' என அலுத்துக் கொண்டாள்.
""குறைதீர்ப்பு கூட்டம், காலை 11.00 மணிக்கு துவங்குது; கலெக்டரை தவிர மத்த அதிகாரிங்க வந்துடுறாங்க. ஆனா, 12.00 மணிக்குதான் கலெக்டர் வர்றாரு. அவர் கையிலதான் மனு கொடுப் போம்னு, சிலர் வெகுநேரம் காத்திருக்
குறாங்க. அதனால, ஒவ்வொரு வாரமும் மீட்டிங் முடியற துக்கு ரொம்ப லேட்டாகுது; பசி மயக்கத்துல அதிகாரிக, களைப் படைஞ்சு புலம்ப ஆரம்பிச்சிடுறாங்க. இதுல, பொதுமக்களை குரூப், குரூப்பா சிலர் அழைச்சிட்டு வர்றாங்க. எங்களுக்கு உயரதிகாரிக ரொம்ப பழக்கம்; நாங்க சொன்னா நடவடிக்கை எடுப்பாங் கன்னு சொல்லி, ஜனங் களிடம் பணத்தை கறந்திடுறாங்க. இவ்விஷயத் தில், கலெக்டர் கூடுதல் கவனம் எடுக்கணும்னு அதிகாரிகள் சொல்லிக் கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE