சாமான்ய மக்களின் சகோதரன்:இன்று உலக தபால் தினம்-

Updated : அக் 09, 2014 | Added : அக் 09, 2014 | கருத்துகள் (2) | |
Advertisement
நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால்
 சாமான்ய மக்களின் சகோதரன்:இன்று உலக தபால் தினம்-

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால் மூலமே தெரிவிக்கப்பட்டது.

தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 -- 15) கடைப்பிடிக்கப்படுகிறது.


உலகில் முதலிடம்:

இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.


ஈடு தர முடியுமா:

ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை செய்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugadoss Chidambaram - VILLUPURAM,இந்தியா
09-அக்-201418:33:02 IST Report Abuse
Murugadoss Chidambaram தொழில் நுட்பம் வளராத காலத்தில் தமிழகத்திலுள்ள உறவுகளிடம் பதினைந்து காசிலும், பிற மாநிலங்களிலுள்ளவர்களை 50 காசில் இணைத்தது மிகப்பெரிய சாதனை.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-அக்-201412:02:57 IST Report Abuse
g.s,rajan மீண்டும் "சார் போஸ்ட்" எப்போது கேட்கும்??? என்ற ஆவல்தான் மக்கள் மனதில் இன்று எழுகிறது. ஜி.எஸ்.ராஜன், சென்னை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X