விதை நமது கையில் வேண்டும்!| Dinamalar

விதை நமது கையில் வேண்டும்!

Added : அக் 11, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விதை நமது கையில் வேண்டும்!

பசுமை கொஞ்சும் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், தற்போது (ஜூன் 18 முதல் 24) வரை நிகழ்ந்து வரும் சத்குரு தரிசன நிகழ்ச்சியின்போது விவசாயி ஒருவர் எழுந்து சத்குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார். விவசாயமும் விவசாயிகளும் முன்னேற்றமடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதே அந்தக் கேள்வி.
சத்குரு கேள்விக்கு பதில் கூறுகையில், சுதந்திரம் அடைந்தபோது 33 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். 12,000 வருடங்களாக விவசாயம் செய்த பாரம்பரியம் நமது தமிழ்ப் பாரம்பரியம் எனக் கூறிய அவர், விவசாயத்தை மேம்படுத்த நவீன தொழிற் கருவிகளைக் கையாள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில், "விவசாயத்தை நாம் தொழிலாக அல்லாமல், வாழ்வின் ஒரு அம்சமாகச் செய்து வந்தோம்; தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் இளைஞர்கள் ஈஷாவுடன் கைகோர்க்க வேண்டும். என்னிடம் 5 ஏக்கரில் பெறும் விளைச்சலை ஒரு ஏக்கரில் பெறக்கூடிய வழிமுறை உள்ளது. நீங்கள் என்னுடன் கைகோர்த்தால் நான் உங்களுக்குக் கற்றுத்தரக் காத்திருக்கிறேன்" என்றார்.விதை நமது கையில் இருக்க வேண்டும்!:

விவசாயிகள், இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது, "என் தலையை அடமானம் வைத்து செய்துவிடுவேன்" என்று சொல்வார்களே தவிர, "விதையை அடமானம் வைத்து செய்வேன்" என்று சொல்வதில்லை. எப்படிப்பட இக்கட்டான சூழ்நிலையிலும் விதை நெல்லை விற்கக் கூடாது என்பது ஒரு விவசாயிக்குத் தெரியும்! ஏனென்றால், அது வெறும் விதைகள் மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையே அந்த விதைகள் தான். மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே உள்ளது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.


சத்குரு அவர்கள் தரிசன நேரத்தில் பேசியபோது, விதைகளை வெளிநாட்டினர் கையிலிருந்து பெறும் நிலைக்கு நாம் சென்று விட்டால், நமக்கு நடக்கவிருக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பேசினார். மழை பெய்தாலும், நிலம் நம்மிடம் இருந்தாலும், விவசாயம் செய்யும் வழிமுறைகள் தெரிந்திருந்தாலும் விதைகள் நம் கையில் இல்லையென்றால், எதிர்காலத்தில் பசியால் மக்கள் சாகும் அபாயம் உள்ளதைக் கூறி எச்சரித்தார். விதைகள் எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.


ஈஷா பசுமைக் கரங்கள்:

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5/-) வழங்கி வருகிறது.
ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளின் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugaiya Kanthaiya - Maddington,ஆஸ்திரேலியா
12-அக்-201403:20:14 IST Report Abuse
Murugaiya Kanthaiya உண்மைதான். ஆள் பற்றாக்குறை, குறைந்த தண்ணீர், தரமற்ற விதை இவற்றால் சிறு விவசாயிகள் பெருமளவு நட்டமடைகிரார்கள். விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெறும்வரை விவசாயிகளுக்கு வாழ்வில்லை.காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுகின்றன. பாசன கால்வாய்கள் மறைகின்றன. ஈஷாவின் பொறுப்பான செயல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றது. நவீன இயந்திரங்களின் பயன்பாடு பெருமளவு எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கும் போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி தமிழகத்தில் சாத்தியப்படும். ஈஷாவுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X