பொது செய்தி

இந்தியா

விமானம் தரையிறங்கும் போதே மொபைல் போனில் பேச சலுகை

Updated : அக் 19, 2010 | Added : அக் 19, 2010 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி:விமானம் தரையிறங்கும் போதே பயணிகள், மொபைல் போனில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிப்பவர்கள் விமானம் தரையிறங்கிய பின் கதவுகள் திறந்த பின்னரே மொபைல் போனில் பேச வேண்டும், என்ற நடைமுறை தற்போது உள்ளது. "இந்த நடைமுறையில் விரைவில் திருத்தம் செய்யப்படும்'என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்திருந்தார்.விமானம்

புதுடில்லி:விமானம் தரையிறங்கும் போதே பயணிகள், மொபைல் போனில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிப்பவர்கள் விமானம் தரையிறங்கிய பின் கதவுகள் திறந்த பின்னரே மொபைல் போனில் பேச வேண்டும், என்ற நடைமுறை தற்போது உள்ளது. "இந்த நடைமுறையில் விரைவில் திருத்தம் செய்யப்படும்'என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்திருந்தார்.விமானம் தரையிறங்கும் போதே பயணிகள் மொபைல் போனில் பேசலாம், என விமான போக்குவரத்துறை இயக்குனரகம், தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடைமுறை வரும் 22ம் தேதி முதல் பின்பற்றப்பட உள்ளது.மொபைல் போன் சிக்னல்களால் விமானிகளின் அறைக்கும் தரை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால், விமானத்தில் மொபைல் போன் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி விமானம் சம்பந்தப்பட்ட விமான நிலையத்தை நெருங்கியதும் பைலட்டின் அறையிலிருந்து பயணிகளின் இருக்கைகள் அமைந்துள்ள பகுதிக்கு மொபைல் போனில் பேசுவதற்கு அனுமதி வழங்கும் வகையில் சிக்னல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கும் போதே பயணிகள் மொபைல் போனில் பேசலாம்.கடுமையான மேக மூட்டம் உள்ள நிலையில் இந்த புதிய நடைமுறை பொருந்தாது. பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.


Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே. suyambu - chennai,இந்தியா
19-அக்-201022:58:58 IST Report Abuse
கே. suyambu mr. prabhu patel please do not confuse the passengers. you are requested to give priority for passenger safety not your safety. general public will cooperate for any safety but the politicians due to lack of knowledge will not cooperate.
Rate this:
Cancel
hussain - jahra,குவைத்
19-அக்-201022:00:24 IST Report Abuse
hussain ஹலோ ,இதோ நான் வந்தாச்சு ..வந்தாச்சு ஹையோ இதல்லாம் தேவையா ???????
Rate this:
Cancel
ஜெயக்குமார் - பெருமாள்பட்டி,இந்தியா
19-அக்-201017:50:55 IST Report Abuse
ஜெயக்குமார் அப்டியே... விமானம் தரையிறங்கும் போது கதவை திறந்து கீழே குதிக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கவும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X