கண்ணுலயே கேமரா... கார்ப்பரேஷன்ல... கங்காணி வேலை நடக்குது சூப்பரா! | Dinamalar

கண்ணுலயே கேமரா... கார்ப்பரேஷன்ல... 'கங்காணி' வேலை நடக்குது சூப்பரா!

Added : அக் 14, 2014
Share
ஏன்டி...அந்த கடையில டிரஸ் எடுக்க வேண்டாங்கிற...நல்லா இருக்காதா? காஸ்ட்லியா இருக்குமா?,''ஒப்பணக்கார வீதியில், வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மித்ராவைப் பார்த்து, பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா கேட்டாள்.''அந்த கடையில டிரஸ்சும் நல்லா இருக்கும்; காஸ்ட்லியாவும் இருக்கும். அதுக்காக நான் சொல்லலை. நம்மள மாதிரி டூவீலர்ல வர்றவுங்களுக்கு எல்லாம், அங்க 'பார்க்கிங்' கொடுக்க
கண்ணுலயே கேமரா... கார்ப்பரேஷன்ல... 'கங்காணி' வேலை நடக்குது சூப்பரா!

ஏன்டி...அந்த கடையில டிரஸ் எடுக்க வேண்டாங்கிற...நல்லா இருக்காதா? காஸ்ட்லியா இருக்குமா?,''
ஒப்பணக்கார வீதியில், வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மித்ராவைப் பார்த்து, பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா கேட்டாள்.
''அந்த கடையில டிரஸ்சும் நல்லா இருக்கும்; காஸ்ட்லியாவும் இருக்கும். அதுக்காக நான் சொல்லலை. நம்மள மாதிரி டூவீலர்ல வர்றவுங்களுக்கு எல்லாம், அங்க 'பார்க்கிங்' கொடுக்க மாட்டாங்க. கடைக்கு முன்னாலயும் வண்டிய நிறுத்த விட மாட்டாங்க. அப்புறம் எதுக்கு அந்த கடையில எடுக்கணும்?,'' என்று கொதித்தாள் மித்ரா.
''கரெக்ட் மித்து! நம்மளைப் பாத்தா, அவுங்களுக்கு மனுஷங்களாத் தெரியுறதில்லை. இவ்ளோ பெரிய கட்டடம் கட்டுனதுல, 'பார்க்கிங்' இடம் விடாமலா கட்டிருப்பாங்க. எல்லா இடத்தையும் இப்போ கடையாக்கிட்டாங்க. கார்ப்பரேஷன்காரங்க காசை வாங்கிட்டுப் போயிட்டாங்க. கடைசியில, ரோட்டுல வண்டிய நிறுத்த, நாயா அலையுறது நாமதான்,'' என்றாள் சித்ரா.
''நாய்ன்னு நீ சொல்லவும் தான், ஞாபகம் வருது. ரேஸ்கோர்ஸ்ல பல ஆயிரம் மக்கள் 'வாக்கிங்' போற வழியில, பத்துப் பதினைஞ்சு நாய்ங்களும் குறுக்கால 'ஜாக்கிங்' போகுதுங்க. எல்லா நாய்களும், கூடி 'மீட்டிங்' போடுறதே கலெக்டர் பங்களா முன்னால தான். கவுன்சிலரு, மண்டலத் தலைவரெல்லாம் 'வாக்கிங்' போறாங்க. அவுங்க கண்ணுல இதெல்லாம் படுறதேயில்லையா'' என்றாள் மித்ரா.
''காலனி மேயரு, தெரு நாய் பிரச்னையப் பேசிப் பேசியே பெரிய ஆளானவரு. புது மேயரு, இப்பதான களமே இறங்கிருக்காரு!,'' என்றாள் சித்ரா.
''பழையவரை மாதிரியே, இவரும் குளத்தையெல்லாம் ஆய்வு பண்றாரு. இப்பிடியே, ஒவ்வொருத்தரா ஆய்வு பண்றாங்க. வேலைதான் ஒண்ணும் நடக்கலை,'' என்றாள் மித்ரா.
ஒரு இடம் கிடைக்க...வண்டியை நிறுத்தி விட்டு, ரோட்டோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புக்குள் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
''மித்து! புது கமிஷனரும் ரொம்பவே 'ஆக்டிவ்'வா இருக்கிறதா கேள்விப்பட்டேன்; ரெண்டு பேரும் சேர்ந்து, நிறையா இடங்களுக்கு 'இன்ஸ்பெக்ஷன்' போறாங்க. உடனடியா, நடவடிக்கையும் எடுக்குறாங்க. ஆனா, இவுங்க ரெண்டு பேரையும் 'வாட்ச்' பண்ணி, கார்ப்பரேஷன்ல நடக்குற சமாச்சாரங்களை எல்லாம், ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கு அப்பப்போ 'அப்டேட்' பண்ற வேலைய மட்டும் தான், லேடி ஆபீசர் பண்றாங்களாமே!,''
''ஆனா...கட்டட விவகாரங்களைக் கவனிக்கிற ஆபீசர் தான், இந்த வேலையப் பண்றாருன்னு நான் கேள்விப்பட்டேன்!,''
''அப்படின்னா, அங்கங்க 'கேமரா' வச்சுக் கண்காணிக்கிறாங்கன்னு சொல்லு!'' என்றாள் சித்ரா.
''அதை விடு! குப்பை லாரிகளுக்கு 41 மாசத்துல 20 கோடி ரூபா வாடகையா மட்டும் கொடுத்திருக்காங்க. அதுக்கு, 137 லாரியே வாங்கிருக்கலாம்னு டேனியல் யேசுதாஸ்னு ஆர்.டி.ஐ., ஆர்வலர் ஒருத்தரு, புதுசா ஒரு பூகம்பத்தைக் கெளப்பிருக்காரு பார்த்தியா?,'' என்றாள் மித்ரா.
''இப்பிடி, வருஷா வருஷம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறதுக்குப் பதிலா, சிட்டி கிளீனிங் பொறுப்பையே தனியாருக்குக் கொடுத்துட்டா, ஊரும் நல்லாருக்கும்; குப்பையில கோடி கோடியா கொள்ளையடிக்கிறதும் குறையும்!,'' என்றாள் சித்ரா.
''அய்யய்யோ....நீ வேற! புது கமிஷனரு, கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு புதுசா வண்டி வாங்குறதையே நிறுத்திட்டு, எல்லாருக்கும் வாடகைக்கு வண்டி எடுத்து ஓட்டுனா, எவ்ளோ செலவாகும்னு கணக்குப் பண்ணச் சொல்லிருக்காராம். இது மிச்சம் பிடிக்கிறதுக்கா, இல்லேன்னா, அதுலயும் காசு அடிக்கிறதுக்கான்னு தெரியலை!,'' என்றாள் மித்ரா.
''அது சரி! ஊருக்குள்ள முள்ளும் மலரும் சேந்திருக்கு...ஒனக்கு விஷயம் தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''எதிரெதிர் கோஷ்டியைச் சேர்ந்தவுங்கன்னு இப்பிடிச் சொல்றியா? இல்லேன்னா பேர்க்காரணத்தோட சொல்றியா?'' என்று கேட்டாள் மித்ரா.
''ரெண்டும் தான். இதுவரைக்கும் எதிரெதிரா அரசியல் பண்ணி, அடுத்தடுத்து பதவியை இழந்த ரெண்டு பேரும் ஒண்ணு சேந்துட்டாங்க. ஒருத்தரு, மலரானவரு; மத்தவரைத் தான் ஊருக்கே தெரியுமே!,'' என்றாள் சித்ரா.
''ஒரு காலத்துல முள்ளா இருந்த அவரே, இப்போ மலரா மாறிட்டாரு. ஆனா, நல்லவுங்கன்னு பாராட்டு வாங்குனவுங்க, எல்லாரையும் வார்த்தையிலயே முள்ளா குத்துறாங்க!,'' என்றாள் மித்ரா.
''அப்பிடி யாருடி, முள்ளா குத்துறது?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''பீளமேட்டுல இருக்கிற ஒரு இளம் போலீஸ் ஆபீசர் தான். ரொம்பவே நேர்மையான ஆபீசர்னு பேரு வாங்குன அவருக்கு, விருது எல்லாம் கொடுத்தாங்க. ஆனா, ஸ்டேஷனுக்கு வர்றவுங்கள்ல யாரு நல்லவுங்க, யாரு கெட்டவுங்கன்னு எதையுமே பார்க்காம, எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுறாராம். சவுரிபாளையத்துல 'ரிசர்வ் சைட்'ல தண்ணியடிக்கிறவுங்களை தட்டிக்கேட்ட ஒரு சமூக சேவகரை, சில பேரு சேர்ந்து அடிச்சிருக்காங்க. ஸ்டேஷனுக்குப் போனப்ப, இவரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி பேசிருக்காரு!,'' என்றாள் மித்ரா.
''ஊருக்கு உழைக்கிறவங்களுக்கு, நம்ம ஊருல இதுதான் பரிசு போலயிருக்கு!,'' என்றாள் சித்ரா.
''அவரு மட்டுமா? நம்ம ஊரு பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருக்கிற ஒரு ஆபீசரும், இப்பிடித்தான்...யாரு, என்ன சந்தேகத்துக்காக அவரைப் பார்க்கப் போனாலும், மரியாதையில்லாமப் பேசி, அவமானப்படுத்தி அனுப்பிர்றாராம். வி.ஐ.பி.,யா, நல்லவுங்களான்னு எதையுமே பார்க்கிறதில்லையாம். பல பேரு, வருத்தப்படுறாங்க!,'' என்றாள் மித்ரா.
''ஆனா, அவரு நேர்மையான ஆபீசர்னு கேள்விப்பட்ருக்கனே!,'' என்றாள் சித்ரா.
''நேர்மையா இருந்தா மட்டும் போதுமா? மரியாதைக்குப் பேரு போன ஊருல...எப்பிடிப் பேசணும், நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?,'' என்றாள் மித்ரா.
''மித்து! நம்ம ஊரு யுனிவர்சிட்டியில, ஏகப்பட்ட மரத்தை வெட்டி வித்துட்டாங்கன்னு முன்னாடி பேசுனோமே...இப்போ இன்னொரு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு!,''
''என்னக்கா! பர்னிச்சர்களையும் வித்துட்டாங்களா?,''
''ஹய்ய்ய்யோ...! கற்பூர புத்திடி ஒனக்கு. கரெக்டா சொல்லிட்டியே...நிஜமாவே அதைத்தான் பண்ணிருக்காங்க. பழைய கட்டிலு, பீரோன்னு ஏகப்பட்ட பொருட்களை, 'டெண்டர்' விடாமலே வித்திருக்காங்க. ரிட்டயர்டு ஆபீசர் ஒருத்தரும், இப்போ இருக்கிற ஓ.ஏ.,ஒருத்தரும் தான் கூட்டணி அமைச்சு, இதுல 3 வருஷமா லட்ச லட்சமா கொள்ளை அடிக்கிறாங்களாம்!,'' என்றாள் சித்ரா.
''செய்வது துணிந்து செய்ன்னு பாரதியார் சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்களோ?,'' என்று வெடித்துச் சிரித்தாள் மித்ரா. அவளே தொடர்ந்தாள்...
''அக்கா! நம்ம ஊரு ஹவுசிங் போர்டுல, புதுமையா ஒரு வசூல் வேட்டைய ஆரம்பிச்சிருங்காங்க தெரியுமா?,''
''வாடகை வீடு 'அலாட்' பண்றதுக்கு லஞ்சம் கேக்குறாங்களா? அது தான் பழசாச்சே!,'' என்றாள் சித்ரா.
''அதில்லக்கா! ஐகோர்ட், சுப்ரீம்கோர்ட்ல எல்லாம் லேண்ட் ஓனர்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்த இடங்களையும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணக்கூடாதுன்னு அந்த டிபார்ட்மென்டுக்கு சர்வே நம்பர்களோட லெட்டர் வச்சிருக்காங்களாம். அதனால, பத்திரம் பதியப்போனா, ஹவுசிங் போர்டுல என்.ஓ.சி., வாங்கிட்டு வரச்சொல்றாங்க. அங்க...ஒவ்வொரு என்.ஓ.சி.,க்கும் ஒரு பெரிய 'அமவுன்ட்' கேக்குறாங்க. எல்லாம் பாண்டிய நாட்டுல இருந்து வந்த தலைவரோட உத்தரவாம்!,'' என்றாள் மித்ரா.
''மேடம் இல்லாததால, எல்லா டிபார்ட்மென்ட்லயுமே, வசூலு தாறுமாறா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். சிட்டி போலீஸ்ல, தீபாவளி வசூலு பட்டையக் கெளப்புதாமே!,'' என்றாள் சித்ரா.
''அது வழக்கமா நடக்குறது தான். நான் சொல்ற விஷயத்தைக் கேட்டா, நீயே அதிர்ந்து போயிருவ!,'' என்று பீடிகை போட்டாள் மித்ரா.
''டக்குன்னு விஷயத்தைச் சொல்லுடி...ஏதாவது ஒரு கடைக்குள்ள போவோம்!,'' என்றாள் சித்ரா.
''கலெக்ட்ரேட்ல நாலு ஒம்பது நம்பர்ல, ஆளும்கட்சி கொடியோட ஒரு வண்டி சுத்திட்டே இருக்கும் பார்த்திருக்கியா. அந்த வண்டியில வர்றவரோட ஆட்டம் தாங்கலையாம். பொள்ளாச்சியில ஒரு காலேஜ்ல லெக்சரரா இருக்காராம். ஆனா, மேயரை நான் தான் தூக்குனேன். அந்த மினிஸ்டர் சின்னப்பையன்; நான் தான், கிரிக்கெட் பேட், பால் எல்லாம் வாங்கிக் கொடுத்து, கட்சியை எப்பிடி வளர்க்கணும்னு கத்துக்கொடுத்தேன்கிறாராம்!'' என்றாள் மித்ரா.
''இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் யாரு தான் இனிமே கண்டிக்கப் போறாங்களோ? சரி வா! இந்த கடைக்குப் போவோம்!,'' என்று ஜவுளிக்கடைக்குள் மித்ராவை இழுத்துப்போனாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X