"மாசம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறவங்களுக்கு, அஞ்சாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற எங்களை பார்த்தா, ரொம்ப சாதாரணமாத்தான் தெரியுமுன்னு, அவங்க சொன்னதை கேட்டப்போ, மனசுக்கு கஷ்டமா போச்சுடீ,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
"என்ன நடந்துச்சுன்னு சொல்லாம இப்படி, மொட்டையா சொன்னா எப்படி?'' என, கடுகடுத்தாள் மித்ரா.
"சொல்றேன் கேளுடீ, என்னோட தோழி ஒருத்தி, திருப்பூருல இருக்கற அரசு பள்ளியில், "பார்ட் டைம்' டீச்சரா ஒர்க் பண்றா. அதாண்டி, வாரத்துல மூணு அரைநாள் வீதம், பன்னெண்டு அரைநாள் வேலை பார்க்க சொல்லுவாங்களே, அந்த டீச்சர்தான். அவளுக்கு வழக்கம்போல் இந்த மாசமும், சம்பளம் ரொம்ப லேட்டா வந்துச்சு. அதுவும், செக் போட்டு கொடுத்ததுல, ஏகப்பட்ட அடித்தல் திருத்தல்; அதை, பேங்க்ல "கலெக்ஷன்' போட்டு பணம் எடுக்கவும் முடியலை. அதைபத்தி கேக்கறதுக்கு, எஸ்.எஸ்.ஏ., ஆபீசுக்கு அவகூட போயிருந்தேன். இவளை மாதிரியே, நெறைய்யா பேருக்கு, அடித்தல், திருத்தலாசெக் கொடுத்ததால், எல்லோரும் ஆவேசமாக அங்கு வந்துட்டாங்க. ஒரே கூட்டமா இருந்துச்சு. அவங்களுக்கு சரியா "ரெஸ்பான்ஸ்' கொடுக்காம, எஸ்.எஸ்.ஏ.,ஆபீஸ்ல இருந்த ஊழியர்கள் "அசால்ட்டா' பேசுனாங்க. அப்போதான், அந்த டயலாக்கை, அங்கிருந்த ஒரு "பார்ட் டைம் டீச்சர் ஆவேசமாக பேசுனாங்க,'' என்று முடித்தாள் சித்ரா.
"பாவம், அவங்க சொல்றதிலேயும் நியாயம் இருக்குடி. இந்த காலத்துல அஞ்சாயிரம் ரூபாயை வெச்சுக்கிட்டு, மாசம் பூரா என்ன பண்ண முடியும்?'' என பெருமூச்சு விட்டாள் மித்ரா.
பேசிக்கொண்டே, "டிவி'யை ஆன் செய்தாள் சித்ரா. "தங்கபதக்கம்' சிவாஜி வசனம் பேசிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும், "போலீஸ் ஆபீஸருங்க யாரும், எந்த "பங்க்ஷன்'லயும் கலந்துக்க மாட்டேங்கிறாங்க. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, நழுவிடுறாங்க,'' என, அ<லுத்துக்கொண்டாள் சித்ரா.
"தீபாவளி நெருங்கிடுச்சுல்ல.... பாதுகாப்பு ஏற்பாடு செய்றதுல பிஸியா இருப்பாங்க,'' என்றாள் மித்ரா.
"அதெல்லாம் இல்லை. முன்னாள் முதல்வர் கைது சம்பவம், கட்சிக்காரங்களை மட்டுமில்ல... அனைத்து தரப்பையும் ஏதாவது ஒரு விதத்துல பாதிப்பு ஏற்படுத்தியிருக்கு. அதிகாரிகளும் "அப்செட்' ஆகிட்டாங்க. அதனால, விழாக்களில் கலந்துக்கிறதுக்கு, போலீஸ் அதிகாரிங்க ரொம்பவே யோசிக்கிறாங்க. சமீபத்தில் நடந்த விழாவில், போலீஸ் அதிகாரி பெயரை அச்சிட்டு அழைப்பிதழ் அடிச்சிருந்தாங்க. இப்ப இருக்கற நெலைமையில் நான் வர முடியாதுன்னு சொல்லிட்டு, அவரோட தம்பியை அனுப்பி வெச்சார்,'' என்றாள் சித்ரா.
"வழக்கமா "மைக்' கெடைச்சா, தனக்கு தெரிஞ்ச கவிதையை "ஒப்பிச்சு' கைதட்டல் வாங்குவாரே... அவரா... எனக்கு இன்னொரு தகவல் தெரியும்... சொல்லட்டுமா,'' என்றவாறு, அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, "நம்மூர்ல இருக்கிற போலீஸ் அதிகாரிகளில் ஒருத்தர், "புரமோஷன்' எதிர்பார்த்து காத்திருக்கார். அவரோட பதவியை கைப்பத்துறதுக்கு, இன்னொரு அதிகாரி தவமாய் தவமிருக்கார். அதனால, ஆளுங்கட்சியினரோடு முட்டல் மோதல் இல்லாமல், ரொம்பவே "சைலண்டா' இருக்கார்,'' என்றாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE