சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது

Added : அக் 15, 2014
Advertisement

தர்மபுரி: நிதி நிறுவன அதிபர், இளம்பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்களை, மொபைல் போனில் பகிர்ந்ததாக மொபைல்போன் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, மந்தவெளியை சேர்ந்தவர் சிவராஜ், 42; பாலக்கோட்டில் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நிதி நிறுவனத்தில், பெண்களுக்கு கடன் கொடுத்துள்ளார். வட்டி கொடுக்க முடியாத பெண்களை, பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து, சிவராஜை, பாலக்கோடு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிவராஜின் மொபைல்போனில், இளம் பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த, 'செக்ஸ்' காட்சிகள் பதிவு இருந்ததாக, பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகளை, மொபைலில் பகிர்ந்தது தொடர்பாக, பாலக்கோடு, மொபைல் போன் மைய உரிமையாளர் முன்னா என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
போலீசாரிடம், முன்னா கூறியுள்ளதாவது: சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன். இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடி வருகின்றனர். சிவராஜால் பாதிக்கப்பட்டதாக, நான்கு பெண்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X