அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., படம் அகற்றாவிட்டால் போராட்டம்: எச்சரிக்கும் தமிழிசை

Added : அக் 16, 2014 | கருத்துகள் (20)
Advertisement
ஜெ., படம் அகற்றாவிட்டால்  போராட்டம்: எச்சரிக்கும் தமிழிசை

''சட்டத்தின் முன் குற்றவாளியாக இருக்கும், ஜெயலலிதாவின் படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவில்லை என்றால், அதை அகற்றுவதற்காக, தமிழக பா.ஜ., போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும்,'' என, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பிரதமர் மோடியின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் படி, சென்னையில், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலக வளாகங்களை சுத்தப் படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர், தமிழக பா.ஜ.,வினர். அந்த வகையில் நேற்று, சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள, சின்ன ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில், பா.ஜ.,வினர் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற, தமிழிசை சவுந்தரராஜன், முடிவில் பேசியதாவது: பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும், துாய்மையாக்கும் பணியில் லட்சக்கணக்கான பா.ஜ.,வினர் களம் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும், இந்த பணி நாள்தோறும் நடந்து வருகிறது. மோடி சொல்லிவிட்டார் என்பதால், இந்தப் பணி நடைபெறுவதால், நாடு முழுவதும் துாய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, பா.ஜ.,வினர் கட்சியை விரைந்து வளர்த்தெடுக்கும் பணியையும் வேகமாக செய்ய வேண்டும்.ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதும், தமிழக மக்கள் மத்தியில், ஊழல் கட்சிகளை துரத்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றால், அதற்கு, ஊழல் இல்லாத கட்சிதான் வேண்டும். அதற்கான ஒரே கட்சி தமிழகத்தில் பா.ஜ., மட்டும் தான். மோடி சொன்னதும் துாய்மை இயக்கத்துக்காக, களமிறங்கி செயல்படும் பா.ஜ.,வினர், அவரது எண்ணமான தமிழகத்திலும், பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், பா.ஜ., வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதற்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்; பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். இன்றைக்கு அரியானா, மகாராஷ்டிராவிலும் கூட, பா.ஜ.,வின் ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகி விட்டது. அதேபோல, தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்துவதற்குரிய, சபதத்தை எடுத்து தமிழக பா.ஜ.,வினர் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் தவறான கொள்கைகளால்தான், விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததற்கும் மத்திய அரசுதான் காரணம் என, சொல்லியிருக்கிறார்.அவர் மத்திய அரசில் இருந்து கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் செய்யாத காரியங்களையெல்லாம், மோடி அரசு, 100 நாளில் செய்திருக்கிறது. விலைவாசி கட்டுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளது. தான் செய்ய முடியாததை மோடி அரசு செய்கிறது என்றதும், பொறாமையில் புலம்புகிறார்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னாலும், கிரிமினல் வழக்கில் குற்றவாளியாகி சிறையில் இருக்கும் ஒருவரின் படத்தை, இன்னமும் முதல்வராக அரசு அலுவலகங்களில் வைத்துள்ளனர். அது தவறு. உடனே அதை அகற்ற வேண்டும். இல்லையென்றால், அதை அகற்ற, பா.ஜ., போராட்டத்தில் இறங்கும். எனவே, முதல்வர் பன்னீர்செல்வம், அதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்கி செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saranath Kumar - chennai,இந்தியா
18-அக்-201406:02:45 IST Report Abuse
Saranath Kumar நேரு இந்திரா பிரதமராக இருக்கையில் பல அலுவகங்களில் அவர்கள் படம் இருந்தன . இப்போது நரேந்திர மோடி படம் வைக்கப்பட வேண்டும் . நாட்டை நல வழிக்கு இட்டுச்செல்லும் அவரை இப்போது கௌரவிக்காமல் எப்போது செய்வது ? .
Rate this:
Share this comment
Cancel
Elangovan Govindasamy - Jacksonville,யூ.எஸ்.ஏ
18-அக்-201403:18:41 IST Report Abuse
Elangovan Govindasamy உமக்கு நேரம் சரியில்லை மூடு உன் திருவாயை
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
17-அக்-201405:53:36 IST Report Abuse
Amirthalingam Sinniah தயவு செய்து படங்களை நீக்க வேண்டாம். ஆண்ட காலத்தை குறிப்பிட்டால் போதும். படங்களையும் சிலைஹளையும் உடைப்பது அநாகரிகம்::
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X