அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வராக தகுதி உள்ளவர் ஜெ., : வெங்கையா நாயுடு திடீர் கணிப்பு

Added : அக் 18, 2014
Advertisement

சென்னை : ஜெயலலிதா மீதான குற்றச் சாட்டுகள் நிரூ பிக்கப்படா விட்டால், அவர், மீண்டும் முதல்வராக தகுதி உள்ளவர்,'' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அமைச்சர் வெங்கையா நாயுடு, நிருபர் களுக்கு அளித்த பேட்டி:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. சட்டத்திற்கு முன், அனைவரும் சமம். நீதிமன்ற தீர்ப்பிற்கு, அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஜெயலலிதாவிற்கு, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமின் உத்தரவு குறித்து, யாரும் விமர்சிக்கக் கூடாது. ஜெயலலிதா முன்னாள் முதல்வர்; பிரபலமானவர். தமிழகத்தில், ஒரு முக்கிய கட்சியின் தலைவர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாவிட்டால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக தகுதி உள்ளவர். மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. பிரதமர் நரேந்திர மோடிக்குத் தான், அமைச்சரவையை மாற்றம் செய்ய முழு அதிகாரம் உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.ஐரோப்பிய நாடுகள், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது குறித்து, எனக்கு தெரியாது. மத்திய அரசு, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து, எந்த பரிசீலனையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X