பதிவு செய்த நாள் :
கருத்துகள் (84)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஜெயலலிதா சிறை சென்றதன் காரணமாக, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், ரஜினியை இழுப்பதன் மூலம், அந்த இடத்தை பா.ஜ., நிரப்பும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் கூறி வந்தனர்.

அதிர்ச்சி வைத்தியம்:
அதற்கு, 'செக்' வைக்கும் விதமாக, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ரஜினியும், மேனகாவும் எழுதிய கடிதங்களை, ஒரே நாளில் வெளியிட்டு, தமிழக பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வை எதிர்த்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., நேரடியாக மோதியது.அந்த மோதல் அதோடு நிற்காமல் தொடர்ந்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறை சென்றதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையொட்டி, பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.அதை கடுமையாக கண்டித்ததுடன், ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இந்த தீர்ப்பால், அரசியல் ரீதியாக எந்த கட்சிக்கு ஆதாயம் கிடைக்குமோ, அந்த கட்சியான தி.மு.க., கூட மவுனம் சாதித்தது.ஆனால், பா.ஜ., தரப்பில் அதிரடியான பேட்டியும், அறிக்கையும் வெளியாகி, அ.தி.மு.க., வட்டாரத்தை சூடாக்கியது.அதன் பலனாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில்,

பா.ஜ., தலைவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகினர். கவிதை, கட்டுரைகளில், தமிழக பா.ஜ., தலைவர்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டனர்.இரண்டு கட்சிகளும் ஒருமித்த கருத்துடையவை என்ற பேச்சால், லோக்சபா தேர்தலில் நஷ்டமடைந்த பா.ஜ., இனிமேல் அ.தி.மு.க.,வை எதிர்த்து நின்றால் தான் எதிர்காலம் என்ற முடிவுக்கு வந்தது. அதற்கு, டில்லி மேலிடமும் பச்சைக் கொடி காட்டி விட்டதாக, தமிழக தலைவர்கள் கூறி வந்தனர்.அந்த தைரியத்துடன் அ.தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்து வந்த தமிழக பா.ஜ., தலைவர்கள், இப்போது அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு காரணம், ரஜினியும், மேனகாவும், ஜெயலலிதாவை வாழ்த்தி அனுப்பிய கடிதங்கள். அதை ஒரே நேரத்தில், பத்திரிகைகளுக்கு வெளியிட்டு, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது, அ.தி.மு.க., தலைமை என்கின்றனர்.

ரஜினி வீட்டு கொலு:
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: ரஜினி வீட்டு கொலுவுக்கு சென்ற தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அவரை பா.ஜ.,வில் சேர்ப்பதற்கு முயற்சி செய்தார். அது குறித்து, பரபரப்பு பேட்டிகளும் அளித்து வந்தார்.ரஜினி வந்து விடுவார் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க., வுக்கு அடுத்து, பா.ஜ., தான் என்கிற ரீதியில் பேசி வந்தார்.இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான், ஜெயலலிதாவுக்கு ரஜினி எழுதிய கடிதம், பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. தனிப்பட்ட முறையில் எழுதப்படும் கடிதங்களை வெளியிட

Advertisement

வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த கடிதம் வெளியிடப்பட்டது.அதேபோல், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகாவும், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதம் தான். ஆனாலும், பா.ஜ., மேலிடத்தில் இன்னமும் தனக்கு ஆதரவான நிலையே காணப்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தான், மேனகாவின் கடித விவரமும் வெளியில் சொல்லப்பட்டது.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

இந்த கடித விவகாரம் குறித்து, தமிழகபா.ஜ., வட்டாரம் கூறியதாவது:நடிகரை நம்பி கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலை பா.ஜ.,வுக்கு இல்லை. ஆனால், ஒருசிலர் அந்த முயற்சியில் இறங்கியதற்கு கிடைத்த பலன் தான் இது. இனிமேலும், அந்த நம்பிக்கையை, கட்சியினர் மத்தியில் விதைப்பதை தவிர்க்க வேண்டும். எங்களை பொறுத்தவரை யில், மேனகாவின் கடிதம் தான் புதிராக உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும், ஜெயலலிதாவின் தண்டனையை விமர்சிக்க மறுத்து விட்டார். அவருக்கு ஆதரவாகவே கருத்து கூறினார். இப்போது மேனகா கடிதம் எழுதி, வெளிப்படையாக காட்டிக் கொண்டுள்ளார்.இது தான், பா.ஜ., மேலிடத்தின் நிலைப்பாடா. இது தெரியாமல், இங்குள்ள தலைவர்கள் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கடிதம், பிரதமர் மோடிக்கு தெரிந்து எழுதப்பட்டதா என்பதும் தெரியவில்லை.இவ்வாறு, தமிழக பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (84)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-அக்-201406:03:01 IST Report Abuse
K.   Shanmugasundararaj லஞ்சம் ,ஊழல் இதல்லாம் ஒண்ணுமில்லை.யார் /எந்தகட்சியில் செய்யலை.பிழைக்க தெரியாத கம்யுனிஸ்ட்கள் வேணும்னா செய்யாமல் இருப்பார்கள்.செய்யமாட்டார்கள்.பா ஜ க என்ன புனிதமான கட்சியா.அடுத்த பெண்ணை தனது மனைவியாக காண்பித்தது பா.ஜ க எம் பி தானே.வேறு எந்த கட்சியிலும் இப்படி உண்டா.சவப்பெட்டி ஊழல்,எடியுரப்பா,ரெட்டி சகோதரர்கள்,பா ஜ க தலைவர் பங்காரு லக்ஷ்மணன்,கட்காரி, 2 ஜி ஊழலின் சூத்ர தாரி பிரமோத் மகாஜன் ( முதலில் வந்தவருக்கு முதலில் கொடுப்பது )என சொல்லிக் கொண்டே போகலாம்.எனவே அம்மாவுக்கு ஆரியர்களின் பக்க பலம் நன்றாகவே உள்ளது.லாலுவுக்கும்,சாவ்தாலவுக்கும் கிடைக்காத ஜாமீன் அம்மாவுக்கு கிடைத்துள்ளது.அவர்கள் இருவரும் அம்மாவைவிட குறைவாகத்தான் லஞ்சம் வாங்கி உள்ளார்கள் .ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கலை.சட்டம் கண்ணை சுத்துது..
Rate this:
Share this comment
Cancel
M Alexander Manivel - Nandyal,இந்தியா
26-அக்-201411:58:21 IST Report Abuse
M Alexander Manivel என்னதான் இருந்தாலும் தமிழக மக்கள் அ தி மு க அல்லது தி மு க வுக்கு தான் மாற்றி மாற்றி வோட்டு போடுவார்கள் மற்றவர்கள் கனவு பலிக்காது
Rate this:
Share this comment
Cancel
RK Riyas Ahamed - Delhi,இந்தியா
25-அக்-201423:44:38 IST Report Abuse
RK Riyas Ahamed தமிழகத்தில் அடுத்த ஆட்சி பிஜேபி தான் . எங்கள் ஒட்டு பிஜேபி க்கு தான் .
Rate this:
Share this comment
Cancel
kli sss - cincinatti,யூ.எஸ்.ஏ
25-அக்-201409:09:49 IST Report Abuse
kli sss LOTUS in TN. Not in this birth.
Rate this:
Share this comment
Cancel
RK Riyas Ahamed - Delhi,இந்தியா
23-அக்-201421:08:10 IST Report Abuse
RK Riyas Ahamed அம்மாவுக்கு வயசாச்சு. எஞ்சியுள்ள காலங்களையாவது சந்தோசமாக கழிக்கலாமே. ஏன் இந்த அதிர்ச்சி வைத்தியம். கிடைத்த வைத்தியம் போதாதா ?
Rate this:
Share this comment
Cancel
elumalaiyaan - Chennai,இந்தியா
23-அக்-201412:16:18 IST Report Abuse
elumalaiyaan பா.ஜ. வுக்கு "செக்"வைத்த என்று தினமலர் நிருபர் தானே எழுதியிருக்கிறார்.ஜெயலலிதாவா,நான் வைத்த செக் என்று சொன்னார். பாத்து பைசா பெறாத சமாசாரம்,இதற்கு ஒரு கவரேஜ் ,அதற்கு ஒரு ஒபினியன்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-அக்-201420:54:16 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்மி வெறும் ஊட்டி எம்.பி தொகுதி வேட்பாளர், ஒரு மேயர் வேட்பாளர் மட்டும் வாங்க மாட்டார். நெனைச்சா மொத்த பார்லிமெண்டையும், எல்லா எம்.பி களையும் மொத்த வெலைக்கு வாங்கிடுவார். அடிச்ச கொள்ளைப்பணம் அம்புட்டு இருக்கு. வெங்காய நாயுடுவும், மேனகாவும் மட்டும் இல்லை, பூரா பா.ஜ.க வையே வாங்கி விடுவார். இது தெரியாமல் பா.ஜ.க விளையாடுகிறது. இதெல்லாம்...பெருமையா? கடமே.. கழுவிலிருந்து தப்பிக்கணுமே..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-அக்-201420:48:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி அதிகமா கூழைக்கும்பிடு போடுற கூத்தாடியும், அதிகமா ஆட்டையைப் போட்ட பொம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திரம் கெடியாது..ஹா..ஹா..ஹா.. இந்த பஞ்ச் டயலாக்கை எழுதி அனுப்பி இருப்பாரோ?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-அக்-201420:36:45 IST Report Abuse
மதுரை விருமாண்டி சிறையில், அறையில் பக்கத்தில் பழைய பெண் நண்பி, இப்போ மேனகா புது பென் (பேனா) நண்பி... பொங்கலுக்கு திரும்பவும் ஜெயிலுக்கு போனா மேனகாவுக்கும் லெட்டர் எழுதி டைம் பாஸ் பண்ணலாம்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-அக்-201420:35:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி அரசியல் அசிங்கம் எல்லாம் செக்காம்? இந்தம்மாவுக்கு தெரிந்த செக் எல்லாம் கிப்ட் செக், பிறந்த நாள் செக், சிங்கப்பூர் செக் தான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X