நடப்பது எல்லாம் நன்மைக்கே!

Added : அக் 27, 2014 | கருத்துகள் (6)
Advertisement
 நடப்பது எல்லாம் நன்மைக்கே!

பயிற்சிகள் செய்யாத தேகம்
பாழ்பட்டுப் போகிறது
உழைக்காத தேகம்
உலுத்துப் போகிறதுநடக்காத தேகம்
நலிவடைந்து போகிறது.
இதை நாம் அனுமதிக்கலாமா? நமது உடல், நோய்ப்பறவைகளின் வேடந்தாங்கல் ஆகலாமா? கூடவே கூடாது.


'அழகு' என்பது யாது?:

நடை பயிற்சியால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகி திசுக்களை மேம்படுத்துகிறது. உடலில் திசு இறுக்கப் பிடிப்பை உருவாக்கும் 'லேக்டிக்' அமிலம் வெளியேற்றப்படுகிறது. சுறுசுறுப்பு அதிகமாவதுடன், நமது மெட்டபாலிசம், உணவு தன் மயமாதல், ஜீரணம் சிறப்படைகிறது. நடப்பது கால்களுக்கு, உடலுக்கு, மனதுக்கு ஒரு புதுசக்தி, தெம்பை தருகிறது. உடல் நலிவை குறைத்து உடல் வலுவைத் தருகிறது. எல்லோரும் நடக்கலாம். எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம். நடை ஓர் உடம்பின் இயல்பான இயக்கம்.

ஆடும் போது மயில் அழகு
ஓடும்போது மான் அழகு
தாவும் போது முயல் அழகு
கூவும்போது குயில் அழகு
மேயும் போது பசு அழகு
பாயும்போது புலி அழகு
நடக்கும்போது தான் மனிதன் அழகு.


நடக்கவும் நேரம் உண்டு:

சாப்பிடும், உறங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் நடைக்கான நேரம் தான். அதிகாலை நேரம் சிறப்புடையது. அதிகாலை 4 முதல் 6 மணி வரை 'ஓசோன்' காற்று மிகுந்துள்ள நேரம். காலையில் நடப்பதால் சூரியஒளி உடலில் பரவி 'டி' வைட்டமின் கிடைக்கும். காலையில் தவறினால் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை நடக்கலாம்; சாப்பிட்ட பின் நடக்கக்கூடாது.


நடைக்கு முன் எளிய பயிற்சி :


நடை பயிற்சிக்கு முன்னதாக சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கால் விரல்களை மடக்கி நீட்டுதல். கணுக்காலை மேலும் கீழும் மற்றும் பக்கவாட்டில் அசைத்தல். இருபுறமும் சுழற்றுதல். நின்று கொண்டு முழங்காலை இருபுறமும் அசைத்து இயல்பாக சுழற்றுதல். வலதுகாலை மடக்கி வலது கையை நீட்டிப் பிடித்தல். பின், இடது காலை மடக்கி பிடித்தல். (எல்லாமும் 10 முறை). வலது, இடது கைகளை நன்றாக வட்ட மடித்து சுழற்றுதல். (மாறி மாறி 10 முறை). கழுத்தை வலது, இடது மேலும் கீழும் அசைத்தல் (ஐந்து முறை). வட்ட மடித்து இருபுறமும் சுழற்றுதல் (ஐந்து முறை).


நடையில் உடையின் பங்கு :


நடை பயிற்சிக்கு முன் காபி, டீ குடிக்கக்கூடாது. தண்ணீர் 3 டம்ளர் அருந்தலாம். இனிப்பு சேர்க்காத பழச்சாறு அருந்தலாம். கனமான சுமை, பொருட்களுடன் நடக்கக்கூடாது. மொபைல் போன் பேசி கொண்டே நடக்கக்கூடாது. அதிக எடையில்லாத காலணிகளை அணிந்து, எளிய பருத்தி உடைகளுடன் நடக்கலாம். காற்றோட்டம் உள்ள இடம் அல்லது பூங்கா பகுதியில் நடக்கலாம். மற்றவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நடக்கக்கூடாது. பிராத்தனையில் மனம் ஒன்றுபடுவது போல் நடை பயிற்சியிலும் மனம் ஒன்று பட வேண்டும்.நன்றாக நிமிர்ந்து நடக்க வேண்டும். தலை, கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, முழங்கால்கள் நேர்கோட்டில் இருக்குமாறு நடக்க வேண்டும். பாதம் பார்த்து நடப்பதை தவிர்க்க வேண்டும். குதிங்காலை முதலில் வைத்து மற்ற பகுதிகள் பிறகு அழுத்துமாறு பாதம் பதிந்து நடக்க வேண்டும். ராணுவ வீரனை போல் நடக்க வேண்டும். நீளமான அடி எடுத்து நடப்பதை விட, அளவான அடி எடுத்து வைத்து நடந்தால் விரைவில் களைப்பு ஏற்படாது.


எட்டு நடை :

எண் 'எட்டினை' தரையில் வரைந்து அதன் மீது நடந்திடுங்கள். அகலம் 6 முதல் 8 அடிகள் இருக்கலாம். நீளம் 12 முதல் 16 அடி வரை இருக்கலாம். மிக அதிகமான நீள அகலத்தில் 8 போட வேண்டாம். நடக்கும்போது உடம்பை விரைப்பாக வைக்காமல் இலகுவாக வைத்தபடி நடந்திடுங்கள்.'நான்கு' நடை என்பது நமது கால் பாதத்தை நான்கு பிரிவுகளாக்கி, அப்பகுதியில் மட்டுமே ஒரே நேரத்தில் தரையில் படும்படி நடப்பது. கால் விரல்கள், முன்பாதம் தரையில் படியுமாறு ௧௦ அல்லது 20 அடி துாரம் நடக்கலாம். குதிகால் தரையில் படாமல் நடக்க வேண்டும். பின்பாதம் தரையில் படும்படி 10 அடி முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். இதில் முன் பாத விரல்கள் தரையில் படாது. இருபாதத்தின் வெளிபக்க ஓரங்கள் மட்டும் தரையில்படும்படி தரையில் கவனமாக 10 முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். நிறைவாக முழங்காலை உட்புறமாக பாதங்களை அகற்றி உள்பாதம் ஓரம் தரையில் படும்படியாக நடந்து பழகலாம்.


ஒரு குட்டிக்கதை :

நடை பயிற்சியால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு ராஜா இருந்தார். அவருடைய அமைச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த நிகழ்வு நடந்தாலும் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்பர். அரசர் ஒரு நாள் பழம் வெட்டி சாப்பிடும்போது சுண்டு விரலை கத்தியால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது. அரசு வைத்தியர் விரலுக்கு வைத்தியம் செய்தார். 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்றார் அமைச்சர்.அரசருக்கு கோபம் வந்து விட்டது. அமைச்சரை சிறையில் அடைத்தார். அப்போதும் 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்றார் அமைச்சர். சில மாதங்கள் கழித்து அரசர் தனது பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்றார். ஒரு மானை துரத்திக் கொண்டு போன அரசர், அடர்ந்த காட்டுக்குள் தனியாக மாட்டிக் கொண்டார். அரசரை, ஆதிவாசிகள் பிடித்து கொண்டு போய்விட்டனர். அவர்களது தலைவன் முன் நிறுத்தினர். அரசரை நரபலியிட ஏற்பாடு நடந்தது.அப்போது பூஜாரி, 'பலி கொடுக்கும் மனிதனுக்கு உடம்பில் காயம் எதுவும் இருக்கக்கூடாது' என்றார். கைவிரலில் காயத்தழும்பு இருப்பதை பார்த்து அரசரை விட்டு விட்டனர். அரண்மனைக்கு வந்த அரசர், சிறையில் இருந்த அமைச்சரை விடுதலை செய்தார். ''நீங்கள் அன்று சொன்னது சரியானது தான்,'' என்றார் அரசர்.'அதுசரி, உங்களை சிறையில் போட சொன்னபோது அப்பவும் நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக் கூறியதன் காரணம் ஏன்ன?' என அமைச்சரிடம் கேட்டார்.''நீங்கள் சிறையில் என்னை அடைத்ததால் தான் நான் உங்களுடன் வேட்டைக்கு வரவில்லை. இல்லை என்றால் நானும் வந்திருப்பேன். உங்களுக்கு காயம் இருப்பதால் தப்பித்தீர்கள்; ஆனால் என்னை பலியிட்டிருப்பார்கள். எனவே, தான் அப்படி கூறினேன்,'' என்றார்.இக்குட்டிக்கதை மூலம் 'நட'ப்பதெல்லாம் நன்மைக்கே...! என்பதை புரிந்து நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

- முனைவர் இளசை சுந்தரம்,
வானொலி நிலைய
முன்னாள் இயக்குனர்,
மதுரை.
9843062817

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Arunachalam - Chennai,இந்தியா
28-அக்-201416:33:13 IST Report Abuse
Srinivasan Arunachalam நாம் நடை பயிற்சி செய்யமளிருந்தல் அதுவும்நன்மைக்கே ? ஏனெனில் நடை பயிலமளிருப்பது என்பது ஒரு நிகழ்வே
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
28-அக்-201414:34:33 IST Report Abuse
Snake Babu நடப்பது எல்லாம் நன்மைக்கே - உண்மை, நன்றி தினமலர் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் அவர்களுக்கும். கூடுதலாக ஒரு விஷயம். கால் பாதத்தில் அக்கு ப்ரேசூர் புள்ளிகள் இருக்கின்றன நிறைய புள்ளிகள் உள்ளன, ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு உடலுறுப்பை செயல்படுத்தும் முக்கிய புள்ளிகள்,, அவைகளை பிடித்து விடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் activiate ஆகும். இதையே மருத்தவ முறைக்காக என்று கூறி செப்பல் தாயரித்திருக்கிரார்கள், விலை 1500 தாண்டும். அவ்வளவு தூரம் போக தேவையே இல்லை. நடக்கும் பொது வெறும் காலில் நடந்தால் கூடுதல் நன்மையாக இந்த புள்ளிகளை பிடித்து விடுவது போலாகும். ஆகையால் நடக்கும் பொது வெறும் காலில் நடங்கள், இதனால் கூடுதல் நன்மை. இதை முன்னிட்டே கோவிலில் வெறும் காலால் நடப்பது என்று இருக்கிறது,, அதே போல மாலை அணிந்தவர்கள்..... இப்படியே சொல்லி கொண்டே போகலாம் . நன்றி, வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
Sathiyamoorthi Madhavan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-அக்-201413:06:02 IST Report Abuse
Sathiyamoorthi Madhavan NICE ARTICLE THANK YOU SIR. WALK ..... AWAKE
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X