தேவதானப்பட்டி: கொடைக்கானலில் நடந்து வரும் சினிமா படப்பிடிப்பு உணவுக் குழுவினரை சென்னையை சேர்ந்த வேன் டிரைவர் சகாதேவன் அழைத்துச் சென்றார்.
பலத்த மழை பெய்யும் போது டம்டம்பாறை அருகே இவர்கள் சென்ற போது முதலில் ஒரு பெரிய பாறை உருண்டு விழுந்தது. தொடர்ந்து மிகப்பெரிய வெள்ளம் ரோட்டில் வந்தது. 6 அடி உயரத்திற்கு வந்த இந்த வெள்ளம், ரோட்டில் கரைபுரண்டு ஓடி சினிமா படப்பிடிப்பு உணவுக்குழுவினர் வந்த வேனை டிரைவர் சகாதேவன் சற்றும் பதட்டம் இன்றி வெள்ளத்தின் இழுவை திறனுக்கு ஏற்ப வேனை சாமர்த்தியமாக திருப்பியவாறே ஓட்டி வந்து ஒரு கட்டையில் இடித்து பாலத்தில் மோதி நிறுத்தினார். இதனால் வேனில் வந்த ஏழு பேரும் உயிர் தப்பினர். சகாதேவன் சற்று பதட்டமாகி இருந்தாலும் வேனில் இருந்த அத்தனை பேரும் விபரீதத்தில் சிக்கியிருப்பார்கள். இதனால் தேனி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் சகாதேவனின் மனோதிடத்தை பாராட்டினர்.