பொது செய்தி

தமிழ்நாடு

நெல் நாற்றில் வெளிர் தன்மைவேளாண் துறை யோசனை

Added : அக் 28, 2014
Advertisement

வெள்ளகோவில் :வெள்ளகோவில் சுற்று பகுதியில், எல்.பி.பி., பாசன வசதி பெறும் வாய்க்கால் ஓரப்பகுதியில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால், முத்தூர், சின்னமுத்தூர், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியிரச்சல், ஊடையம், வேலம்பாளையம் உட்பட்ட பகுதிகளில், நெல் நடவு செய்யப்பட்டு, 20 நாட்கள் ஆகிறது. இப்பகுதியில், 2,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
மலை நீரால், தண்ணீர் தேங்குவதால், நாற்றில் நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தன்மையால், நாற்றில் வெளிர்தன்மை இருந்தால், இப்பயிர்களுக்கு நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடு செய்யும் பொருட்டு, ஒரு ஏக்கருக்கு, 22 கிலோ யூரியா, சிப்சம், 18 கிலோ, இவற்றுடன், நான்கு கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
பின், வயலில் தண்ணீர் வடிந்தவுடன், வயலில் உரமிடும் முறை மூலம், உரமிட வேண்டும். ஒரு வாரம் முதல், பத்து நாட்களில், இப்பயிர் வெளிர் தன்மையில் இருந்து விடுபட்டு, நுண் ஊட்டச்சத்துடன் நன்கு வளரும்.இத்துடன் நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு, ஆங்காங்கே தென்படுகிறது. அதற்கு புரபனோபாஸ், 400 மில்லி லிட்டர், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கருக்கு கை தெளிப்பான் மூலம், தெளிக்க வேண்டும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X