அசையாமல் ஒட்டிக்கிட்ட பதவி; இது யாருக்கு செஞ்ச உதவி?| Dinamalar

அசையாமல் ஒட்டிக்கிட்ட பதவி; இது யாருக்கு செஞ்ச உதவி?

Updated : அக் 30, 2014 | Added : அக் 30, 2014
Share
''ஏன்டி....எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யிலயிருந்து அந்த தியேட்டர் காம்ப்ளக்ஸ்லதான் படம் பார்ப்பேன்னு ரொம்ப பிடிவாதமா இருப்ப...இப்ப இந்த தியேட்டர்க்கு மாத்திட்ட?''காந்திபுரம் அருகிலுள்ள ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் வாசலில், மித்ராவைப் பார்த்து, சித்ரா கேட்டாள்.''அய்யோ...இனிமே அந்த தியேட்டர் பக்கமே எட்டிப்பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். சீட்டுல மூட்டைப்பூச்சி
அசையாமல் ஒட்டிக்கிட்ட பதவி; இது யாருக்கு செஞ்ச உதவி?

''ஏன்டி....எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யிலயிருந்து அந்த தியேட்டர் காம்ப்ளக்ஸ்லதான் படம் பார்ப்பேன்னு ரொம்ப பிடிவாதமா இருப்ப...இப்ப இந்த தியேட்டர்க்கு மாத்திட்ட?''காந்திபுரம் அருகிலுள்ள ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் வாசலில், மித்ராவைப் பார்த்து, சித்ரா கேட்டாள்.
''அய்யோ...இனிமே அந்த தியேட்டர் பக்கமே எட்டிப்பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். சீட்டுல மூட்டைப்பூச்சி தொல்லை, டாய்லெட்ல சுத்தம்கிறதே. சுத்தமா இல்லை. பாப்கார்ன், ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், அநியாயவிலை. அக்கிரமம் பண்றாங்க. அது மட்டுமில்லாம, அந்த தியேட்டர்ல வண்டியை நிறுத்தி, எடுக்கிறதுக்குள்ள உசிரு போயி, உசிரு வந்துடும்,'' என்றாள் மித்ரா.
''முன்னெல்லாம் தியேட்டர்களுக்கு, கலெக்டர், ஆர்.டி.ஓ., எல்லாம் அதிரடியா 'விசிட்' பண்ணி, அதிக விலைக்கு டிக்கெட் வித்தாலோ, டாய்லெட் மோசமா இருந்தாலோ, லைசென்சையே ரத்து பண்ணிருவாங்க. இப்ப வர்ற ஆபீசருங்கதான், இருக்கிறவரைக்கும் சொகுசா இருந்துட்டுப் போனாப் போதும்னு தான நினைக்கிறாங்க!,'' என்றாள் சித்ரா.

''கரெக்டா சொன்னக்கா...! அதுலயும் நம்ம ஊரு மேடம் இருக்காங்களே...அவுங்களுக்கு, ஆபீசர்ஸ் வட்டாரத்துல, பல பேரு வச்சுப் பேசுறாங்க. எதுக்கும் அலட்டிக்கிறது கிடையாது. அரசு விழாவுல போய், பொம்மையாட்டம் நின்னுட்டு வர்றதோட சரி. வளர்ச்சிப்பணிகளை ஆய்வு பண்றது, 'இல்லீகல் பில்டிங்'கை தடுக்கிறதுன்னு, உருப்படியா எதையும் செய்யுறதே இல்லை. இன்னும் எத்தனை வருஷம், இப்பிடியே ஓட்டப்போறாங்களோ?,''

''ஆமா மித்து! எனக்கே ஆச்சரியமா இருக்கு. இவுங்க என்ன சாதிச்சிட்டாங்கன்னு, போன டி.எம்.கே., பீரியட்ல ஆரம்பிச்சு, 5 வருஷத்துக்கு மேல ஆகியும், இன்னமும் இதே போஸ்ட்டிங்ல வச்சிருக்காங்க. அப்பிடி பெரிய மேடத்துக்கு இந்த சின்ன மேடம் என்ன தான் உதவி செஞ்சாங்கன்னு தெரியலை?,''

''இந்த 'கத்தி' படத்துல, ஜீவானந்தமா வர்ற விஜய் பேசுற 'டயலாக்'தான் ஞாபகத்துக்கு வருது. நம்ம பசி அடங்குன பிறகு, சாப்பிடுற இன்னொரு இட்லி அடுத்தவனோடதுங்கிறது மாதிரி, இந்தம்மா 5 வருஷமா இந்த போஸ்ட்டிங்கைப் பிடிச்சிட்டு இருக்கிறதால, யாரோ ரெண்டு ஐ.ஏ.எஸ்.,களோட வாய்ப்பு தான் பறிக்கப்பட்ருக்கு!,'' என்றாள் மித்ரா.

''அக்கா! நீ அந்த கேரக்டர் பேரு சொன்னதும், எனக்கு இன்னொரு விஷயம், ஞாபகத்துக்கு வந்துச்சு. இவுங்க பேரை வச்சு, ஒருத்தர் நல்லா காசு பண்றார்ன்னு நிறையா 'கம்பிளைன்ட்' வருது!,'' என்றாள் மித்ரா.

''அது வேறயா?,'' என்று ஆச்சரியம் காட்டினாள் சித்ரா.

''ஆமாக்கா! மலைமேல வேலை பாத்துட்டு, இங்க மாறி வந்துருக்கிற ஒருத்தரு, 'நான் சொன்னா, அவுங்க தட்டவே மாட்டாங்க. ஏன்னா, அங்கெல்லாம் 'பில்டிங் பர்மிஷன்' உட்பட எல்லா வேலையையும் முடிச்சுக் கொடுத்தது நான் தான். இப்பக்கூட, புதுசா கட்டுற கட்டிடத்துல, நான் தான் 'டீலிங்' முடிச்சுக் கொடுத்தேன்'னு சொல்லிட்டுத் திரியுறாராம்!,'' என்றாள் மித்ரா.

''வேற எங்க இப்பிடி சம்பாதிக்கிறாங்க?,''

''எல்.பி.ஏ.,வுல இதே கதை தான்...அங்க இருக்கிற பெரிய ஆபீசர், அடக்கி தான் வாசிக்கிறாரு. ஆனா, அவருக்குக் கீழ இருக்கிற ஒரு ஆபீசர், 'பில்டிங்'குகள்ல வசூல் தட்டி எடுக்கிறாராம். பேர்லயே 'கேஷ்' வச்சிருக்கிற அவரு, தன்னோட 'இன்னோவா' கார்ல வசூலுக்குப் போயிட்டு, தன்னோட வண்டி டிரைவரை தனியா கவனிக்கச் சொல்வாராம். அவருக்கும், இவுங்க சப்போர்ட்ங்கிறாங்க!,''

''தப்பு செய்றவுங்க, ஏதாவது ஒரு பெரிய இடத்து 'சப்போர்ட்'டோட தப்பிச்சுக்கிறாங்க. கால்ல வச்ச 'பிளேட்'டை எடுக்க ஜி.எச்.,க்கு வந்த ஆறுமுகத்துக்கு நடந்த கதை தெரியுமா உனக்கு?,'' என்றாள் சித்ரா.

''டயாலசிஸ் பண்ண வந்த ஆறுமுகத்துக்குப் பதிலா, இந்த ஆறுமுகத்துக்கு 'டயாலசிஸ்' பண்றதுக்கு ஏற்பாடு பண்ணி, கடைசி நேரத்துல கண்டு பிடிச்சாங்களே...அது தான?,'' என்றாள் மித்ரா.

''கரெக்ட்...அதே தான். அந்த விவகாரத்துல, தப்பு பண்ணுன லேடி டாக்டர் மேல, 'ஆர்த்தோ' டாக்டர்களெல்லாம் சேர்ந்து 'டீன்'ட்ட 'கம்பிளைன்ட்' பண்ணிருக்காங்க. ஆனா, அவுங்க மேல எந்த நடவடிக்கையுமே எடுக்கலையாம். ஏன்னா, இதுக்கு முன்னாடி இங்க முக்கிய பொறுப்புல இருந்த மேடம், இப்போ சென்னையில முக்கியமான பொறுப்புக்கு 'இன்சார்ஜ்'ஆ இருக்காங்க. அவுங்களும், இவுங்களும் ரொம்ப க்ளோசாம். அதனால தான், தப்பிச்சிட்டதா சொல்றாங்க!,'' என்றாள் சித்ரா.

அருகில் நின்ற ஒருவரின் மொபைலில், 'வனிதா மணி...வன மோகினி...வந்தாடு' என்று பயங்கர சத்தமாக 'ரிங் டோன்' அலறியது.

''ஏன் இவ்ளோ சத்தமா பாட்டு வச்சு, மத்தவுங்களை கதற விடுறாங்க?'' என்று கடுப்பானாள் மித்ரா.

''சத்தம்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. சத்தம் போடுற மேட்டர்ல சத்தமில்லாம, பல பேரு சம்பாதிச்சுட்டாங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.

''பட்டாசுக் கடை மேட்டரைச் சொல்றியா?''

''மித்து...! சாட்டை மாதிரி உடனே பத்திக்கிற...அதே மேட்டர் தான். இந்த வருஷம் பட்டாசுக் கடை போட்ட பல பேருக்கு, 'சேல்ஸ்' செம்ம அடியாம். நல்லா கையக் கடிச்சிருச்சுங்கிறாங்க. ஒவ்வொரு சின்ன கடைக்கும், போலீஸ், ஃபயருக்கு மூணு மூணாயிரம். பட்டாசு பாக்ஸ், அங்க 15, இங்க 10ன்னு ஒரு கடைக்கு 35 ஆயிரம் ரூவா வரைக்கும், மாமூலுக்கே செலவாயிருக்கு!,''

''இதென்ன பெருசு? சிட்டியில 'கிரைம்' பாக்குற ஒருத்தரு, ஒரேயொரு நகைக்கடைக்காக பொய்க்கேசு போட்டதுக்காக மட்டுமே, தீபாவளிக்கு அஞ்சு லட்ச ரூபா வாங்கிருக்காராம். அவர் தான், என்னைய யாரும் அசைக்கவே முடியாதுன்னு சேலஞ்ச் பண்றாராம்!'' என்று பொரிந்தாள் மித்ரா.

''சேலஞ்ச்ன்னு ஞாபகப்படுத்தி விட்டுட்ட மித்து. ரேஸ்கோர்ஸ்ல, சந்தன மரம் வெட்டிக் கடத்துற கும்பல், சேலஞ்ச் பண்ணி, கன்சர்வேட்டர் பங்களாவுக்குள்ளயே சந்தன மரத்தை வெட்டிருக்காங்க... பார்த்தியா? இதைப்பத்தி, ஏற்கனவே நாம பேசிருக்கோம். ஞாபகமிருக்கா?,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா! அதே ஏரியாவுல தான், கலெக்டர், போலீஸ் கமிஷனர், டி.எப்.ஓ., கன்சர்வேட்டர், ஜட்ஜ்ங்கன்னு, எல்லா வி.ஐ.பி., வீடும் இருக்கு. அதே ஏரியாவுல தான், மறுபடியும் மறுபடியும் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திட்டே இருக்காங்க. ஆனா, ஒருத்தரைக் கூட பிடிக்க முடியலைன்னா, நம்ம போலீசும், பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டும் என்ன தான் பண்றாங்கன்னு தெரியலை. இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துக்குள்ள, ரேஸ்கோர்ஸ்சையே மொட்டையடிச்சிருவாங்க!,'' என்றாள் மித்ரா.

மொட்டை என்றதும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய், ''அது என்னடி மித்து...ஒண்ணு தாடி வச்சுக்கிறாங்க. இல்லேன்னா மொட்டை போட்டுக்கிறாங்க. நார்மலா இருந்தா, கட்சிக்கு விசுவாசமா இல்லைன்னு ஆயிடுமா?,'' என்றாள் சித்ரா.

''நம்ம மினிஸ்டர் மொட்டை போட்டதை சொல்றியா? அவரு மொட்டை போட்டா பரவாயில்லை. ஆனா, ஒரே மீட்டிங், ஆய்வுன்னு பரபரன்னு வேலையில பட்டையக்கெளப்புறாருங்கிறாங்க!,''

''அதென்னவோ தெரியலை. ஆனா, அவரும், மேயரும் சேர்ந்து, சில வேலைகளை 'ஸ்பீடு' பண்ணணும்னு முடிவு பண்ணிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அதுல, குளங்களை மேம்படுத்துறதுல மேயர் ரொம்பவே ஆர்வமா இருக்காரு. சிங்காநல்லூரு குளத்துல ஆகாயத்தாமரை எடுக்கிற வேலை, வேகமா நடக்குது. அங்க இருக்கிற 'பார்க்'கையும் சுத்தம் பண்றாங்க. அடுத்ததா, வாலாங்குளத்துல இருக்கிறவுங்களுக்கு புது வீடுகளை ஒப்படைச்சிட்டு, அங்க இருக்கிற வீடுகளையெல்லாம் எடுத்துட்டு, குளத்தையே புதுப்பொலிவாக்கணும்னு முயற்சி பண்றாராம்!,'' என்றாள் மித்ரா.

''நல்ல விஷயம் தான்... நடக்குதான்னு பார்ப்போம். கார்ப்பரேஷன்ல குப்பை அள்ளுற கான்ட்ராக்ட் கம்பெனியை 3 மாசத்துக்கு 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க தெரியுமா? அந்த கம்பெனிக்காரரு, பயங்கரமா கொந்தளிக்கிறாரு. 'நான் 10 வருஷமா 'கூஙிஅஈ கான்ட்ராக்ட் பாத்திருக்கேன். எட்டு வருஷமா, கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட் பாக்குறேன். இப்ப மாதிரி, யாரும் என்னிய மெரட்டுனதில்லை. எல்லாம் தெற்குல இருக்கிறவரோட ஆதிக்கம்'கிறாரு,'' என்றாள் சித்ரா.

''ஆனா, தப்பே செய்யாமலா, கான்ட்ராக்ட்டை 'சஸ்பெண்ட்' பண்ணிருப்பாங்க? இவரு என்னடான்னா இப்பிடி 'டயலாக்' விடுறாரு!,'' என்றாள் மித்ரா.

''இப்பதான் ஆளுக்கு ஆளு 'டயலாக்'ல கலக்குறாங்களே! நம்ம ஜி.எச்.,ல இருக்கிற ஒரு டாக்டர், அங்க வர்ற ஏழை கேன்சர் பேஷன்ட்களை, ரொம்ப ரொம்ப கேவலமா பேசுறாராம். ஒழுங்கா 'ட்ரீட்மென்ட்' கொடுக்கிறதில்லைங்கிறதோட, 'பொள்ளாச்சியில எனக்கு 35 ஏக்கர் தோப்பு இருக்கு; இங்க வந்து வேலை பாக்கணும்னு தேவையே இல்லை'ன்னு 'டயலாக்' பேசுறாராம்!,'' என்றாள் சித்ரா.

''அவுங்களே பாவம்...வேதனையில வாடுறவுங்க. அவுங்களுக்கு இப்பிடி ஒரு சோதனையா?,'' என்று மித்ரா கேட்டதும், அடுத்த 'ஷோ'வுக்கு கதவு திறக்கப்பட்டது. பேச்சுக்கு திரை போட்டார்கள் இருவரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X