கோழி எச்சத்தின் மூலம் மின்சாரம்: 'கேசி பயர்' இயந்திரம் அறிமுகம்

Added : நவ 02, 2014 | கருத்துகள் (10) | |
Advertisement
காந்திகிராமம்: கோழி எச்சம், குப்பை உள்ளிட்ட கழிவுகளில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கும் 'கேசி பயர்' இயந்திரத்தை காந்திகிராம பல்கலை பேராசிரியர் கிருபாகரன் கண்டுபிடித்துள்ளார்.மக்கள்தொகை பெருக்கத்தால் மின்சாரம், எரிபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பை, கழிவுகளை அகற்றுவதும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி
கோழி எச்சத்தின் மூலம் மின்சாரம்: 'கேசி பயர்' இயந்திரம் அறிமுகம்

காந்திகிராமம்: கோழி எச்சம், குப்பை உள்ளிட்ட கழிவுகளில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கும் 'கேசி பயர்' இயந்திரத்தை காந்திகிராம பல்கலை பேராசிரியர் கிருபாகரன் கண்டுபிடித்துள்ளார்.

மக்கள்தொகை பெருக்கத்தால் மின்சாரம், எரிபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பை, கழிவுகளை அகற்றுவதும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம், எரிவாயு தயாரிக்கும் 'கேசி பயர்' இயந்திரத்தை காந்திகிராம பல்கலை ஊரக எரிசக்தி மையம் உதவி பேராசிரியர் கிருபாகரன் கண்டுபிடித்துள்ளார்.இந்த இயந்திரத்தின் புனல் போன்ற அமைப்பில் கழிவுகளை கொட்ட வேண்டும். இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட 'புளோயர்' மூலம் காற்றை செலுத்தி கழிவுகளை எரியசெய்தால் கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியேறும். வாயு வெளியேறும் பகுதியில் சமையல் அடுப்பைபொருத்தி எரிவாயுவாக பயன்படுத்தலாம் அல்லது வாயுவை டீசல் மோட்டார்களில் செலுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.மின்உற்பத்தி செலவு பாதியாக குறைவதுடன் இயந்திரத்தின் வடிவத்தை தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் கிருபாகரன் கூறியதாவது: கோழி பண்ணைகளில் மின்சார செலவை குறைக்க கோழி எச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க 'கேசி பயர்' இயந்திரத்தை தயாரித்தேன். தற்போது இந்த இயந்திரத்தின் மூலம் அனைத்து வகை கழிவுகளில் இருந்தும் மின்சாரம், எரிவாயு தயாரிக்கலாம். 50 கிலோ கழிவினை பயன்படுத்தி 50 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. 50 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க ரூ.35 ஆயிரம் மட்டுமே செலவாகும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
02-நவ-201419:20:52 IST Report Abuse
Manoharan Prushothaman கண்டு பிடித்த கிருபாகரனுக்கு பாராட்டுக்கள் அரசு அவ்வளவு எளிதில் இவற்றை ஏற்றுகொள்ளாது ஏன்னா அவுங்களுக்கு கமிசன் வாங்கியே பழக்கம் இதில் கமிசன் கிடைக்காது முதலில் கோழி உற்பத்தியாளர்கள் இதை நிறுவ முன்வர வேண்டும்
Rate this:
Kovai Subbu - Coimbatore,இந்தியா
03-நவ-201406:53:11 IST Report Abuse
Kovai Subbuஇதை கண்டுபிடித்ததே ஒரு அரசு நிறுவனம் தான் - காந்திகிராம பல்கலைகழகம். அரசு இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் என்ன? தயாரித்து விற்பனை செய்யவேண்டுமா? பொருள் சிறந்ததாக இருந்தால், மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்றால் அதன் டிசைன்-ஐ வாங்கி தயாரித்து விற்பனை செய்ய பல தொழிலதிபர்கள் முன்வருவார்கள். விருப்பம் இருந்தால் பல்கலைகழகம் ஒரு டெண்டர் விட்டு இதன் உரிமத்தை யாருக்காவது விற்பதுடன் மேலும் விற்பனையில் தொடர்ந்து ராயல்டி வரும்படி செய்யலாம். நீங்கள் சொல்வது போல கோழி வளர்ப்பாளர்கள் கூட முன்வரலாம். அதற்கு பல்கலைகழகம் முயற்சி எடுக்க வேண்டும்....
Rate this:
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
02-நவ-201418:29:32 IST Report Abuse
Kovai Subbu ஒரு கிலோ கோழி எச்சத்தில் இருந்து ஒரு கிலோவாட் கிடைக்குமா? பரவாயில்லையே. ஒரு 1 KW (1000 வாட்ஸ்) உபயோகித்தால் 20 வாட்ஸ் CFL பல்பு ஒன்றை 50 மணி நேரத்திற்கு எரிக்க முடியும். 60 வாட்ஸ் பவர் கொண்ட சுமார் 16 36" சீலிங் பேன்களை (Ceiling Fan) ஒரு மணிநேரத்திற்கு ஓட்ட முடியும். மூன்று 20W CFL பல்பு, ஒரு 60W சீலிங் பேன் (மொத்தம் 120W) உடைய வீட்டிற்கு இது 8.33 மணி நேரத்திற்கான மின்சாரத்தை கொடுக்கும். வீட்டில் 4-5 கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க இடம் இருப்பபவர்கள் 'கேசி பயர்' இயந்திரத்துடன் கூடுதலாக மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்திற்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்தால் ஒரு சிறிய வீட்டிற்கு தேவையான 4 விளக்குகள் மற்றும் ஒரு மின்விசிறிக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தையே 'கேசி பயர்' இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு உள்ள blower motor வேலை செய்ய தேவையான மின்சாரத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த இயந்திரத்தில் இருந்து மின்சாரம் கிடைக்க ஆரம்பிக்கும் முன் blower motor ஓடுவதற்கு வேறு வழியில் மின்சாரம் தேவையா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. மேலும் 'கேசி பயர்' இயந்திரத்தின் விலை என்ன என்ற விபரமும் இல்லை.
Rate this:
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
02-நவ-201417:55:47 IST Report Abuse
Kovai Subbu //கழிவுகளை எரியசெய்தால் கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியேறும். வாயு வெளியேறும் பகுதியில் சமையல் அடுப்பைபொருத்தி எரிவாயுவாக பயன்படுத்தலாம்// கார்பன் மோனாக்ஸைடு (CO) ஒரு நிறம், மனம், மற்றும் சுவை இல்லாத ஒரு நச்சு வாயு. பெட்ரோல், டீசல், விறகு, நிலக்கரி (fossil fuels) போன்றவை காற்றில் இருக்கும் ஆக்சிஜன் உதவியுடன் முழுதுமாக எறிந்தால் கிடைப்பது கரிமில வாயு அல்லது கார்பன் டைஆக்சைடு (CO2). அதுவே சில நேரங்களில் சரியாக எரியாமல் வெளிவருவது தான் கார்பன் மோனாக்ஸைடு (CO). சில நேரங்களில் அது வாகனங்களில் இருந்து exhaust வழியாக வெளிப்படும். கார்பன் டைஆக்சைடு (CO2) ஐ விட கார்பன் மோனாக்ஸைடு (CO) மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. யாராவது இதை கொஞ்சம் நேரத்திற்கு சுவாசிக்க நேர்ந்தால் மூர்ச்சை ஆகிவிடுவார்கள். சில நாடுகளில் Carbon Monoxide Detectors என்ற பாதுகாப்பு கருவியை வீட்டில் கூட வைத்து இருப்பார்கள். சிலர் நின்று கொண்டு இருக்கும் காரில் ஏசியை ஓடவிட்டு தூங்கும் போது இறப்பது இந்த கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் தான். மேலும் இந்த இரண்டு வாயுக்களும் பூமி வெப்பமயமாதலை அதிகரிப்பவை. சாணத்தில் இருந்து கிடைக்கும் கோபர் காஸ் (Gobar Gas or Biogas), பூமிக்கு அடியில் இருந்து வரும் இயற்கை எரிவாயு (Converted to Compressed Natural Gas), மீதேன், LPG (Liquified Petrolium Gas) போன்றவற்றை தான் சாதாரண வீட்டு அடுப்பில் ஏறிவாயுவாக உபயோகப்படுத்த முடியும். கார்பன் மோனாக்ஸைடு காற்றில் உள்ள ஆக்சிஜன் உடன் கலந்து எறியும் போது ஒரு விதமான நீலநிறத்துடன் எறியும். ஆனால் அதை எரிவாயுவாக வீட்டு அடுப்பில் உபயோகிக்க முடியுமா என்பதில் எனக்கு சந்தேகமே. மேலும் இது ஒரு நச்சு வாயு என்பதால் வீட்டில் உபயோகப்படுத்த உகந்ததா என்ற அச்சமும் எழுகிறது. இது சரியா, தவறா என்று யாராவது கூறமுடியுமா, ப்ளீஸ்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X