ஒரு கல்... ஒரு கண்ணாடி!

Added : நவ 05, 2014 | கருத்துகள் (5)
Advertisement
ஒரு கல்... ஒரு கண்ணாடி!

சுத்தமில்லாத தண்ணீர், பழைய கெட்டுப் போன உணவுகள், அளவுக்கு அதிகமாக புளித்த பழங்களை உண்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். மர்மஉறுப்பில் வலி ஏற்பட்டு உடல் வீக்கம் கண்டு ஒரு இடத்தில் உட்காரவிடாது. வயிறு புரட்டி வாந்தி உண்டாகி மூச்சுத்திணறி வயிறு ஊத ஆரம்பிக்கும் என சித்தர் யூகி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், தனது வைத்திய சிந்தாமணி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வயிற்றின் மேல் அறையில் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவை திரவக் கழிவுகளை சுத்தம் செய்வதுடன் உடலின் ரத்த அழுத்தத்தையும் சமநிலையில் வைக்கின்றன. உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. சிறுநீர் உப்புத் தன்மை மற்றும் சற்று காரத்தன்மை உடையது. அதன் உப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படும் போது சிறுநீரகத்தில் சிறு, சிறு துகள்களாக உப்புகளும், புரதப் பொருட்களும் உறைந்து சிறுநீரக கற்களாக மாறுகின்றன. இவை சிறுநீர்ப் பாதையில் தடையை ஏற்படுத்தி கால், வயிறு, முகத்தில் வீக்கம் உண்டாக்குகின்றன.சிறுநீரகம், சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் தாரை ஆகிய இடங்களில் கற்கள் தேங்கும் போதோ அல்லது பயணம் செய்யும் போதோ எந்தப் பக்கத்தில் கல் இருக்கின்றதோ, அந்தப் பகுதியிலிருந்து கீழ்நோக்கி வயிறு, முதுகு, தொடை மேல்பகுதி, தொடை மற்றும் விதைப்பையில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலியுடன் குளிர், நடுக்கம், காய்ச்சல், குமட்டல், வாந்தி ஏற்பட்டு வலியுடன் சிறுநீர் அடைத்துக் கொண்டு வெளியேறும். சிவப்பு, அடர்த்தியான மஞ்சள் அல்லது முட்டை வெண்கருவை கரைத்தது போன்ற நிறத்தில் வெளியேறும். சிலநேரத்தில் ரத்தம் கலந்தும் வரலாம்.

நாம் உண்ணும் உணவு மற்றும் குடிநீரில் ஏற்படும் மாற்றம், போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் சிறுநீரை அடக்குதலால் கற்கள் உண்டாகின்றன. சுண்ணாம்பு கற்கள், அமினோ அமில கற்கள், யூரிக் அமில கற்கள் மற்றும் கிருமித்தொற்றால் அழுகிய கற்கள் உண்டாகின்றன. ௨௦ முதல் ௩௦ வயதுக்கு உட்பட்டவர்கள், சிறுகுழந்தைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் அதிகமாக உண்டாகின்றன. இவற்றுடன் ஆக்ஸலேட், பாஸ்பேட், கார்பனேட் போன்ற உப்புகள் சேர்ந்து சுண்ணாம்புக் கலவை கற்களாக மாறுகின்றன.


தினமும் 2 கிராம் உப்பு

அளவுக்கதிகமாக அடிக்கடி கீரை உணவுகளை மட்டும் உட்கொள்ளுதல், விட்டமின் 'சி' நிறைந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுதல், நாள்பட்ட குடல்புண், குடலில் கிருமி வளர்ச்சி காரணமாக சுண்ணாம்புக்கலவைக் கற்கள் உருவாகின்றன. உணவில் உப்பு அதிகம் சாப்பிடுவதாலும் கற்கள் அதிகரிக்கின்றன. ஒவ்வொருவரும் தினமும் 2 முதல் 4 கிராம் அளவு மட்டுமே உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அமினோ அமில மாறுபாட்டால் உண்டாகும் கற்கள், பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உண்டாகின்றன. மரபணுரீதியாக இந்த கற்கள் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கின்றன. கிருமித் தொற்றால் தோன்றும் கற்கள் பெண்களைத் தான் அதிகம் பாதிக்கின்றன.


உள்ளங்கை அளவு இறைச்சி :


புளித்துப் போன புரத உணவுகளை அதிகம் உட்கொள்வதால் யூரிக் அமில கற்கள் தோன்றுகின்றன. தினமும் 350 கிராம் புரத உணவு போதும். உள்ளங்கை அளவிற்கு மேல் இறைச்சி சாப்பிட வேண்டாம்.ஒரு லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் அருந்துபவர்களே சிறுநீரக கற்களின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்கள் சிறுநீர் கழிக்கும் போது வடிகட்டியில் பிடித்துப் பார்த்தால் கற்கள் வெளியேறுவது தெரியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, சிறுநீர், ரத்தப்பரிசோதனை மூலம் சிறுநீரகக் கற்களை கண்டறியலாம். ஒருமுறை கற்கள் வந்தால் ஏழாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு கைப்பிடி நெருஞ்சில் செடியை எடுத்து கழுவி சிறுதுண்டுகளாக்கி அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு 124 மில்லியாக சுண்ட வைத்து வடிகட்ட வேண்டும். தினம் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்தால் கற்கள் கரைந்து வெளியேறும். சிறுபீளை செடி, நெருஞ்சிமுள், பெருநெருஞ்சில், வெள்ளரி விதையை உலர்த்தி ஒன்றிரண்டாக இடிக்க வேண்டும். இதை நீரில் கொதிக்கவைத்து தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் கற்கள் தூளாகி வெளியேறும்.
என்ன வகை உணவுகள் :


சிறுநீரைப் பெருக்கக்கூடிய பார்லிக் கஞ்சி, சுரை, பூசணி, புடலை, வெள்ளரி, பரங்கி, முள்ளங்கி, வாழைத்தண்டு, சவ்சவ், தரைப்பசலையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் 250 மில்லி தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். நீர் கலந்த எலுமிச்சைச் சாறு பருகலாம். ஒருநாளைக்கு 250 மில்லி பால் அருந்தலாம். 200௦ கிராம் புளித்த தயிர் சாப்பிடலாம். தானியங்களை உடைத்து பொடியாக்குவதை விட முழுமையாக வேகவைத்து சாப்பிடலாம்.


தவிர்க்க வேண்டியது:


டீ, ஆரஞ்ச், சாத்துக்குடி, திராட்சை ஜூஸ், பாட்டில் குளிர்பானங்கள், செயற்கை பழச்சாற்றை தவிர்க்க வேண்டும். பழைய, ஆறிய உணவு, கீரை, கிழங்கு சூப், அசைவ சூப், சாஸ், குருமா, ஜாம், பப்ஸ், சிப்ஸ் தவிர்க்க வேண்டும். கீரை, பீட்ரூட், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கொட்டை வகைகள், சாக்லேட், ரஸ்க், உலர்ந்த பழங்களில் உள்ள ஆக்ஸலேட், கற்களை அதிகப்படுத்துகின்றன. தைராய்டு சுரப்பியின் அதிகமாக பணி, உடல்எடையை குறைப்பதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை, 'கவுட்' எனப்படும் மூட்டுவலி, சிறுநீர்ப் பாதையில் புண், 'புராஸ்டேட்' கோள வீக்கத்தாலும் கற்கள் உருவாகலாம். இதை கண்டுபிடிக்க மருத்துவப் பரிசோதனை அவசியம். ௪ மில்லி மீட்டருக்கு குறைவான கற்கள் தானாகவே வெளியேறிவிடும். அதற்கு மேற்பட்ட கற்கள் சிறுநீர்ப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம்.மினரல் வாட்டர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில்
சுண்ணாம்புச்சத்து குறைவாக இருப்பதால் அதை அருந்துபவர்களுக்கு சுண்ணாம்பு கற்கள் அதிகரிக்கின்றன. சாதாரண நிலத்தடி நீரை கொதிக்கவைத்து ஆறியபின் குடிப்பதே நல்லது. கண்ணாடி போன்றது நமது உடம்பு. நல்ல உணவு உண்டு அதனை மென்மையாய் காப்போம்.
-டாக்டர்.
ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மதுரை.
98421 67567

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201517:04:49 IST Report Abuse
JeevaKiran தினமும் ஒரு பழம் என்றால் வாழைபழம்.
Rate this:
Share this comment
Cancel
Sushil - Toronto,கனடா
05-நவ-201420:27:23 IST Report Abuse
Sushil 2000 கிராம் தயிர் தேவையா தினமும்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
05-நவ-201416:07:01 IST Report Abuse
kundalakesi கீரையில் பாலக் கீரை யூரிக் கற்களை உருவாக்கும் தன்மையது, அதனால் தவிர்க்க வேண்டும் . அரைக் கீரை முளைக்கீரை மேன்மையான பைபர் உணவுகள், அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X