வாஷிங்டன்: 'பலமான இந்திய ராணுவத்தை சமாளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நிழலாக பயன்படுத்துகிறது' என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து, அமெரிக்க ராணுவம் சார்பில், அந்த நாட்டு பார்லிமென்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் தொல்லை கொடுக்கும் நடவடிக்கைகளில், பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இந்தியாவில், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்பதற்கு, சில நாட்களுக்கு முன், ஆப்கானில் உள்ள, இந்திய தூதரகம் மீது, லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த அமைப்பு, பாகிஸ்தானை மையமாக வைத்து தான் செயல்படுகிறது. ஆப்கான் மற்றும் இந்திய ராணுவத்தை சமாளிப்பதற்கு, தங்களுக்கு ப திலாக, பயங்கரவாத அமைப்புகளை பயன்படுத்துவதையும், இதற்காக பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் வழக்கமாக வைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE