லாரி தண்ணீர் சப்ளையில் கூட்டணி "கல்லா' கட்டும் "முக்கிய புள்ளி'கள்!

Added : நவ 06, 2014 | |
Advertisement
வானில் கருமேக கூட்டங்கள் திரண்டிருக்க, ஸ்கூட்டரில் அரக்க பறக்க பறந்து வந்தாள் மித்ரா. அவளை வரவேற்று, சோபாவில் அமர வைத்த சித்ரா, சூடாக இஞ்சி டீ கொடுத்து <உபசரித்ததோடு, ""ஏன்... என்னாச்சு? அரக்க பறக்க இவ்ளோ வேகமா வந்தாய்,'' என கேள்வி எழுப்பினாள். ""இன்னும் ரெண்டு நாளைக்கு மழை வரும்னு வானிலை மையம் சொல்லியிருந்துச்சு. கருமேக கூட்டங்கள் திரண்டிருந்ததால, மழை
லாரி தண்ணீர் சப்ளையில் கூட்டணி  "கல்லா' கட்டும் "முக்கிய புள்ளி'கள்!

வானில் கருமேக கூட்டங்கள் திரண்டிருக்க, ஸ்கூட்டரில் அரக்க பறக்க பறந்து வந்தாள் மித்ரா. அவளை வரவேற்று, சோபாவில் அமர வைத்த சித்ரா, சூடாக இஞ்சி டீ கொடுத்து <உபசரித்ததோடு, ""ஏன்... என்னாச்சு? அரக்க பறக்க இவ்ளோ வேகமா வந்தாய்,'' என கேள்வி எழுப்பினாள்.


""இன்னும் ரெண்டு நாளைக்கு மழை வரும்னு வானிலை மையம் சொல்லியிருந்துச்சு. கருமேக கூட்டங்கள் திரண்டிருந்ததால, மழை வந்துரும்னு நெனைச்சு வேகமா வந்தேன்,'' என காரணத்தை விளக்கினாள் மித்ரா.


""அது சரி, மாநகராட்சி லிமிட்டுக்குள்ள லாரி தண்ணீர் சப்ளை செய்றதில், சில கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து, கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என, கேள்வியை வீசினாள் சித்ரா.


""ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். பொதுக்குழாய் அமைக்க முடியாத எடத்துக்கு, மாநகராட்சி தரப்புல லாரி தண்ணீர் சப்ளை செய்றது வழக்கம். சில கவுன்சிலர்களும், சில அதிகாரிகளும் கூட்டணி அமைச்சு, சில லாரிகளுக்கு "எக்ஸ்ட்ரா டிரிப்' அடிக்கிறதுக்கு தண்ணீர் கொடுக்கிறாங்க. எத்தனை லோடு "எக்ஸ்ட்ரா' அடிக்கிறாங்கன்னு கணக்குப் போடுறதுக்காக நோட்டு போட்டிருக்காங்க. அதை "கால்குலேட்' செய்து, பணத்தை பிரிச்சிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


""அரசு நலத்திட்டங்களையாவது ஒழுங்கா செயல்படுத்துறாங்களா? முதியோர் ஓய்வூதியம் சரியா கிடைக்கறதில்லைன்னு சொல்றாங்களே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""சமூக நலத்துறையில் நிதி இல்லைன்னு சொல்றாங்க; அதனால, ஒரு பயனாளியை கூட தேர்வு செய்யக்கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. ஏற்கனவே, பலரது விண்ணப்பங்களை நிராகரிச்சிட்டாங்க. புதுசா விண்ணப்பம் செய்திருக்கும் முதியோர்களுக்கு, இப்போதைக்கு எதுவும் கிடைக்காது,'' என்றாள் மித்ரா.


""ரெண்டு நாளைக்கு முன்னாடி, கலெக்டர் ஆபீஸ் போயிருந்தேன். "மாஜி' முதல்வர் படத்தை இன்னமும் எடுக்காம இருக்காங்களே... அது ஏன்...?'' என கேள்வி எழுப்பினாள் சித்ரா.


""இது சம்பந்தமா, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அன்னைக்கே, எதிர்கட்சிக்காரங்க தரப்புல கேள்வி எழுப்புனாங்க. அதற்கு, செய்தி-மக்கள் தொடர்பு துறையில் இருந்து இன்னும் உத்தரவு வரலைன்னு சொல்லி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைச்சார் கலெக்டர். சமீபத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு "லேப்-டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்துச்சு. ஆளுங்கட்சி தரப்புல, "மாஜி' முதல்வர் படம் கண்டிப்பா வச்சாகணும்னு சொல்லிட்டாங்க. "ரூல்ஸ்'படி, வைக்கக்கூடாதே என டீச்சர்ஸ் சொல்ல, ஆளுங்கட்சி பிரதிநிதிகள் சொல்றாங்க, என்ன செய்றது என புலம்பியபடி, வேற வழியில்லாம, கடைசி நேரத்துல, போட்டோ ஏற்பாடு செஞ்சு பள்ளி நிர்வாகிகள் சமாளிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


""அதெல்லாம் சரி... அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே, ஆளுங்கட்சிக்காரங்க, "கலெக்ஷன்' பார்த்துட்டாங்களாமே,'' என சித்ரா கேட்க, ""அங்கன்வாடிக்கு ஊழியர் தேர்வு செய்யப்போறதா அறிவிப்பு வெளியிட்டிருந்தாங்களே, அதைச் சொல்றீங்களா? அதெல்லாம், கண்துடைப்புக்காக வெளியிடுற அறிவிப்பு. அங்கன்வாடிக்கு ஆள் நியமிக்கிற விஷயம் ஆளுங்கட்சிக்காரங்களுக்கு முன்கூட்டியே தெரிஞ்சிடுச்சு.


காலியா இருக்கிற பணியிடங்கள் "லிஸ்ட்' தெரிஞ்சிக்கிட்டு, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சிலர் வசூலிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


""மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சீரமைப்பு பணி செய்றதுக்கு, ரூ.52 கோடி கேட்டிருக்காங்களாமே,'' என கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""கருத்துரு தானே அனுப்புறோம்; கொஞ்சம் ஜாஸ்தியாவே கேட்போம்னு கேட்டிருக்காங்க. எவ்ளோ கொடுத்தாலும், நம்மூர் அதிகாரிகளில் சிலர் சுரண்டிடுறாங்களே,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X