"நான் ஆட்டு வியாபாரி": கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

Added : நவ 07, 2014
Share
Advertisement
"நான் ஆட்டு வியாபாரி": கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

பருத்திவீரனில் தொடங்கி மெட்ராஸ் வரை மாறுபட்ட கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகர் கார்த்தி. தொடக்கமே 'ஹாட்ரிக் ஹிட்' அடித்து தன் அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்தவர். தனக்கென தனி முகவரி இருந்தும் அதை பயன்படுத்தாமல் சுய சிந்தனையில் செயல்படும் நடிகர்களில் ஒருவர். மெட்ராஸ் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவி.,யில் 'கொம்பன்' படபிடிப்பில் இருந்தவர் 'தினமலர்'வாசகர்களுக்காக மனம் திறந்த நிமிடங்கள்...
''எம்.எஸ்., படிக்க நியுயார்க் புறப்படும் போதே என் தொழில் சினிமாஎன்பதை வீட்டில் கூறிவிட்டேன். படிப்பு முடிந்ததும் இயக்குனர்மணிரத்தினத்திடம் அசோசியேட் டைரக்டராக இரு ஆண்டுகள்பணியாற்றினேன். அமீரின் பருத்திவீரன் வாய்ப்பு என் தொடக்கத்தைவெற்றியாக பதிவு செய்தது''. என்ற முன்னுரையுடன் பேசத்தொடங்கினார்.
* கதை தேர்வில் கடைபிடிக்கும் யுக்தி என்ன?
சினிமாத் தனமான கதை சரிவராது. உண்மை சம்பவங்களைபின்னணியாக கொண்ட சென்டிமெண்ட் நிறைந்த சண்டை படங்கள்நிச்சயம் வெற்றி பெறும். அதில் நடித்தால் ரசிகர்களின் கைத்தட்டல் பெறலாம்.
* கார்த்தி என்றாலே 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பில் தான் நடிப்பாரா?
நடிப்பு என்பது கலை. நல்ல கதை தேடி வரும் போது தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் நடிக்கலாம்.
* மற்ற காட்சிகளை விட 'ரொமான்ஸ்' காட்சி நன்றாக வருமாமே?
அய்யய்யோ... அப்படியெல்லாம் இல்லை. இயக்குனர் சொல்வதை தான் செய்கிறேன்.
* இரண்டாம் பாகங்களில் நடிக்கும் ஐடியா உண்டா?
சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளன. அதே போல் நாகார்ஜூன் உடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க உள்ளேன்.
* கொம்பன் தலைப்பை பார்த்தால் பருத்திவீரன் மாதிரி...
இல்லை...இல்லை... ஒரு முறை செய்தது மறுபடி வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இம்முறை ராமநாதபுரம் ஆட்டு வியாபாரி கதாபாத்திரம். விவசாயம் பொய்த்து ராணுவம் செல்லும் இளைஞர்களின் ஊர் பாசம் தான் கதை என கதையை உடைத்தவர் அடுத்த ஷாட்டிற்கு தயாரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X