டேபிளுக்கு டேபிள் "கப்பம்' "கரன்சி' இல்லாவிட்டால் சிக்கல்!

Added : நவ 11, 2014
Share
Advertisement
அன்றைய தினம் விடுமுறை நாள். சித்ராவும், மித்ராவும் சேர்ந்து ஸ்கூட்டரில், காங்கயம் சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, படிக்கட்டு வழியாக இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ""ஒரு மண்டலம் விரதம் இருந்து காத்திருந்தாலும், மொய் வைக்காமல் எதுவும் நடக்காது...'' என சலிப்புடன் கூறினாள் மித்ரா. ""ஏன், என்னாச்சு... இப்படி அலுத்துக்கிற...'' என
டேபிளுக்கு டேபிள் "கப்பம்'  "கரன்சி' இல்லாவிட்டால் சிக்கல்!

அன்றைய தினம் விடுமுறை நாள். சித்ராவும், மித்ராவும் சேர்ந்து ஸ்கூட்டரில், காங்கயம் சிவன்மலை கோவிலுக்கு சென்றிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, படிக்கட்டு வழியாக இறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது, ""ஒரு மண்டலம் விரதம் இருந்து காத்திருந்தாலும், மொய் வைக்காமல் எதுவும் நடக்காது...''


என சலிப்புடன் கூறினாள் மித்ரா.


""ஏன், என்னாச்சு... இப்படி அலுத்துக்கிற...'' என படபடத்தாள் சித்ரா.


""கார்ப்பரேஷன் அதிகாரிகளைத்தான் சொல்றேன்... மூணாவது மண்டலத்துல வீட்டு வரைபட அனுமதி வாங்கறதுக்குள்ள விழி பிதுங்கிடுது. வரைபட அனுமதி வாங்குறதுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கு,'' என்று மித்ரா முடிப்பதற்குள், ""சும்மா அனுமதி கொடுப்பாங்களா?


அதுக்குன்னு, அரசாங்கமே கட்டணம் நிர்ணயிச்சிருக்கே,'' என சித்ரா குறுக்கிட்டாள்.


""சொல்றதை முழுசா கேளுங்க. வழக்கமா செலுத்த வேண்டிய கட்டணம் தனி; நான், சொல்றது ரசீது இல்லாம செலு<த்த வேண்டிய தொகை. ஒரு


"பிளான் அப்ரூவ்டு' வாங்கணும்னா


"டென் தவ்சன்' கொடுக்கணும்னு வரைமுறை ஏற்படுத்தியிருக்காங்க. அதுவும் ஒருத்தருக்கு மட்டும் கொடுத்தா போதாது; கவுன்சிலர் முதல் ஒவ்வொரு டேபிளுக்கும் கொடுத்தாகணும்னு பேசி முடிக்கிறாங்க. அடுத்தகட்டமா, வீட்டு வரி, குடிநீர் கனெக்ஷன், பாதாள சாக்கடை இணைப்புக்கு அவங்ககிட்ட போக வேண்டியிருக்குமேனு பயந்து, மக்களும் பணத்தை கொடுத்துட்டு போறாங்க.


சிலர் கெஞ்சி கூத்தாடி, தள்ளுபடி வாங்குறாங்க,'' என்ற மித்ரா, ""லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க மாசத்துக்கு ஒரு வழக்குத்தான் பதிவு செய்வாங்க போலிருக்கு; மாநகராட்சி பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேங்கிறாங்க,''


என புலம்பினாள்.


""சிட்டி மம்மிக்கும், துணையானவருக்கும் இடையே முட்டல் - மோதல் தொடருதாமே,''என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""ஆமாக்கா, பொது இடங்களிலும், கட்சி கூட்டங்களிலும் சந்திக்கும்போது, "அக்கா - அண்ணா' என பாசத்தை பொழிகின்றனர். ஆனா, மாநகராட்சிக்குள்ள நுழைஞ்சா,


கீரி - பாம்பு போல மாறிடுறாங்க,''


என்றாள் மித்ரா.


""கொஞசம் விளக்கமாத்தான் சொல்லேன்,'' என சித்ரா கேட்க, ""30 வார்டுகளில் குப்பை அள்ளுற வேலை, தனியார் வசம் ஒப்படைச்சிருக்காங்க. அந்த திட்டத்தை "ஓகே' சொல்றதுக்கு முன்னாடி, விளக்கப்படம் திரையிட்டு காண்பிச்சாங்க. குப்பை அள்ளிட்டு போற லாரி, எடை போடுறதை "ஆன்-லைனில்' பார்க்கலாம்; குப்பை அள்ளாம போனால் சிவப்பு விளக்கு எரியும். குப்பை அள்ளாம ஏமாத்த முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. அதை, இப்ப, "ஆன்-லைனில்' காட்டுங்கன்னு, துணையானவர் கேட்டிருக்கார். இ.இ.,


ரூம், இ2 டேபிள்னு, ஒவ்வொரு


இடமா கூட்டிட்டு போயி, கடைசியா,


ஒரு கம்ப்யூட்டரில் ஒக்கார வச்சு, "ஆன்-லைனில்' படம் காட்டுனாங்க.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிட்டி மம்மி, இதெல்லாம் என்ன வேலை?


யாரு இப்படியெல்லாம் செய்யச் சொன்னாங்கன்னு, அதிகாரிங்களை "டோஸ்' விட்டிருக்கிறார்,'' என்றாள் மித்ரா.


""உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி... அதிகாரிங்க, ரெண்டு பக்கமும் அடி வாங்குறாங்க,'' என்று கூறி கலகலவென சிரித்தாள் சித்ரா.


""அதெல்லாம் சரி... ஸ்கூல் பசங்களுக்கு பேக் வந்து ரெண்டு வாரமாகியும் இன்னும் கொடுக்காமலே வச்சிருக்காங்களே... ஏன்,'' என கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.


""அதுவா, ஸ்கூல் பேக்கில் வழக்கம்போல் "அம்மா' படம் அச்சிட்டிருக்கு. இப்ப, கோர்ட்டுல வழக்கு போட்டிருக்கிறதால, இந்த தருணத்துல கொடுத்தா சிக்கலாயிடுமோன்னு பயப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.


""மக்களோட வரிப்பணத்துல வாங்கித்தர்ற இலவச பொருட்களுக்கு, தமிழக அரசோட முத்திரை மட்டும் அச்சிட்டா போதும்; யாரோட போட்டோவும் அச்சிடத்தேவை யில்லைங்கற முடிவுக்கு ஆட்சி நடத்துறவங்க வந்தா, எதிர்காலத்துல


இந்த மாதிரி சிக்கல் வராது,'' என்று மித்ரா சொல்வதற்கும், மலை படிக்கட்டு முடிந்து, அடிவாரத்துக்கு வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X