எங்கெங்கு காணினும் நோட்டம் இடை விடாம தொடருது ஒரு கூட்டம்!| Dinamalar

எங்கெங்கு காணினும் நோட்டம் இடை விடாம தொடருது ஒரு கூட்டம்!

Added : நவ 11, 2014
Share
மி த்து! ஏன்டி...ஒரு வாரமா போனையே காணோம். போன் பண்ணாலும் எடுக்கலை. அதான் நேர்ல வந்துட்டேன்!,'' என்று மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டே கேட்டாள் சித்ரா. ''வேற ஒண்ணுமில்லக்கா! லேசா காய்ச்சல்...அப்புறம் கொஞ்சம் மனசும் சரியில்லை. வீட்டை விட்டே நகரலை,'' என்றாள் மித்ரா. ''உடம்பு சரியில்லைன்னா, ஹாஸ்பிடல் போனியா?'' என்றாள் சித்ரா. ''இல்லக்கா. இப்ப காய்ச்சல் இல்லை.
எங்கெங்கு காணினும் நோட்டம்  இடை விடாம தொடருது ஒரு கூட்டம்!

மி த்து! ஏன்டி...ஒரு வாரமா போனையே காணோம். போன் பண்ணாலும் எடுக்கலை. அதான் நேர்ல வந்துட்டேன்!,'' என்று மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டே கேட்டாள் சித்ரா.

''வேற ஒண்ணுமில்லக்கா! லேசா காய்ச்சல்...அப்புறம் கொஞ்சம் மனசும் சரியில்லை. வீட்டை விட்டே நகரலை,'' என்றாள் மித்ரா.


''உடம்பு சரியில்லைன்னா, ஹாஸ்பிடல் போனியா?'' என்றாள் சித்ரா.


''இல்லக்கா. இப்ப காய்ச்சல் இல்லை. நீ வந்தா, கோவிலுக்குப் போலாம்னு நினைச்சேன்!'' என்றாள் மித்ரா.


''ஹாஸ்பிடல், கோவில்ன்னு சொன்னதும், ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. காந்தி பார்க் பக்கத்துல இருக்கிற ஒரு கோவிலோட இ.ஓ., ஒருத்தரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க தெரியுமா? அவரைப் பத்தி, ஏகப்பட்ட மேட்டர் இப்ப வெளிய வருது. ஓட்டல்காரங்ககிட்ட காசை வாங்கிட்டு, மண்டபத்தை கோணலா கட்டுனது மட்டுமில்லாம, கட்டுன செலவுலயும் காசு அடிச்சிருக்காரு.

ஒரு தூண் கட்றதுக்கு, 8 ஆயிரம் ரூபா செலவாம்; இவரு, ஒவ்வொரு தூணுக்கும் மூணு பேர்ட்ட தலைக்கு 10 ஆயிரம் ரூபா கலெக்ஷன் பண்ணிருக்காரு. தப்புப் பண்ணதுக்காக, ஆபீசரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க. ஆனா, கட்டடத்தை தான் என்ன செய்யப்போறாங்கன்னு தெரியலை!,'' என்றாள் சித்ரா.


''கட்டடத்துல காசு பண்றதுதான் நம்ம ஊர்ல பேஷனாச்சே. அதுலயும், இந்த ஏ.டி.பி.ஓ., உதவியாளர்ங்கிற பேர்ல சில பேரு பண்ற அலும்பு இருக்கே....அய்யய்யய்யய்யோ....!''


''ஏன் ஏ.டி.பி.ஓ.,எல்லாம் ரொம்ப சுத்தமான ஆளுங்களா?,''


''அப்பிடிச் சொல்ல முடியாது. ஆனா, அவுங்க கூட கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறாங்க. அவுங்க உதவியாளர்கதான் ஓவரா ஆடுறாங்கன்னு சொல்றாங்க. அதுலயும், சென்ட்ரல்ல இருந்தும், வெஸ்ட்ல இருந்தும் தான் எக்கச்சக்க 'கம்பிளைன்ட்'டா இருக்கு!,'' என்ற மித்ரா, இடையில் வந்த அலைபேசி அழைப்பை ஏற்று, 'ஹேய் விமலா! புவனேஸ்வரி வீட்டு பங்ஷனுக்கு மறக்காம வந்துடு. முத்து கிருஷ்ணனையும், நெல்சனையும் கண்டிப்பா வரச்சொல்லு!,'' என்று பேச்சைத் துண்டித்தாள்.


''பங்ஷன்னு சொன்னாலே, நம்ம மாவட்ட வி.ஐ.பி., ஞாபகம் தான் வருது. மீட்டிங், அரசு விழான்னு எது நடந்தாலும், கையிலயே ஜெ., போட்டோவைக் கொண்டு வந்து, அதை முன்னால வச்சிக்கிட்டு தான் பேசுறாரு. பார்க்கவே ரொம்ப வித்தியாசமா இருக்கு. இவரு, இந்த படத்தைக் கொண்டு வரலைன்னா, அவருக்கு விசுவாசம் இல்லைன்னு ஆயிருமா?,'' என்றாள் சித்ரா.


''அவரை விடுக்கா! கட்சிக்காரரு...அந்தக் கட்சியில, இப்பிடியெல்லாம் இருந்தாத்தான் நாற்காலிய தக்க வச்சுக்க முடியும். இந்த கார்ப்பரேஷன் ஆபீசர் இருக்காரே...அவருக்கு ஏன் இந்த வேலைன்னு தெரியலை. போன வாரம்... 'தாலிக்கு தங்கம்' வழங்குற நிகழ்ச்சியில, 'இது அம்மா அவர்களின் சீரிய திட்டம்'னு புல்லாங்குழல் வாசிக்கிறாரு!,'' என்றாள் மித்ரா.


''அவர் ஏதோ புதுக்கோட்டைக்கு கலெக்டராகப் போகப்போறாரு. அங்க இருக்கிற மினிஸ்டர், இவரை அங்க கொண்டு போறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கிறதா ஒரு தகவல் கேள்விப்பட்டேன்!,''


''பத்து நாளா...காத்துல அந்த சேதி 'ஸ்க்ரோலிங்' ஓடிட்டு தான் இருக்கு. ஆனா, இப்பதான் வந்திருக்காரு. இவரை மாத்த வேணாம்னு, இங்க இருக்கிற ஆளும்கட்சி வி.ஐ.பி.,ங்க மேலிடத்துல பேசி சரி பண்ணிட்டாங்களாம்!,''


''புது மேயரு, பதவிக்கு வந்து ரெண்டு மாசமாகப்போகுது. ஆனா, 'ஆக்டிவ்'வா ஒரு வேலையும் செய்றாப்புல தெரியலையே. அவரு சொல்றது எதையுமே ஆபீசர்கள் கேக்கிறதில்லைன்னு, ஆளும்கட்சி கவுன்சிலர்க புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க!,'' என்றாள் சித்ரா.


''அதென்னவோ உண்மை தான்! ஆனா, கட்டட வசூலு, குப்பை ஊழல்னு அவரும் பல விஷயங்களுக்கு தீர்வு காண்றதுக்கு முயற்சி பண்றாப்புல தான் தெரியுது. ஆனா, ஒரு பேட்ஸ்மேனுக்கு ரெண்டு பக்கமும் பந்து வீசுனா, அவரு எப்படித்தான் அடிப்பாரு?,'' என்று சிரித்தாள் மித்ரா.


''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன். அவரு, எங்க போறாரு, வர்றாரு, என்ன பேசுறாரு, யாரைச் சந்திக்கிறாருன்னு நோட்டம் பாக்கிறதுக்குன்னே, ஒரு டீமை 'பழையவரு' இறக்கி விட்ருக்காராமே!,'' என்றாள் சித்ரா.


''இருக்கலாம்! அக்கா...முந்தா நாளு நடந்த ஒரு கல்யாணத்துக்காக, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டுல நடந்த 'ஷோக்'கா நடந்த வசூலைப் பத்திப் பேசுனோமே. இப்போ...புதுசு புதுசா தகவல் வருது. ரோட்டுக்கடைக்காரங்ககிட்ட அந்த கவுன்சிலர், வசூலைப் போட்டது மட்டுமில்லாம, 'நீங்கள்லாம் சேர்ந்து, என் பொண்ணு கல்யாணத்தன்னிக்கு, ரோடெல்லாம் பிளக்ஸ் வச்சிருங்க'ன்னு உத்தரவு போட்ருக்காரு. ஆனா, பெருசா யாரும் பிளக்ஸ் வச்சது மாதிரித் தெரியலை!,'' என்றாள் மித்ரா.


''சில கவுன்சிலருங்க, கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க...! அது சரி! புது மேயர் வந்து ஏன் இன்னும் கவுன்சில் கூட்டமே நடத்தாம இருக்காங்க?,'' என்றாள் சித்ரா.


''அப்பிடி கூட்டம் நடத்துனா, கவுன்சில் ஹால்ல இருக்கிற ஜெயலலிதா போட்டோவை எடுக்கச் சொல்லி, பெரிய அளவுல போராட்டம் நடத்துறதுக்கு டிஎம்கே


காரங்க 'பிளான்' பண்ணிருக்காங்க!,''


''ஆமா மித்து! என் காதுக்கும் தகவல் வந்துச்சு... கவுன்சில் கூட்டத்துக்கு, துணியில சுத்தி, சில போட்டோக்களை கொண்டு வரப்போறாங்களாம். ரகளை பண்ணி ஆளும்கட்சிக்காரங்க, அதை உடைச்சா, அவுங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்குமாம்!'' என்றாள் சித்ரா.


''டிஎம்கேகாரங்க கருணாநிதி போட்டோவைத்தான் கொண்டு வருவாங்க. அதை உடைச்சா, ஆளும்கட்சிக் காரங்க எதுக்கு அதிர்ச்சியாகப்


போறாங்க?,'' என்று குறுக்குக்


கேள்வி கேட்டாள் மித்ரா.


''அங்க தான், அவுங்க 'பிளான்' இருக்கு. அந்த துணிகள்ல கருணாநிதி போட்டோ மட்டுமில்லாம, அண்ணா, எம்ஜிஆர், ஓ.பி.எஸ்.,எல்லாரோட படமும் இருக்குமாம். இது எப்பிடி இருக்கு?,'' என்றாள் சித்ரா.


''ஊரு ரெண்டு பட்டா, யாருக்கோ கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. காங்கிரஸ் ரெண்டானதுல, டுபாக்கூர் பத்திரிகைக்காரங்க காட்டுல மழை!,'' என்றாள் மித்ரா.


''ஏன் நிறையா நியூஸ் கிடைச்சுதா?,''


''அவுங்களுக்கு எதுக்கு நியூஸ் வேணும். முத நாள்ல, பிரபு கோஷ்டியும், சிதம்பரம் கோஷ்டியும் சேர்ந்து ஒரு பிரஸ்மீட் கொடுத்து, தலைக்கு ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க. மறுநாள், வாசன் கோஷ்டியும் பிரஸ்மீட் நடத்தி, அதே மாதிரி ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க,''


''அடப்பாவமே! இன்னும் ரெண்டு கோஷ்டி இருந்தா, நல்லாயிருக்கும்னு நினைச்சிருப்பாங்க!'' என்று


சிரித்தாள் சித்ரா.


''அது கூடப் பரவாயில்லைக்கா! அந்த ரெண்டு பிரஸ்மீட்லயும் ஒரே மெசேஜ்தான் கொடுத்திருக்காங்க... 'எங்க கிட்ட தான் 80 பர்சன்டேஜ்


இருக்காங்க. மீதி 20 பர்சன்டேஜ் ஆளுங்களும், சீக்கிரமே எங்ககிட்ட வந்துருவாங்க'ங்கிறது தான் அந்த மெசேஜ்!,'' என்றாள் மித்ரா.


''மொத்தத்துல, ஒரு கோஷ்டிக்கு


80 பேராவது இருப்பாங்களா?,'' என்று கிண்டலடித்தாள் சித்ரா.


''சரி அதை விடு! போன வாரம் நாம பேசிட்டு இருந்தோமே. செக்போஸ்ட்ல செம்ம கலெக்ஷன் பார்க்கிற லேடி ஆபீசர் பத்தி...அவுங்களை வால்பாறைக்கு தூக்கி அடிச்சிட்டாங்க. ஆனா, போக மாட்டேன்னு அவரு அடம் பிடிக்கிறாராம்!,'' என்றாள் மித்ரா.


''சென்ட்ரல் ஆர்.டி.ஓ., ஆபீஸ் மேட்டர் ஒண்ணு சொல்றேன். அங்க இருக்கிற பிரேக் இன்ஸ்பெக்டர் ஒருத்தரு, வசூலை எல்லாம் தானே பாத்துக்கிட்டு, வேலை, மீட்டிங் எல்லாத்தையும் இன்னொரு பிரேக் இன்ஸ்பெக்டர் தலையில கட்டிர்றாராம். விஷயத்தை விசாரிச்சா, கொங்கு நாட்டுல கோட்டையோட பேரு கொண்ட 'மாஜி' ஒருத்தரோட சொந்தக்காரர்னு சொல்லிட்டுத் திரியுறாராம்!,''


''அவரே 'பவர்' இல்லாம, பதுங்கிட்டுத் திரியுறாரு. இதுல அவரு பேரை வச்சு ஆட்டமா?''


''மித்து! கார்ப்பரேஷன்ல கட்டடத்துல காசு பண்றவுங்க பவரைப் பிடுங்கிட்டாங்க...ஏன் தெரியுமா? எப்.எம்.,ல வேலை பார்க்கிற ஒரு லேடி, வீடு கட்றாங்க. அப்ரூவலுக்கு அவுங்ககிட்ட 50 ஆயிரம் ரூபா கேட்ருக்காங்க. அந்தம்மா, டெபுடி கமிஷனர் மேடத்தைப் பார்த்து, '10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைய முடிச்சுக் கொடுங்க'ன்னு பேரம் பேசிருக்காங்க. அவுங்க, கமிஷனர்ட்ட விஷயத்தைக் கொண்டு போக... அந்தம்மா 'பைலை' பார்த்தா, ஏற்கனவே கையெழுத்தாயிருந்துச்சாம். அதை உடனே, அந்த லேடிகிட்ட கொடுத்துட்டாங்க. அதுக்கு அப்புறம் தான், சின்ன கட்டடங்களுக்கு மேயர் மேற்பார்வையிலயே 'அப்ரூவல்' கொடுக்கத் திட்டம் போட்டு, குMகு அனுப்பவும் முடிவு பண்ணிருக்காங்க. ஓவரா ஆட்டம் போட்டா இதான் கதி!,'' என்றாள் சித்ரா.


''சரி வா! கிளம்புவோம்...!'' என்று பேச்சுக்கு இடைவெளி கொடுத்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X