பொது செய்தி

தமிழ்நாடு

148 உடல்களை மீட்ட பார்வையற்ற நாயகன் : காவல், தீயணைப்பு துறையினரின் நம்பிக்கை நட்சத்திரம்

Updated : நவ 16, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (23)
Share
Advertisement
தென்சென்னை புறநகரில் ஏரியில், குளம், கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்க காவல், தீயணைப்பு துறையினரே தவிக்கும் நிலையில், முற்றிலும் பார்வையே இல்லாவிட்டாலும் சர்வசாதாரணமாக மூழ்கி சில நிமிடங்களில் உடலை மீட்டு பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன். 40 வயதை கடந்த அவர் தனது 20 வயது முதல் உடல்களை மீட்கும் உன்னத பணியை மேற்கொண்டு
 148 உடல்களை மீட்ட பார்வையற்ற நாயகன் : காவல், தீயணைப்பு துறையினரின் நம்பிக்கை நட்சத்திரம்

தென்சென்னை புறநகரில் ஏரியில், குளம், கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்க காவல், தீயணைப்பு துறையினரே தவிக்கும் நிலையில், முற்றிலும் பார்வையே இல்லாவிட்டாலும் சர்வசாதாரணமாக மூழ்கி சில நிமிடங்களில் உடலை மீட்டு பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன். 40 வயதை கடந்த அவர் தனது 20 வயது முதல் உடல்களை மீட்கும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 148 உடல்களை மீட்டுள்ளார்.
20 வயதில்...:

தனது சேவை குறித்து சுந்தர்ராஜன் கூறியதாவது:எனது சொந்த ஊர் பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டைதான். என் தந்தை பாலன், லாரி டிரைவராக இருந்தார். தாய் வள்ளியம்மாள். நான் ஏழாவது மகன். எனக்கு பிறந்ததில் இருந்தே கண்பார்வை கிடையாது. சிறு வயதில் எனது சகோதரர்களுடன் கிணற்றில் குளிக்க செல்வேன். எனது அண்ணன் தேவநாதன் தான் எனக்கு நீச்சல் கற்று கொடுத்தார்.எனக்கு, 20 வயதாக இருந்தபோது, எங்கள், வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஒருவர் இறந்து மூழ்கிவிட்டார். கற்களுக்கு அடியில் சிக்கிய அவரை மீட்க முடியாமல் பலர் தவித்தனர். அப்போது, நான் தைரியமாக குதித்து அடியில் சென்று அவரது உடலை மீட்டு வந்தேன். அதை பாராட்டி, எனக்கு கணிசமான பணம் கொடுத்தனர்.
பார்வையற்ற எனக்கு யாரும் வேலை கொடுக்காததால் அதையே பணியாக செய்தால் என்னவென்று தோன்றியது. அதன் பிறகு அதே தொழிலாக மாறிவிட்டது. சுற்றுவட்டாரத்தில் யாராவது கிணறு, குளம், ஏரியில் விழுந்தால் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் என்னை அழைப்பர். எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் நான் உடலை மீ்ட்டு தருவேன். அதற்கு தகுந்த பணம் கொடுப்பார்கள். கடைசியாக வேளச்சேரி ஏரியில் இருந்து எடுத்த உடலுடன் சேர்த்து இதுவரை 148 உடல்களை மீட்டு வந்துவிட்டேன்.
அரசு பணி கிடைக்குமா?

நான், 60 அடி ஆழத்தில் உடல் இருந்தாலும் மூச்சை பிடித்து உள்ளே சென்று நீண்ட நேரம் தேடி உடலை கொண்டு வந்துவிடுவேன். கால்கள்தான் எனக்கு கண்கள். அதன் மூலமே உடல்களை தேடுவேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருந்தாலும் படிப்பறிவு இல்லாத எனக்கு அரசு பணி பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. எனது உணர்வுகளை காவல்துறை, தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துளேன். ஆனால், பலன் கிடைக்கவில்லை. உடலை எடுக்கும்போது மட்டும் ஒரு தொகை கொடுத்து ஓரம் கட்டி விடுவர்.வெடிகுண்டுகளை கண்டறிய நாய்களை அரசு பணியில் வைத்துக் கொள்கின்றனர். முப்படைகளில் ஒன்றில் குதிரைகளை கூட அரசு பணியில் அமர்த்திகொள்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளாக காவல்துறை, தீயணைப்பு துறைக்காக நான் செய்யும் இதே தொழிலை அரசு பணியாக மேற்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது எனது ஒரே ஒரு கோரிக்கை. இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kopula Jeyakumar - Madurai,இந்தியா
17-நவ-201420:43:22 IST Report Abuse
Kopula Jeyakumar நீங்க நோய் நொடியில்லாமல், நீண்ட காலம் நல்ல இருக்கணும்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201418:59:31 IST Report Abuse
தமிழ்வேல் நியாயமான கோரிக்கை. இதற்க்கென்று ஸ்ட்ரைக் செய்து நாரப்போட்டால் கூட தகும். ஆனால் வயிரல்லவா காய்ந்து போகும் ....ஒப்பந்த அடிப்படையிலாவது பாதுகாப்புத்துறை, தீயனைப்புத்துரைகள் மாதசம்பளமாக தர வழி இருக்கின்றது என்று நினைக்கின்றேன்..எனது அன்புடன் அநேக வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Mythili Narayan - Madurai,இந்தியா
17-நவ-201418:22:48 IST Report Abuse
Mythili Narayan புற கண்கள் இல்லாவிட்டாலும் அக கண் கொண்டு இவர் செய்யும் சேவை பாராட்டதக்கது மனித உருவில் மகாத்மா இப்பிடியும் மனிதர்கள் உள்ளனர் என்பதில் மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X