பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் அரசியல் அல்வா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Updated : நவ 18, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (152)
Advertisement
ரஜினியின் அரசியல் அல்வா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என, லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவரது ரசிகர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


கொந்தளிப்பு:

நடிகர் ரஜினி நடித்து வெளியாக இருக்கும், 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் அமீர் ஆகியோர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினர்.விழாவில், ரஜினி பேசுகையில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என்றார்.அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல, ரஜினி பேசிய பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து, ரஜினி ரசிகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இப்படித்தான், பேசி வருகிறார். மூப்பனார் த.மா.கா.,வை ஆரம்பித்து, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், அந்த கூட்டணிக்காக குரல் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்றார்.பின், பா.ஜ., பக்கம் சாய்ந்து தாமரைக்கு ஓட்டளிக்க கேட்டுக் கொண்டார். இப்படி அரசியல் பேசும் அவர், சில நேரங்களில், தண்ணீர் பிரச்னை உட்பட மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் செலுத்துவது போல பேச ஆரம்பிப்பார்.பாபா படம் தொடர்பாக, பா.ம.க.,வுடன் ஏற்பட்ட சர்ச்சையைக் கூட, படத்திற்கான இலவச விளம்பரமாக்கினார். லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி, ரஜினி வீடு தேடிச் சென்றார். ஆனாலும், ரஜினியின் தந்திரம் அறிந்து, அவரை அரசியலுக்கு வரச் சொல்லி, மோடி வற்புறுத்தவில்லை.அதன்பின், லிங்கா படபிடிப்பு, மைசூருவில் நடந்தபோது, பா.ஜ., தலைவர் அமித் ஷா, ரஜினியிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும், பா.ஜ.,வின் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, சென்னையில் இருந்த ரஜினியை கண்டு கொள்ளவே இல்லை.ரஜினியை கட்சிக்கு அழைத்த, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், திடுமென தன் நிலையை மாற்றி, 'ரஜினியை நம்பி தமிழக பா.ஜ., இல்லை' என்று, கூறி விட்டார்.


விசுவாசம்:

இதற்கிடையில், சிறையில் இருந்த ஜெயலலிதா, ஜாமினில் வெளிவந்ததும், முதல் ஆளாக அவருக்கு வாழ்த்துச் சொல்லி, தன் விசுவாசத்தைக் காட்டினார்.இப்படி எல்லோருடனும் நட்புடன் இருந்து, வித்தியாசமான அரசியல் செய்வதில் தேர்ந்தவராக இருக்கும் ரஜினி, ஒரு நாளும் அரசியலுக்கு வரமாட்டார்.ஆனால், தொடர்ந்து அரசியலுக்கு வரப்போவது போல பேசி, தன் படத்தை சிறப்பாக வியாபாரம் செய்வதில் கில்லாடி. அவரின், இப்போதைய பேச்சுக்களும் அப்படிப்பட்டதே. இனியும் அவர் அரசியலுக்கு வருவார். அவருக்காக, படத்தை திரையரங்கில் ஓட வைக்கும் ரசிகர்களுக்கு, எம்.எல்.ஏ., சீட் தருவார்; ஜெயித்து வந்து, ஆட்சி அமைக்கும்போது, அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என, எந்த ரசிகனும் ஏமாற மாட்டான்.இது அவருக்கும் தெரியும்; அவருடைய ரசிகனுக்கும் தெரியும். திரைப்படத்துக்குக்கூட முடிவு உண்டு. ஆனால், ரஜினியின் அரசியல் பேச்சுக்கு மட்டும், முடிவே கிடையாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ரசிகர்களால் பாதசாரிகள் அவதி:

சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள, பிரபல திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த, 'லிங்கா' படத்தின், இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. விழாவிற்கு வந்த ரஜினி ரசிகர்கள், நடைபாதையில் வாகனங்களை நிறுத்திச் சென்றதால், பாதசாரிகள் வாகன நெரிசலில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. வாகனங்களை, நடைபாதையில் நிறுத்துவதை தடுக்காமல், போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதனால், நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், கடும் அவதிப்பட்டனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh vengetaraman - auckland,நியூ சிலாந்து
17-நவ-201423:31:42 IST Report Abuse
suresh vengetaraman இதுக்கு விஜயகாந்த் எவளவோ பெட்டெர்..... அட்லீஸ்ட் போதையிலாவது ஏதோ பேசறாரு.....
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
17-நவ-201423:18:23 IST Report Abuse
venkatesh இவர் அரசியல்ல இறங்கவே தயங்குறாரே இவர் எப்படி இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் முடிவு எடுக்க போறார் . சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டும் போதாது தலைவா செயல்ல இருக்கனும் . அவன் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் .
Rate this:
Share this comment
sardar papparayudu - nasik,இந்தியா
18-நவ-201413:22:17 IST Report Abuse
sardar papparayuduநடிகர் ராஜேஷ் கன்னாவ் கேளுங்க , அவர் எப்படி வருவார் , எப்போ வருவார்னு கொடுத்த காசுக்கு மேல கூவி பதில் சொல்லுவார் ....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
17-நவ-201423:09:29 IST Report Abuse
கைப்புள்ள ஹலோ ரஜினி, இப்போ இருக்கிற அளவில், ஒரு பெரிய மாற்றத்தையோ, ஒரு பஞ்ச் உருவாக்குற அளவுக்கு உங்க பாப்புலாரிட்டி பெரியதாக இல்லை என்பதே உண்மை. உங்க பாப்புலாரிட்டி கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகி சிறுத்து விட்டது. பெரும்பான்மை ரசிகர்கள் ( இளைஞர்கள் ) எல்லாம் இந்த கால நடிகர்கள் பின்னால் இருக்கிறார்கள். உங்களுடைய ரசிகர்கள் எல்லாம் நடுவயது, கிழ வயது ஏந்தி வாழ்க்கையின் சக்கரத்தில் சுழன்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் சொல்வதை கேட்கவோ, உங்களுக்கு ஓட்டு போடவோ நேரம் இல்லை. துடிப்பு மிக்க நடு,கிழ வயது ரசிகர்கள் கூட்டம் மிக மிக மிக கம்மி. ஆகவே நாம இன்னும் தமிழ்நாட்ல பாப்புலர் ன்னு நெனச்சு உள்ள குதிச்சு அசிங்கபட்டுக்க வேண்டாம். இல்லாத ஒன்ன இருக்கிற மாறி காமிச்சுகிட்டே வாழ்க்கையை ஓட்டிகோங்க. உண்மை தெரிஞ்சு போய்டும், செம அசிங்கமாயடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X