குடிக்கு அடிமையாகாதீங்க; குடும்பத்துக்காக உழையுங்க!

Updated : நவ 18, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (28) | |
Advertisement
நெல்லுார் : ஆந்திராவில் உள்ள கிராமத்தை தத்தெடுத்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அவர்களிடையே, ''குடிப் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்; குடும்பத்துக்காக உழையுங்கள்,'' என, அறிவுறுத்தினார்.கிராம தத்தெடுப்பு: 'ஒவ்வொரு எம்.பி., யும், ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு
குடிக்கு அடிமையாகாதீங்க; குடும்பத்துக்காக உழையுங்க!

நெல்லுார் : ஆந்திராவில் உள்ள கிராமத்தை தத்தெடுத்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அவர்களிடையே, ''குடிப் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்; குடும்பத்துக்காக உழையுங்கள்,'' என, அறிவுறுத்தினார்.


கிராம தத்தெடுப்பு:

'ஒவ்வொரு எம்.பி., யும், ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, எம்.பி.,க்களில் பெரும்பாலானோர், கிராமங்களை தத்தெடுக்க துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சச்சின், ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் உள்ள புத்தம் ராஜூ கண்டிரிகா என்ற கிராமத்தை தத்தெடுப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, சச்சின், அந்த கிராமத்துக்கு நேற்று வந்தார். அந்த கிராமத்தைச் சேர்ந்த, 400க்கும் அதிகமானோர், மலர்களை துாவியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் அவரை வரவேற்றனர்.எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.97 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அடிக்கல்லையும் சச்சின் நாட்டினார்.


சொந்த பணம்:

நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, அந்த கிராம மக்களுடன் ஜாலியாக பேசினார்; அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பின், அங்குள்ள குளத்தில் மீன்களை வளர்ப்பதற்கான திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

கிராம மக்களிடையே அவர் பேசியதாவது:இந்த கிராமத்தை முறைப்படி தத்தெடுத்துள்ளேன். அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு, தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியுடன், என் சொந்த பணத்தையும் செலவிடுவேன்.இங்குள்ள மக்கள், தயவு செய்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம். குடும்பத்துக்காக உழைப்பதுடன், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும்.


நாட்டின் முதுகெலும்பு:

பெண்கள் தான், நம் நாட்டின் முதுகெலும்பு. தங்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு உண்டு. இந்த கிராமத்தில், உயர்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை, பெண்களுக்கான தொழில் பயிற்சி மையம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வேன்.பெண்கள், குடும்பத்துக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். அதற்காகவே, எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை, என் தாய்க்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தேன். இங்குள்ள அனைத்து பெண்களுமே, என் தாயை போன்றவர்கள் தான். இவர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
17-நவ-201422:10:31 IST Report Abuse
g.s,rajan ஆனா ஒண்ணு சச்சின் இப்போ குடிமகன்கள் எல்லாம் குடிக்கிறதுக்காகவே உழைக்கிறாங்க
Rate this:
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-நவ-201415:32:43 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ குடிக்கு அடிமையாகாதீங்க குடும்பத்துக்காக உழையுங்க //// அரசே மது விற்கும், கழகங்களின் ஆட்சியில் தமிழகத்தில் வந்து சொல்ல துணிவுண்டா இந்த சச்சினுக்கு ????
Rate this:
Cancel
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-நவ-201414:31:48 IST Report Abuse
Vamanan Nair தமிழ் நாட்டுல இப்படி சொல்லி விடாதீங்க. அரசு வருமானத்துக்கு வேட்டு வச்சிட்டீங்க என்று ஆளும் கட்சி உங்களை இங்கே வர விடாம ஆக்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X