பொது செய்தி

இந்தியா

நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு

Updated : நவ 17, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : நுகர்வோருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், இப்போதுள்ள நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கவும், திருப்தி இல்லாத வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரவும், புதிய வழிமுறைகள் விரைவில் எளிதாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல
நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு

புதுடில்லி : நுகர்வோருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், இப்போதுள்ள நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கவும், திருப்தி இல்லாத வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரவும், புதிய வழிமுறைகள் விரைவில் எளிதாக உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல துறைகளிலும், புதிய திட்டங்களையும், அதிரடி மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில், நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர உள்ளது.
லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, நுகர்வோர் விவகாரத்துறை, நுகர்வோர் துறையில் பல மாற்றங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ல் மாற்றம் செய்ய, புதிய வரைவு மசோதாவை அத்துறை தயாரித்துள்ளது.அந்த வரைவு மசோதா, பிற துறைகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இறுதியாக, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள, நுகர்வோருக்கு பயனளிக்கும் முக்கிய அம்சங்களாவன:
*ஆன் - லைன் ஷாப்பிங், இ - காமர்ஸ் எனப்படும், இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
*நுகர்வோரின் புகார்கள், நேரடியாகவும், இணையம் மூலமும் பெற வசதி செய்யப்படும். புகார் மீது, 21 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
*நுகர்வோர் புகார் முறையீட்டிற்கு, உயர் அளவிலான, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். இது, புலனாய்வு அமைப்பு போல செயல்பட்டு, மோசடி மற்றும் வில்லங்க நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும்.
*இந்த புலனாய்வு அமைப்பு, தானாக புகார்களை விசாரிக்கும். ஒருவருக்கு மேற்பட்ட நுகர்வோர் கூறும் புகார்களை கூட விசாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், தண்டனை வழங்கும்.
*பாதிக்கப்பட்ட நுகர்வோர் வழக்கு தொடர, நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள ஊரில் தான், வழக்கு தொடர முடியும். இப்போது அந்த முறை மாற்றப்பட உள்ளது. நுகர்வோர் எந்த ஊரில் உள்ளாரோ, அந்த ஊரின் நீதிமன்றங்களில், நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர முடியும்.
*வழக்கு தொடரும் பட்சத்தில், வழக்கறிஞர்கள் வைத்துக் கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்கொண்ட தொகைக்கு மட்டும் தான், வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். அதை விட குறைந்த தொகைக்கு வழக்கறிஞர் இல்லாமல், நுகர்வோரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்.
*தேவைப்பட்டால், இருதரப்பினரும் மத்தியஸ்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அந்த வரைவு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபலமாகி வரும் இணையதள வர்த்தகம்:

சமீப காலமாக, இணையதளம் மூலம் நடைபெறும் வர்த்தகம் பிரபலம் அடைந்துள்ளது. போதிய நேரமின்மை, நகரின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதில் உள்ள இடர்பாடுகள் போன்றவற்றால், இந்த இணையம் மூலமான வர்த்தகத்திற்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும், இணையம் வழியான வர்த்தகத்தில், நிமிடத்துக்கு நிமிடம், பொருட்களின் விலை மாறுகிறது. வீட்டில் இருந்து படியே, தேவையான பொருளை, இணையம் மூலமாக பதிவு செய்தால், வீட்டுக்கே பொருள் வந்து விடுகிறது. பொருள் வரும் நேரத்தைக் கூட, குறுந்தகவல் மூலம் தெரிவிக்கின்றனர்.வீட்டுக்குப் பொருள் வந்ததும், பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு வசதிகள், இணைய வர்த்தகத்தில் இருந்தாலும், நுகர்வோர் பாதுகாப்பு என்பது முற்றிலும் இல்லை. அதனால், இணைய வர்த்தகம் தொடர்பாக, நுகர்வோர் சட்டத்தில் தனிப் பிரிவை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


இடைத்தரகர் மூலம் விற்பனை:

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர், சடகோபன் கூறியதாவது:இணையதளம் வழி வர்த்தகத்தில், நுகர்வோர் நலனைப் பாதுகாக்க, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில், தெளிவான விதிமுறைகள் இல்லை. வீட்டுக்குப் பொருள் வந்தாலும், பணம் கொடுத்த பின்னரே, பொருள் உள்ள பெட்டியை கொடுப்பர்.பெட்டியை திறந்து பார்த்த பின், பணத்தை கொடுக்க முடியாது. பெட்டியில், ஆர்டர் கொடுத்த பொருள் தான் இருக்கிறதா; நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறியாமலேயே, பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், இணையதளம் வழியாக, ஒரு நிறுவனத்தின் பொருளை விற்கும் போது, அந்த நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கும் தொடர்பில்லை. இடைத்தரகரே விற்பனை செய்கிறார்.இதனால், அவருக்கு பொருளின் தரம் குறித்து தெரிவதில்லை. அவர், பொருளை விற்கும் ஒரு நபராக மட்டுமே இருக்கிறார். எனவே, இணைய வழி வர்த்தகத்தில், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்க, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில், புதிய பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sardar papparayudu - nasik,இந்தியா
17-நவ-201422:33:12 IST Report Abuse
sardar papparayudu கடந்த 20 வருடங்களாக கார் ,கம்பூட்டர் தொடங்கி அனைத்தும் யூஸ் அண்ட் த்ரோ ரகம். விலைகளும் மிக மலிவு . எனவே நுகர்வோர் எதிர்பார்ப்பது பேராசை என்பர் வர்த்தகர்கள் .
Rate this:
Cancel
SIVA.THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-நவ-201421:33:45 IST Report Abuse
SIVA.THIYAGARAJAN மாவட்ட நுகர்வோர் குறை தீர்மன்றங்களில் வருடகணக்கில் வழக்கை முடிக்காமல் காலம் கடத்தி விட்டு செல்லும் நீதிபதிகள் நிலையை போக்க கால வரையரையில் வழக்கைமுடிக்க ஆணை பிறப்பித்தால் நுகர்வோருக்கு மிக நலமாய் இருக்கும்.. உரியகாலவரையில் நுகர்வோருக்கு பயன் கிட்டல ...நீதிமன்றம் போல் வருடகணக்கில் தேங்கி இருப்பது பயனில்லை...இதற்கும் வழியேற்பட செய்தால் நல்லது.
Rate this:
Cancel
SIVA.THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-நவ-201421:25:21 IST Report Abuse
SIVA.THIYAGARAJAN நுகர்வோர் சட்டதிருத்தம் வரவேற்க கூடிய அம்சமாகும். மாவட்ட குறை தீர் மன்றங்களில் உறுப்பினர் இருவர் ( ஆண்-1 & பெண்-1 ) நீதிபதி ஒருவர். இவர்களில் நீதிபதி இடத்தில் ஓய்வு பெற்றவரை நியமிக்கப்படுகிறது. அவர் உரிய காலத்தில் தீர்வு வழங்காது காலம் கடத்தி ஏன் எதிரி (கவுன்டர் ) அறிவிப்பை பெற்றுக்கொண்டு பல ஆண்டாக யாதொரு பதிலையும் அளிக்காத போது வெறுமனே இருந்து காலம் கழித்து செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு விதிமுறை அளிக்கவேண்டும். மேலும் மூன்று புகார் நகல் பெற்றுக்கொண்டு நீதிபதி ஒருவரே வழக்கு கட்டை பார்க்கும் போதுஉறுப்பினர் வெறுமனே பேசாமல் அமர்ந்து விட்டு எழுந்து செல்லும்போது உறுப்பினர்களுக்கும் சேர்த்து நகல்பெறப்படுவது எதற்கு.....ஒரே கட்டுதான் நடவடிக்கையில் உள்ளது. மூவரும் ஒன்றிலே கையொப்பம் இடுகின்றனர்...மற்ற இருநகல் உபரியாக உள்ளபோது ஏன் மூன்று நகல்................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X