கறுப்பு பண விவகாரத்தில் மோடி யோசனை ஏற்றது ஜி - 20

Updated : நவ 18, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (31)
Advertisement
பிரிஸ்பேன்:'கறுப்பு பணத்தை மீட்பதற்கான நாடுகளின் முயற்சிக்கு, ஜி - 20 உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; அந்த முயற்சிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.விசாரணை குழு:'வெளிப்படையான நடைமுறை பின்பற்றப் படும்; தகவல்கள் பரிமாற்றம் தானாக மேற்கொள்ள ஏதுவான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு கூடவுள்ள, அடுத்த, ஜி -
கறுப்பு பண விவகாரத்தில்  மோடி யோசனை ஏற்றது ஜி - 20

பிரிஸ்பேன்:'கறுப்பு பணத்தை மீட்பதற்கான நாடுகளின் முயற்சிக்கு, ஜி - 20 உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; அந்த முயற்சிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.


விசாரணை குழு:

'வெளிப்படையான நடைமுறை பின்பற்றப் படும்; தகவல்கள் பரிமாற்றம் தானாக மேற்கொள்ள ஏதுவான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு கூடவுள்ள, அடுத்த, ஜி - 20 மாநாட்டில் மேற்கொள்ளப்படும்' என, ஜி - 20 மாநாட்டின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில வெளிநாடு களில் இந்தியர்கள் சிலர் பதுக்கி உள்ளனர். அந்த பணத்தை மீட்டு, நாட்டுக்கு கொண்டு வருவோம் என, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி அறிவித்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், கறுப்பு பண விவகாரம் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைத்தார்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இருபது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின், ஜி - 20 மாநாடு, கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.அதில் பேசிய, பிரதமர் மோடி, கறுப்பு பண மீட்பு குறித்து, ஜி - 20 நாடுகள் தெளிவான சட்டங்கள் கொண்டிருக்க வேண்டும். அதற்காக போராடும் உறுப்பு நாடுகளுக்கு உதவும் வகையில், வரிச் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்; இதற்கு அனைத்து நாடுகளும், ஒத்துழைக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், பன்னாட்டு நிறுவனங்கள், வரி ஏய்ப்பு முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, தேவையான சட்டங்கள் அவசியம்; மின் உற்பத்தி யின் போது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், மோடி முன்வைத்தார்.

ஜி - 20 மாநாடு, நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், மோடியின் முக்கிய கோரிக்கையான, கறுப்பு பண விவகாரத்திற்கு ஒத்துழைப்பது என்ற உறுதிமொழி காணப்பட்டது.குறிப்பாக, கறுப்பு பண விவகாரத்தில் மோடியின் ஆலோசனைகளுக்கு வரவேற்பு தெரிவித்த ஜி - 20, இதுகுறித்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டில், முடிவெடுக்கப்படும் என, தெரிவித்தது.


கோரிக்கை ஏற்பு:

கறுப்பு பண மீட்பு விவகாரத்தில், வெளிப்படையான அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்ற, மோடியின் கோரிக்கை, மாநாட்டின் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் வலியுறுத்தியதின் படி, இறுதி அறிக்கையிலும் இடம்பெற்றது.இது, மோடியின் கோரிக்கையை, ஜி - 20 மாநாடு ஏற்றுக் கொண்டதாக கருதப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-நவ-201423:49:46 IST Report Abuse
மதுரை விருமாண்டி "இருக்கு, ஆனா சொல்ல மாட்டோம்", என்கிற ஐடியா தானே..நல்லா வருவீங்கடா..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-நவ-201417:58:30 IST Report Abuse
Malick Raja மோடி அவர்கள் திரும்பிய உடன் இந்தியன் ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் கிடைக்கும்.. 100 நாட்களில் இதை செய்வதாக தேர்தல் வாக்குறுதி ...... கருப்பு பணம் வெளிக்கொண்டுவருவோம்.. காங்கிரஸ் பட்டியல் வெளியிடாமல் இருந்ததை வெளியிட்டார்கள் அதில் 250 பேருக்கு கணக்கில் பணமே இல்லை.. பின்னர் கொஞ்ச பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.. 675 பெயர்கள் கொண்ட பட்டியலில் கிடைக்கப்போவது மட்டும் " 0" நிச்சயம்.. மோடி அவர்கள் சொல்வதெல்லாம் நடக்கப்போவதில்லை.. நடந்தாலும் பயன் இருப்பது அரிது. எல்லாம் நாடகம்.. பிரதமரின் வெளிநாட்டு செலவுகள் போட்டியில் முதல் நிலை மோடியே.. வெளிநாட்டு பயணங்கள் சென்றதில் முதல் தகுதி... இந்தியில் பேசிய ஒரே பிரதமர்... ஆங்கில புலமை இல்லா முதல் பிரதமர்...ஆடம்பர செலவுகளில் முதல் நிலை வகிப்பவர் திருவாளர்... மோடி அவர்கள். இந்த தகுதிகள் இதற்க்கு முன் இருந்த பிரதமர்களுக்கு இல்லை... ஜெய் ஹிந்த்..
Rate this:
Cancel
Dynamo - Leiden,நெதர்லாந்து
17-நவ-201413:55:04 IST Report Abuse
Dynamo வரவர மோடிஜி பற்றிய செய்திகள், தமிழ் சிங்கம் மற்றும் ஜெயசேகர் கருத்து போல் உள்ளது...
Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
17-நவ-201423:49:09 IST Report Abuse
கைப்புள்ளஹஹஹஹா நல்லா சொன்னீங்க போங்க....
Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-நவ-201400:54:32 IST Report Abuse
மதுரை விருமாண்டிநச்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X