உறவுகளை இணைத்த தினமலர் 51 ஆண்டுக்கு பின் ஆனந்த கண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறவுகளை இணைத்த தினமலர் 51 ஆண்டுக்கு பின் ஆனந்த கண்ணீர்

Added : நவ 17, 2014 | கருத்துகள் (5)
Share
சிவகங்கை:கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் உறவுகளை விட்டு பிரிந்த முதியவரின் நிலை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அறிந்த உறவினர்கள் சிவகங்கை மருத்துவமனையில் இருந்தவரை நேற்று சந்தித்தனர்.காளையார்கோவிலில் மயங்கிய நிலையில் கிடந்த 78 வயது முதியவரை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு
 உறவுகளை இணைத்த தினமலர் 51 ஆண்டுக்கு பின் ஆனந்த கண்ணீர்

சிவகங்கை:கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் உறவுகளை விட்டு பிரிந்த முதியவரின் நிலை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை அறிந்த உறவினர்கள் சிவகங்கை மருத்துவமனையில் இருந்தவரை நேற்று சந்தித்தனர்.காளையார்கோவிலில் மயங்கிய நிலையில் கிடந்த 78 வயது முதியவரை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
நினைவு திரும்பிய பிறகு தனது பெயர் ராஜகோபால் என்றும் கம்பத்தில் உறவினர்கள் இருப்பதாகவும் 51 ஆண்டுகளுக்கு முன்பு உறவுகளை பிரிந்ததாகவும் தற்போது சேர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து, நவ.15 தினமலர் நாளிதழில் 'உறவுகளை தேடும் தொழிலாளி' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. கம்பம் நகரில் வசிக்கும் இவரது தம்பி நாராயணன், தங்கை பார்வதி, அவரது மகள் புவனேஸ்வரி, மாமா பாலசுப்பிரமணியன் ஆகியோர் இதை படித்துள்ளனர். இவர்கள் நேற்று சிவகங்கை வந்து முதியவரை சந்தித்தனர். கண்ணீர் மல்க தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
உறவினர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு இவரது குடும்பம் கூட்டு குடும்பமாக இருந்தது. இவரது தாய், தந்தை இருவரின் பெயருமே காமாட்சி. இவருடன் பிறந்தவர்கள் 10 பேர். திருமணம் ஆகாத கோபத்தில் வீட்டை விட்டு 1963 ல் வெளியேறினார். பல இடங்களில் அவரை தேடினோம். இந்த வேதனையில் ராஜகோபாலின் பெற்றோர் இறந்துவிட்டனர். இவர் ஆந்திரா சென்றுவிட்டு பின் சிவகங்கை வந்துள்ளார். கடந்த 50 ஆண்டுக்கு பின் அவரை கண்டறிய உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X