பொது செய்தி

இந்தியா

பறவைகளுக்காக குட்டைகளை பாதுகாக்கும் கிராமம்: வறண்ட பூமியில் மக்களின் கனிவு

Updated : நவ 21, 2014 | Added : நவ 21, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
உதய்பூர்: உள்ளூர் பறவைகளுக்கு மட்டுமின்றி, இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கும், போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் ஊரில் உள்ள குட்டைகளில் மீன்கள் பிடிக்க தடை விதித்துள்ளனர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர்.மீன் பிடிக்க கூடாது: பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் இருந்து, 40 கி.மீ., தொலைவில், மனார் கிராமம் உள்ளது. இங்கு இரண்டு
பறவைகளுக்காக குட்டைகளை பாதுகாக்கும் கிராமம்: வறண்ட பூமியில் மக்களின் கனிவு

உதய்பூர்: உள்ளூர் பறவைகளுக்கு மட்டுமின்றி, இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கும், போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் ஊரில் உள்ள குட்டைகளில் மீன்கள் பிடிக்க தடை விதித்துள்ளனர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர்.


மீன் பிடிக்க கூடாது:

பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் இருந்து, 40 கி.மீ., தொலைவில், மனார் கிராமம் உள்ளது. இங்கு இரண்டு குட்டைகள் உள்ளன. இந்த குட்டைகளில், உள்ளூர்வாசிகள் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என்பதோடு, குட்டையை சீர்குலைக்கும் வேறு எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




ஏகமனதாக முடிவு:

பறவைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மனார் கிராமத்தினர், உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, வெளியூர் பறவைகளும் குட்டைகளில் உள்ள மீன்களையும், இதர நீர்வாழ் உயிரினங்களையும் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காக, ஏகமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பறவை வேட்டையாடி சாப்பிட நாட்டில் பலர் அலையும், பறவைகளை பாதுகாக்க, ஒரு கிராமத்தினர் முற்பட்டுள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.




மீன்களை கொல்வதை விரும்பவில்லை:

மனார் கிராமத்தின் தலைவர் ஆன்கர் மனாரியா கூறியதாவது: எங்கள் ஊரில் உள்ள குட்டைகளுக்கு குளிர்காலத்தில், வெளியூர்களில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன. அவற்றுக்கு எந்த விதமான தீங்கும் நேரக்கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், எங்கள் ஊர் குட்டைகளில் மீன்பிடிக்க, மீன்வளத்துறையினர் யாருக்கும் ஒப்பந்தம் வழங்குவதில்லை. மேலும், மீன்கள் மனிதர்களால் கொல்லப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு, மனாரியா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
21-நவ-201414:43:40 IST Report Abuse
Yuvi நற்குணம் கொண்ட கிராம மக்கள்.
Rate this:
Cancel
Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்
21-நவ-201414:19:17 IST Report Abuse
Thailam Govindarasu என் ஊர் மக்கள் எப்பொழுது விழிப்படைவார்கள் என்ற ஏக்கத்தில் இருக்கிறேன்.
Rate this:
Cancel
Pulavar Komagal - Kualalampur,மலேஷியா
21-நவ-201413:40:16 IST Report Abuse
Pulavar Komagal பறவைகள் மீது பாசம் வைத்துள்ள மானார் கிராம வாசிகளுக்கு என் பாராட்டுகள், மனிதனை மனிதனே கொல்லும் இக்காலத்தில் ஒரு கிராமமே பறவைகளுக்காக இரக்கம் காட்டுவது பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X