ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்:டிச.,6 ல் திண்டுக்கல்லில் துவக்கம்

Added : நவ 21, 2014 | |
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு டிச., 6 முதல் டிச., 13 வரை ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: "திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் டிச.,6 முதல் டிச.,13 வரை ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு டிச., 6 முதல் டிச., 13 வரை ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: "திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் டிச.,6 முதல் டிச.,13 வரை ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் ட்ரேஸ்ட்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்குபெறலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குறிப்பிடப்பட்ட நாளில் காலை 5:30 மணிக்கு ஆஜாராக வேண்டும். வேலை வாங்கி தருவதாக இடைத்தரகர்கள் அணுகினால் உடனடியாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். முகாம் நடக்கும் இடத்திற்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு தீதீதீ.டீணிடிணடிணஞீடிச்ணச்ணூட்தூ.ணடிஞி.டிண என்ற இணையதள முகவரி அல்லது கோவையில் உள்ள ராணுவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X